என் ப்ரிய தோழி

உன்னையன்றி
யாருமில்லை
வெண்ணிலாவே!!

எனக்கு உற்ற தோழி
நீ மட்டுமே
வெண்ணிலாவே!!

என் கண் மறைந்து
போனதேனடி
வெண்ணிலாவே!!

என் கவிதைகள்
சிறகிழந்தன
வெண்ணிலாவே!!

தனிமை தீவில்
தவமிருக்கிறேன்
வெண்ணிலாவே!!

தையல் நெஞ்சம்
தவித்திருக்குதடி
வெண்ணிலாவே!!

உன்னோடு கதை பேச
காத்திருக்கிறேன்
வெண்ணிலாவே!!

உன்னுயிர்த் தோழியை
வாட்டாது வந்துவிடு
வெண்ணிலாவே!!

பொங்கல் திருநாளின் மகிழ்ச்சி என்றும் உங்கள் வாழ்வில் நிறைந்திருக்கட்டும்.

அறுசுவை அன்புள்ளங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
நித்திலா

5
Average: 4.2 (5 votes)

Comments

அன்பு நித்திலா,

இதோ நாளைக்கு பௌர்ணமி வந்துட்டே இருக்கு, உங்க தனிமையைப் போக்க,

அதிருக்கட்டும், இத்தனை அறுசுவை தோழிகள் இருக்கறப்ப, நீங்க இப்படி தனிமையைப் பற்றி நினைக்கலாமோ?

அன்புடன்

சீதாலஷ்மி

தனிமையம் இனிமையாக்க வெண்னிலாவுக்கு அழைப்பா சூப்பர் நித்தி.

Be simple be sample

சீதாம்மாவை அன்புடன் வரவேற்கிறேன் :)

முதல் பதிவிற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிமா :)

ரொம்ப சந்தோஷமாயிருக்கு,மிகவும் நன்றிமா.

//அறுசுவை தோழிகள் இருக்கறப்ப, நீங்க இப்படி தனிமையைப் பற்றி நினைக்கலாமோ?//

இல்லைமா,எப்போதும் தனிமை எனக்கு இல்லை.

நிலவின் மீது கொண்ட நேசமன்றி வேறில்லை.

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி சீதாம்மா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் ரேவ்ஸ்,

//தனிமையம் இனிமையாக்க வெண்னிலாவுக்கு அழைப்பா சூப்பர்//

ரொம்ப சந்தோஷம்டா.தேங்க்ஸ்டா ரேவ்ஸ் :)

வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப நன்றிடா :)

அன்புடன்
நித்திலா

உங்கள் ப்ரியதோழிக்கு எழுதிய கவிதை மிக அருமையாக உள்ளது,
வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

கவிதை வரிகள் வழக்கம் போலவே மிக அழகு :) மேன்மேலும் கவிதை படைக்க
வாழ்த்துக்கள் நித்திலா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வெண்ணிலா எப்போதும் நித்திலாவோடு இருக்கும் தோழி

குணா,

//உங்கள் ப்ரியதோழிக்கு எழுதிய கவிதை மிக அருமையாக உள்ளது//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா :)

தங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மிகவும் நன்றி குணா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் அருள்,

தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது,மிகவும் நன்றி

தோழி :)

//கவிதை வரிகள் வழக்கம் போலவே மிக அழகு//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி அருள் :)

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் எனது நன்றிகள் அருள் :)

அன்புடன்
நித்திலா

வாங்க நிக்கி :)

//வெண்ணிலா எப்போதும் நித்திலாவோடு இருக்கும்// தேங்க்ஸ்டா செல்லம் :)

உங்க பதிவு பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு,தேங்க்ஸ்டா நிக்கி :)

அன்புடன்
நித்திலா

கவிதை ரொம்ப அருமை நித்திலா,

தனிமை தீவில்
தவமிருக்கிறேன்
வெண்ணிலாவே!!

பிடிச்ச வரிகள் நித்திலா. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்

அருமையான கவிதை நித்திலா!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கவிதை வெகு அருமை நித்திலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் உமா,

உங்கள் வரவு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,மிகவும் நன்றி தோழி :)

//கவிதை ரொம்ப அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி உமா :)

பிடித்த வரிகளை குறிப்பிட்டு கூறியதற்கு மீண்டும் எனது நன்றிகள் தோழி.

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிமா :)

அன்புடன்
நித்திலா

பிந்து மேடம்,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :) :o

//அருமையான கவிதை// மிகவும் நன்றி மேடம் :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் கவி,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//கவிதை வெகு அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி கவி :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா