முகப்பரு

1.முகப்பரு,கரும்புள்ளி போவதற்க்கு வழி சொல்லுங்கள்.

2.முகப்பரு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

டியர் பானு எப்படி இருக்கின்றீர்கள். முகப்பரு குறித்து எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கின்றேன். வாசித்து பார்க்கவும்.
முகப்பரு தோன்ற காரணம் எண்ணெய் பசை அதிகமாக சுரப்பதாலும், முகத்தை அதிகமாக கழுவுவதாலும், அல்லது வேண்டிய அளவிற்க்கு கழுவாமல் விடுவதாலும், வயிற்றில் அதிக உஷ்ண நிலை ஏற்படுவதாலும், காற்றிலுள்ள தூசு மாசு வாலும், என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் தோலில் எண்ணெய் பசை அதிகம் சுரப்பவற்களுக்கு தான் முகப்பரு அடிக்கடி தோன்ற அதிகம் வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் அதை சுலபமாக கட்டு படுத்து விடலாம்.
முகத்தை எப்பொழுதும் உலர்ந்த நிலையிலேயே வைக்க முயற்சி செய்யலாம்.
குறைந்தது இரண்டு முறை முகத்தை கழுவலாம்.
ஒரு சிறிய துண்டு எலுமிச்சைபழத்தை பருக்கல் மீதும், முகத்திலும் தேய்த்து, (சிறிது எரியும் பொருத்துக் கொள்ள வேண்டும்) பத்து நிமிடம் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். எலுமிச்சைபழத்தில் உள்ள கார தன்மையானது(acidity) கிருமிகளை பரவவிடாமல் அழித்தி விடும்.
சோப்பிற்கு பதிலாக வெறும் கடலை மாவையோ, சிறு பருப்பு மாவையோ, நீரில் குழைத்து முகத்தை நன்கு தேய்த்து இரண்டு முறை கழுவினால், தோலிலுள்ள மயிற்கணுக்களில் உள்ள அடைப்பு(black heads,white heads) நீங்கி நன்கு உலர்ந்து விடும். முகத்தை கழுவிய பின் நீரை ஒற்றி எடுக்க வேண்டும். துடைப்பதால் மீண்டும் நாமே அடைப்பை ஏற்படுத்தி விட வாய்ப்பிருக்கும்.
முகப்பரு வருவதற்கு முன்போ, அல்லது வந்த பின்போ,இது போன்ற முறைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் செய்து விட்டு பிறகு விடக்கூடாது. தினமும் பத்து நிமிடம் முகத்திற்காக ஒதுக்கி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
எல்லாவற்றுகும் மேலாக தினமும் குறைந்தது எட்டு முதல் பத்து குவளை தண்ணீர் பருக வேண்டும்.சிறிது சிறிதாக நாள் முழுக்க பருக வேண்டும்.
சிலர் கூறுவார்கள் எண்ணெய் பொருட்கள் அதுகம் சாப்பிடுவதால் முகப்பரு வருகிறது என்று. ஆனால் அது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.நன்றி.

Dear Manohari நான் நலமா இருக்கிறேன்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி. நான் இந்த முறையை இன்றிலிருந்து பயன்படுத்தி பார்க்கிறேன்.ஆனால் இரண்டு சந்தேகம்

1.கடலை மாவு அல்லது சிறு பருப்பு மாவு பயன்படுத்தும் போது முகத்தில் தேய்த்த உடனே கழுவ வேண்டுமா அல்லது காயவைய்த்து கழுவ வேண்டுமா?

2.கடலை மாவு மற்றும் எலுமிச்சைபழம் இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தலாமா?

டியர் பானு, நல்லது.நானும் நலமாக இருக்கின்றேன்.தங்கள் சந்தேகத்திற்கான விடைகள் இதோ,கடலைப்பருப்பையும்,அல்லது சிறு பருப்பையும் சோப்பிற்க்கு பதிலாக அவற்றை தேய்த்து முகத்தை கழுவ வேண்டும். ஊற வைக்கவோ, காயவைக்கவோ வேண்டிய அவசியமில்லை.
முகத்தில் பருக்கள் இருக்கும் பொழுது மட்டும் கட்டாயமாக எலுமிச்சைபழ துண்டை (not juice)தனியாக தேய்த்து பூசி ஊற வைத்து கழுவ வேண்டும். மாவோடு சேர்த்து பூசுவதால் பழத்தில் ஊள்ள கார தன்மை குறைந்து புன் ஆறுவதற்கு அதிக நாட்கள் ஆகிவிடும்.பருக்கள் இல்லாத பட்சத்தில் மாவோடு எலுமிச்சை ரசத்தை சேர்த்து தேய்த்து கழுவலாம். அப்பொழுது கூட ஊற வைக்கவோ காயவைக்கவோ அவசியமில்லை. சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை நீக்குவதற்க்கு ஊற வைக்கும் முறை சரிபடாது.அடிக்கடி கழுவுதல் முறை தான், சரியாக இருக்கும்.தங்களுக்கு மேலும் சந்தேகம் உண்டென்றால் கேட்கவும்.நன்றி.

