ரெக்கார்ட் அடுக்கு கேக் ட்ரேகள்

வைனைல் ரெக்கார்டுகள் மூன்று வித்தியாசமான அளவுகளில் கிடைக்கும். அவற்றைக் கொண்டு செய்த அடுக்கு கேக் ட்ரேகள் இவை.

அடிப்படை செய்முறை, ஏற்கனவே கைவினைப் பகுதியில் சாக்லெட் ட்ரே செய்முறையின் கீழே உள்ளது. http://www.arusuvai.com/tamil/node/19585

இம்முறை பட்டன்களுக்குப் பதில் இதற்கென உள்ள 'ஸ்டிக்கி டாட்ஸ்' ஒட்டி இருக்கிறேன். இவற்றை அடியில் வரும் தட்டின் கீழ் மட்டும் ஒட்டினால் போதும். இவற்றுக்குத் தேவையான பிடிகள் க்ராஃப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் கிடைக்கும். 'ஸ்டிக்கி டாட்ஸ்' க்ராஃப்ட் கடைகளிலும் ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கும். கூட ஒரு ஸ்க்ரூ ட்ரைவரும் தேவைப்படும்.

பயன்பாட்டின் பின் தட்டுகள் அனைத்தையும் பிரித்து சுத்தம் செய்துவிட்டு கைபிடிகள் அவற்றுக்கான ஸ்க்ரூ & வாஷர்களை ஒன்றாக ஒரு ஸ்னாப் லாக் பையில் போட்டு வைத்தால் சமையலறையில் அதிக இடம் பிடிக்காது.

கீறல் விழாமலிருக்க, ரெக்கார்ட் தட்டுகளின் நடுவே டிஷ்யூ அல்லது பபிள் ராப் போட்டு வைப்பது நல்லது. அனைத்தையும் ஒரே இடமாக ஒரு பெட்டி அல்லது பையில் போட்டு வைத்தால் தொலைத்து விட்டுத் தேட வேண்டாம்.

முன்பு கைவினைப் பகுதியில் சொல்ல மறந்த விடயம் – கைவினைக்காகப் பயன்படுத்தும் ‘பான்’ (pan), மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

Average: 5 (1 vote)

Comments

அழகா இருக்கு இமா, இது போல செய்ய பல முறை யோசித்தது உண்டு, ஆனால் எதை வைத்து பன்ன வென்ற கேள்வி, என்னிடம் ரெக்காட்டேல்லாம் இல்லை, சீடி கொண்டு செய்ய எதாவது ஐடியா தாருங்களேன்....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

முன்பு சில க்ராஃப்ட்ஸ் கைவினைப் பகுதிக்கு அனுப்பி இருக்கிறேன் ரேணு. இன்னும் சில யோசனைகள் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அடுத்த ரெக்கார்ட் ப்ரேக்கா..!! ;-) இமாம்மா
ரொம்ப அருமைங்க.. வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

இமாம்மா ரொம்ப அழகா இருக்குங்கம்மா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக பயனுள்ள யோசனை, வாழ்த்துக்கள் இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிகவும் அருமையாக இருக்கிறது. ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு. வாழ்த்துக்கள்.

ரொம்ப அழகா இருக்கு இமாம்மா. உங்களுக்கு இந்த ஐடியாலாம் எப்படி தோணுது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு இமா,

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

கேக் ட்ரேல கொஞ்சம் கேக் வச்சுத் தந்தீங்கன்னா, சாப்பிட்டுகிட்டே இருப்பேன்:)

அன்புடன்

சீதாலஷ்மி

இமா பல முறை ஷாப்பிங் சென்ற பொழுது இது மாதிரி ட்ரே வாங்க வேண்டும் என்று ஆசையாக அருகே போவேன், பார்த்து விட்டு வைத்து விட்டு வந்து விடுவேன்.ஆனால் நீங்களே அழகாக செய்து காட்டியது சூப்பர்.நீங்கள் சொல்வதை பார்த்தால் வீட்டில் உபயோகிக்காமல் இருக்கும் ப்லேட்ஸ் வைத்து கூட செய்யலாம் போல.ஆனால் இத்தனை அழகாய் யார் செய்து தருவது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த ரெக்கார்டு உங்ககிட்ட படும்பாடு இருக்கே... ஹைய்யய்யோ... முடியலடா சாமி. ஆனாலும் கொடுத்து வெச்சு ரெக்கார்டுங்க... அதான் உங்க கையில் சிக்கி இருக்கு ;) அழகு... எப்போது போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வீட்டில் உபயோகிக்காமல் இருக்கும் ப்லேட்ஸ் // நிச்சயம் செய்யலாம் ஆசியா. ப்ளேட் ட்ரே செய்யும் ஐடியாவில் இருந்துதானே எனக்கு இந்த ஐடியா வந்தது. ;)

ஒற்றைக் கைபிடியோ இரட்டையோ அல்லது மூன்று தட்டு ட்ரேக்கானதோ, உங்கள் விருப்பம் போல வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல ட்ரில்லிங் மெஷினும், கைபிடியிலுள்ள த்ரெட்டுக்கு அளவான டைமண்ட் பிட்டும் தேவை. இல்லாவிட்டால் வைத்திருக்கிற ஆளைத் தேடிப் பிடியுங்கள்.

பிட் வழுக்கி ஓடாமலிருக்க தட்டுக்களின் நடுவே துளை வர வேண்டிய இடத்தில் மாஸ்க்கிங் டேப் போட வேண்டும். துளை வரும் இடத்தை அடையாளம் செய்துகொண்டு ட்ரில் செய்தால் போதும். பிட் சூடாகும். இடக்கிடையே நனைத்து எடுக்க வேண்டும்.

பிறகு மாஸ்க்கிங் டேப்பை எடுத்துவிட்டு தட்டைக் கழுவி எடுத்து கைபிடியை மாட்டினால் சரி. ட்ரை பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்