பட்டாம்பூச்சி.....பட...பட...

தை பிறந்தால் வழி பிறக்கும்! பழமொழி கேள்வி தான் பட்டுருக்கேன், ஆனா இன்னிக்கு உண்மையாவே வழி பிறந்துடுச்சு தொடர்ந்து எழுத... ஆனா என்னன்னு ஆரம்பிக்க? எப்படி ஆரம்பிக்க? எங்கிருந்து ஆரம்பிக்க? ஒன்னுமே தெரியல!! ஆரம்பமே படபடப்பா இருக்கே !!

அண்ணாவுடைய மெயில் பார்த்ததில் இருந்து இப்படி தான் டென்ஷன், பேரு வேணுமே வலைபதிவுக்கு...

ஏங்க அறுசுவைல வலைப்பதிவுக்கு ஒரு பேரு வேனும் சொல்லுங்களேன்,........ என்ன ஒரு பதிலும் சொல்ல மாட்டிக்கிறாரே??? சரி நம்மளே ஏதாவது யோ...சிப்....போம்...................................யோசிக்கிறேன்!!

இது நல்லா இருக்குமா `நல்லதோர் வீணை செய்தேன்` இல்ல வேணாம், இது பாரதி வரிகள்!! வேற ஏதாவது வித்தியாசமா?

கனவே கலையாதே இது நல்லா இருக்கா? என்ன படம் பேரு வைக்கற?, மனசு கேக்குது!

ம்ம்ம்ம் ஓ.கே கனவுகளின் விடியல் அல்லது கவிதைகளின் விடியல்......ஐ இது நல்லா இருக்கே !!

ஏங்க கனவுகளின் விடியல் நல்லா இருக்கா வலைபதிவுக்கு பேரு?

இல்லை எனக்கு பிடிக்கல.... வேற ஏதாவது யோசி!!

அட போங்கங்க நானே ஒரு மணிநேரமா யோசிச்சேன், இப்படி நல்லா இல்லன்னு சொல்லிட்டீங்க, நீங்களே ஏதாவது சொல்லுங்களேன்...

``பட்டாம் பூச்சி பட பட``

என்னது பட்டாம் பூச்சி பட படவா இது என்னாது? பேரா? ஆனா முழுமையா தெரியலயே, வேற எதாவது சொல்லுங்க ....

தேன் சிட்டு பிடிச்சா வைச்சுக்கோ!! இல்லாட்டி நீயே யோசி ஆளவிடு!!

பட்டாம்பூச்சி பட பட இது நல்லா இருக்க மாதிரி தான் தெரியுது, இதையே வச்சுக்கவா?

பிடிச்சா வைச்சுக்கோ, ஆனா இதுக்கு ராயல்ட்டி வேனும்!!

என்னங்க இப்படி சொல்றீங்க? அச்சச்சோ நீங்க பெரிய மேனேஜ்மென்ட் புக் எதும் படிக்க சொல்லிட்டா என்ன பன்ன? என்னால முடியாது, அதுக்கு பேரு தேடறதே ஈஸிதான்!! நான் வேற பேரே யோசிச்சுகிறேன்...

பல பேரை யோசிச்சே தூங்கியாச்சு.... காலைல சமைக்கும் போது கூட பேரு பல யோசிச்சாச்சு, எத்தனை பேரு யோசிச்சாலும் இந்த பட்டாம்பூச்சி மட்டும் மனசுக்குள்ள பட படன்னு சுத்துது!

பையனோட ஸ்கூல் பஸ் கூட வந்துடுச்சு, இன்னும் பேரு மட்டும் கிடைக்க மாட்டிக்குது, சரி கொஞ்ச நேரம் ஜில்லுன்னு காத்தாவது வாங்கலாம் ஏதாவது தோணும்....

ம்ம்ம்ம்ம் வாவ், கீழ கடைல இருந்து வடை வாசம். ஏற்கனவே பசிக்குது, இப்படி ஊருக்கே வாசம் வர மாதிரியா வடைய சுடுவாங்க??!!! அறுசுவை சம்மந்தமா யோசிச்சா என்ன? பசிக்கறதால இப்படி யோசிக்கறேனோ?

சரி ரெம்ப பசிக்குது முதல்ல ஒரு கப் காபி அப்பறம் தான் எல்லாம் ....
கிச்சனுக்கு காபி போட போனா அந்த பக்கம் பேக்கரில இருந்து பிரெட் வாசம்... அட இத்தனை நாள் இந்த வாசத்தையெல்லாம் ரசிச்சதே இல்லையே இன்னிக்கு என்னதான் ஆச்சு??

அய்யோ.... டா!! காபி கூட குடிச்சாச்சு இன்னும் பேரு கிடைக்க மாட்டிக்குது, ஒரு பேரு யோசிக்கறதுக்குள்ள எத்தனை படபடப்பு!! இன்னும் அதுக்கு அப்பறம் எவ்வளவு இருக்கு?? ஸ்ஸ்ஸ் படபடப்பா? இது தானே பேருலயும் வருது `பட பட`... நல்லா தான் இருக்கு!! நான் தான் தேவையே இல்லாத யோசிக்கறனோ??

ஓ.கே பேரு பட்டாம்பூச்சி பட பட ன்னே வச்சுக்கலாம்...

அப்பறம் உள்ள எழுத அதுக்கு தலைப்புன்னு யோசிக்கும் போதே மனசுக்குள்ள இருந்து ஒரு குரல் ஏய்! திரும்பவும் தலைப்புன்னு யோசிக்க உட்காந்த அடிவிழும், நீ பேரு யோசிச்ச அழகே கதை மாதிரிதான் இருக்கு, அதையே முதல் தலைப்பா எழுது.... மீண்டும் சிந்தனை தான்... ஓ.கே யோசிச்சு குழம்பிக்கிட்டே இருக்கறதுக்கு இப்படியாவது ஆரம்பிக்கலாம்... எல்லாமே ஒரே நாளில் எழுதிட முடியுமா என்ன? கொஞ்ச கொஞ்சமா தான் பழக முடியும்!!

``பட்டாம்பூச்சி பட பட...`` படபடக்கலாமா??

5
Average: 4.8 (5 votes)

Comments

அன்பு ரேணுகா,

உங்க பதிவைப் படிக்கும்போதே, பிண்ணனியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேன் வழியும் குரலில், ஓ பட்டர்ஃப்ளை, பட்டர்ஃப்ளை என்று பாட ஆரம்பிச்சுட்டார்:)

தேன் மலர் பூஞ்சோலையில் பட்டாம்பூச்சிகள் வட்டமிடும் தேனருந்த.

உங்கள் எண்ண மலர் சோலையில் தோழிகள் வருவார்கள் கருத்துக்களை ரசிக்க.

பூக்க ஆரம்பிக்கட்டும் வண்ண வண்ணமாக எண்ணங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

முதலில் உங்களின் வலைப் பதிவிற்க்கு எனது வாழ்த்துக்கள் ரேணு...:)
பட்டாம்பூச்சி பட பட.. தலைப்பு தேர்ந்தெடுக்க நீங்க பட்ட பாட்ட சூப்பரா உங்களுக்கே உரியா பாணியில அட்டகாசமா சொல்லிட்டீங்க.. எனக்கும் கூட இந்த பொண்ணு கடைசியா வலைப் பதிவுக்கு பேரு வைப்பாங்காளான்னு மனசுகுள்ள பட படன்னு அடிச்சுக்குச்சு...;)
//ம்ம்ம்ம்ம் வாவ், கீழ கடைல இருந்து வடை வாசம்.ஏற்கனவே பசிக்குது, இப்படி ஊருக்கே வாசம் வர மாதிரியா வடைய சுடுவாங்க??!!// விட்டா வாசம் வராத வடை தான் சுடனும்னு தீர்ப்பு சொல்லுவாங்க போல..;)
//சரி ரெம்ப பசிக்குது முதல்ல ஒரு கப் காபி அப்பறம் தான் எல்லாம் ....
கிச்சனுக்கு காபி போட போனா அந்த பக்கம் பேக்கரில இருந்து பிரெட் வாசம்...அட இத்தனை நாள் இந்த வாசத்தையெல்லாம் ரசிச்சதே இல்லையே இன்னிக்கு என்னதான் ஆச்சு??// ஆஹா , நல்லாத் தான் வாசம் பிடிக்கிறீங்கப்பா...;)
//அப்பறம் உள்ள எழுத அதுக்கு தலைப்புன்னு யோசிக்கும் போதே மனசுக்குள்ள இருந்து ஒரு குரல் ஏய்! திரும்பவும் தலைப்புன்னு யோசிக்க உட்காந்த அடிவிழும்,// அப்புறம் அடி விழும்னு சொன்னது நம்ப அண்ணா வாய்ஸ் தானே...;)
// கொஞ்ச கொஞ்சமா தான் பழக முடியும்!!// பட படக்கும் பட்டம்பூச்சியாய் வாங்க ரேணு.. நாங்களும் பட படக்கும் இதயத்தோட பழக ஆவலா இருக்கோம்..:) பட்டாம் பூச்சிக்கு என் பாராட்டுக்கள்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தேன்க் யூ சீதா அம்மா!! ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்த்தை பெறும் போது அவ்வளவு சந்தோஷம், ஐ!! SPB இன்னிக்கி எனக்காகவே பாட்டுபாடரார்..::) தேன்க் யூ...நானும் வண்ணங்களோடு பூக்கள் தொடுப்பேன் என்றே நம்புகிறேன்!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வாழ்த்துக்கு மிக்க நன்றி சுமி!! என்னோட பட்டாம்பூச்சி உங்களையும் பட படக்க வைச்சுடுச்சு, உங்க பதிவை பார்த்து எனக்கு சிரிப்பு வந்துடுச்சுப்பா, அழகான வரவேற்ப்பு, ரெம்ப நன்றி...மீண்டும் கிராப்ட் ஒர்க் தான் ஆரம்பிக்க வந்தேன், ஆனா கூட எழுதற ஆசையும் வந்துடுச்சு..நாளைல இருந்து தான் மற்ற பதிவுகளையும் படிக்கனும், இன்னிக்கு எப்படியும் பதிவும் போட்டா நாள் மறக்காதுன்னு போட்டேன்.. அதான் அடுத்தது யோசிக்கும் போதே வாய்ஸ் வந்து என்னை மிரட்டிடுச்சு.... மீண்டும் நன்றிகள் பல..