DEAR MANO, YEN MUGATHAIL KULIKKAL ATHIGAM THONGU VITTATHU. ITHAI YEPPADI SARISEIVATHU?

டியர் ஜெயஸ்ரீ எப்படி இருக்கின்றீர்கள்.மன்னிக்கவும் தங்களுடைய கேள்வி எனக்கு சரியாக விளங்கவில்லை. தயவு செய்து சற்று விளக்கமாக எழுதினால் வீட்டு வைத்திய முறைப் படி ஏதாவது நிவாரணம் இருக்கின்றதாயென்று, எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தெரிந்தால் சொல்ல வசதியாய் இருக்கும்.நன்றி.

MANO AVARGALE HOW ARE YOU IM FINE OVER HER. YEN MUGATHIL NIRAIYA KULIGAL ULLATHU. ANTHA KULIGALAI MOODUVATHARKU YETHAVATHU VALI SOLLUNGALEN.

THANK YOU

துளசி சாற்றில் சந்தனம் கலந்து இரவில் பூசிவரமுகப்பரு மறையும்.

THuSHI

Dear Ms Lakshana

Thank you for your reply. By using this method,

முகத்தில் தோன்ரும் குழி மரையுமா?

Thank you

Jayashri

ஹலோ ஜெயஸ்ரீ, நல்லது, நானும் நல்ல சுகம். தங்கள் முகத்திலுள்ள குழிகள் அதிக நாட்பட்டதாக இல்லாத பட்சத்தில், எனக்கு தெரிந்த இந்த எளிமையான முறையை செய்துப் பார்க்கவும். முகப்பருவால் ஏற்ப்பட்ட குழிகளுக்கும், அம்மை போட்டதால் ஏற்ப்பட்ட குழிகளுக்கும் இந்த முறையினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
எலுமிச்சைபழம், ஆலிவ் ஆயில், கிழங்கு மஞ்சள்.இவை மூன்றும் இவற்றிர்க்கு தேவையான முக்கியமான பொருட்கள்.
எலுமிச்சைபழம் இறந்த செல்களை நீக்குவத்ற்கும், மீண்டும் புதிய செல்கள் உறுவாவதை துரிதபடுத்தவும் உதவும்.
கிழங்கு மஞ்சள் நம்மூர் மருந்து கடைகளில் கிடைக்கும். அது கிடைக்காவிடால் கண்டிப்பாக வேரெந்த மஞ்சளையும் பூசவேண்டாம். காரணம் மற்ற ரெடிமேட் பூசுமஞ்சள் முகத்தை வரட்சியாக்கிவிடும்.
எலுமிச்சை பழதில், ஒன்று அல்லது ஒன்னரை தேக்கரண்டி ரசத்தை பிழிந்து முகம் முழுவதும் நன்கு பூசிவிட்டி அது நன்கு காயும் வரை ஊறவைக்கவும்.பிறகு மிதமான தண்ணீரால் நன்கு கழுவி விட்டு, கிழங்கு மஞ்சளை கல்லில் தேய்த்து குழைத்து முகம் முழுவதும் நன்கு பூசி உடனே கழுவிவிட்டு முகத்தை ஈரம்மில்லாமல் துடைத்துவிடவும்.மூன்று நாட்கள் கழித்தும் எலுமிச்சைரசத்தால் தங்களுக்கு முகத்தில் எரிச்சல் இருந்தால் (ஒரு வேளை தங்களுக்கு sensitive தோலாக இருந்தால்)ஆலிவ் ஆயிலை ரசத்திற்க்கு சமமாக எடுத்து நன்கு குழைத்து முகத்தில் பூசி இரண்டு மடங்காக ஊறவைக்கவும்.பிறகு முகத்தை சிறுபருப்பு மாவால் தேய்த்து கழுவி துடைத்து விடவும்.பிறகு மஞ்சளை குழைத்து பூசிவிட்டு கழுவிவிடவும்.
இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு தரம் என்று, ஒரு மாதத்திற்க்கு செய்யவும்.நிச்சயம் குணம் தெரியும்.
இதற்கிடையில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மேலும் புரதசத்து அதிகம் உள்ள ஆகாரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளவும், காரணம் அவைகள் சதைகள் நன்கு வளர்ந்து குழிகள் இயற்க்கையாகவே மூட உதவி புரியும்.
முகத்தில்குழிகள் ஏற்ப்பட்டு அதிக நாட்களாகி விட்டிருந்தால், வீட்டு வைத்திய முறைப்படி குழிகளை மூட வாய்ப்பிருக்காது என்று நினைக்கின்றேன்.ஆகலே மேலும் நாட்கடத்தாமல் கட்டாயம் நல்ல தோல் நிபுனரை உடனே சந்தித்து ஆலோசனையைக் கேட்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.

Thank you very much for the treatments techniques. I will try it and will post the outcome soon.

மேலும் சில பதிவுகள்