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அட்டகாசமா இருக்கு உங்க வலைக்கு பேரும் அதுக்கு நிங்க பட பட்த்ததும் சுப்பர் ரா சொல்லிட்டிங்க. இனி உங்க எழுத்தை ரசிக்க நாங்களூம் பட பட

Be simple be sample

வலைப்பதிவு பெயரே "பட்டாம்பூச்சி படபட" ரொம்ப நல்லா இருக்குங்க, அதிலும் பெயர் யோசித்ததையே முதல் பதிவா கொடுத்து அசத்திட்டீங்க, :-)
வாழ்த்துக்கள்ங்க

நட்புடன்
குணா

தேன்க் யூப்பா , ரெம்ப சந்தோஷமா இருக்கு, என்னோட பட படப்பு எல்லாத்துக்கும் ஒட்டிக்கிட்டத நினைச்சு, கொஞ்ச கொஞ்சமா பட படக்கறேன், சரியா!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றிப்பா!! அப்பறம் இந்த மேடம் எல்லாம் வேனாமே!! ஆபிஸ் ரூம்குல்ல இருக்க மாதிரி இருக்கு:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா ரொம்ப அருமையா சிரிப்போட பேர் செலக்ட் பன்னத சொல்லியிருக்கீங்க படிச்சுட்டு சிரிப்பு தாங்க முடியலங்க பட்டாம் பூச்சி இன்னும் பட படக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேணுகா வலைப்பக்கத்தின் பெயர் அழகா, வித்யாசமா இருக்கு :)
பெயருக்கே இவ்வளவு தூரம் யோசிக்கும் நீங்கள் நிச்சயம் சுவையான கருத்துக்களை வழங்குவீர்கள் என நினைக்கிறேன். படிக்க காத்திருக்கிறேன் எல்லோரையும் போல :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் சுவர்ணா , உங்களை சிரிக்க வைச்சத நினைச்சா சந்தோஷமா இருக்கு:)உங்க வாழ்த்துக்கு நன்றிப்பா...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அருட்செல்வி என் மேல அவ்வளவு நம்பிக்கையா? காப்பாத்த முயற்சி செய்கிறேன்!! ரெம்ப நன்றி....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு இதை வாசித்து முடிப்பதற்குள் எனக்கு பட படப்பே வந்திடுச்சு.சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

addadaa aarambamae aaarumaiya irukae....!thoodaruingal

வாழ்த்துக்கள் ரேணு! தலைப்பை தேர்ந்தெடுத்ததை சுவாரசியமா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் வலைப்பகுதிக்கு முதல்ல என் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு வந்த நேரம் வனி ஊரில் இல்லை, அதனால் மிஸ் பண்ணிட்டேன். :) இருந்தாலும் எங்காள் சீதா முதல் வாழ்த்து சொல்லியிருக்கிறதால நானும் சொன்னதாக தான் அர்த்தமாக்கும் ;) [அப்படி தானே சீதா??]. படிச்சதுலயே எனக்கு படபடப்பா இருக்கு... இப்படிலாம் ஏன் வனி நீ யோசிக்கவே மாட்டங்கறன்னு இப்ப நான் யோசிக்கறேன். கலக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா அக்கா, உங்க பதிவு கண்டு பயங்கர சந்தோஷம்,பட படன்னு பேரு வச்சதாலையே எல்லோருக்கும் படபடப்பா இருக்கா?

அமுதா உங்கள் வார்த்தையில் இருக்க உற்சாகம் என்னையும் தொத்திகிச்சு, நன்றிப்பா!!

கவி எப்படி இருக்கீங்க? ஆளை பார்க்கவே முடியல, பிஸியா? தேன்க் யூ கவி உங்கள் வாழ்த்துக்கு.....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி ஊருக்கு போயிட்டு வந்தாச்சா? நான் பொங்கல் விடுமுறையில் பதிவு போட்டுட்டேன் நீங்க என்ன பன்னுவீங்க, ? இப்ப எதுக்கு சீதா அம்மாவ இழுக்கறீங்க, உங்களுக்கும் படபடப்பா, ஏன்பா எல்லாரும் இப்படி சொல்றீங்க,எனக்கு படபடப்பா இருக்கு, என்ன வனி இப்படி சொல்லிட்டீங்க, நீங்க எங்க உங்க எழுத்து எங்க வனி போல கலக்க முடியுமா? ஊர் முழுக்க சுத்தி பல விஷயம் தெரிஞ்சவங்க இப்படி பேசலாமா?
தேன்க்யூ வனி ....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா