அன்பு பரிசு

அன்பு தோழியின் அன்பு பரிசு.
சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் பரிசு வாங்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் சமீபத்துல ஒரு பரிசு கிடைச்சது.

பரிசுன்னதும் ஏதோ ஓட்டப்பந்தயத்துல கலந்துட்டு தான் வாங்கினேன்னு நினைக்கக் கூடாது. இந்த அன்பு பரிசு ஒரு தோழி மூலமா கிடைச்சது. பரிசு பொருளை பிரிக்கும்போது புதுசா பிறக்க போற குழந்தை எப்படி இருக்குன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு அது போல அதுக்குள்ள என்ன இருக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு வரும்ல அதை எப்படி சொல்லறது போங்க.

நான் சின்ன வயசுல இருந்து அந்த அளவுக்கு இது போல நமக்கே நமக்குன்னு அன்பு பரிசு வாங்கினது இல்ல. எதிர்பாராமல் கிடைக்கும் பரிசும் ஒரு தனி மகிழ்ச்சி கிடைக்கும்.

இந்த அன்பு பரிசு வாங்கும்போது நான் இருந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

சின்ன பரிசுன்னாலும் நமக்கு பிடிச்சது நமக்காக தேர்ந்து எடுத்து குடுக்கறது இன்னும் மகிழ்ச்சிதானே

சரி சரி நீங்க சொல்லறது புரியுது அட அப்படி என்னதான் பரிசுன்னு

எனக்கு வந்த பரிசு புத்தகம். ஒரு புத்தகத்துக்கு இவ்ளோ பில்டப்பான்னு கேட்கப்படாது. ரொம்ப நாள் முன்னாடி படிச்ச புத்தகம் தான். ஆனா எத்தனை முறை படிச்சாலும் எனக்கு சலிக்காது. அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அதை முகர்ந்து பார்த்து வாசம் பிடிச்சு கண் மூடி ரசிச்சு படிக்க ஆரம்பிச்சா உலகமே மறந்துடும்.

நாம அடைந்த மகிழ்ச்சிய இன்னொருத்தரும் அடையனும்னு நினைக்கனுனா அது புத்தக பகிர்வுதான். ஆனா புத்தகத்த வாங்கி போற யாரும் அவ்ளோ சீக்கிரம் யாரும் தர மாட்டறாங்க. இல்லனா தொலைந்து போச்சுன்னு அசால்டா ஒரு பதில். எனக்கு என் பிள்ளையவே தொலைச்ச மாதிரி ஒரு ஃபீலிங் அவங்களுக்கு எங்க புரியுது. சரி புத்தகத்தை எங்க வைக்கலாம்னு யோசிச்சா பீரோல வச்சி பூட்டிடலாமான்னு ஒரு யோசனை.

உடனே சமீபத்துல பேப்பர்ல படிச்ச ஒரு பத்தி தேவையில்லாம நியாபகத்துல வந்து உட்கார்ந்துடுச்சு. புத்தகத்துக்குன்னு தனி அலமாரி வைக்கனும். அட்டை போட்டு பெயரை மறைக்கக் கூடாது. கண்ணுக்கு தெரியர மாதிரி வச்சிக்கனும்.
இப்படிலாம் போய்க்குனே இருக்கு.

இப்போதைக்கு அன்பு பரிசு அலமாரியில் அலங்கரிச்சுன்னு இருக்கு. யாராவது கேட்டா என்ன சொல்லலாம் குடுக்கலாமா, வேண்டாமா இல்ல கடன் அன்பை (எலும்பை) முறிக்கும்னு எழுதி வச்சிடலாமா என்ன பண்ணலாம்னு கொஞ்சம் சொல்லுங்கபா.

5
Average: 5 (4 votes)

Comments

தோழி அன்புடன் கொடுக்கப்படும் அனைத்து பரிசுமே விலைமதிபில்லாததுதான். திருமணம் முன் என் கனவர் சர்ப்ரைஸ் பரிசாய் கை கடிகாரம் கொடுத்தார் என் பிறந்த நாள்க்கு. அதை ஞாபகபடுத்தியது உங்கள் பதிவு.

அட.ஆமாப்பா கண்டீப்பா பரிசோட விலை நமக்கு முக்கியம் இல்லை.ஆனா அது தேக்கி வச்சிக்கிற நினைவு விலை பதிப்பில்லாதது. எனக்கும் என் கணவர்முதல் பரிசு வாட்ச் தான் பா.தான்க்ஸ் பா. பதிவுக்கு

Be simple be sample

ரேவா
உண்மை தான் பரிசுக்கு விலை இல்லை பா.
அன்பின் வெளிப்பாடு அது. அந்த பரிசை காணும்போதெல்லாம் தந்தவங்க நினைவுக்கு வருவாங்க தோழி

ஹாய் ரேவ்ஸ்,

அன்பானவர்கள் தரும் பரிசு எப்போதும் விலைமதிப்பில்லாதது,

அத்தனையும் உண்மையான வரிகள்.

//நாம அடைந்த மகிழ்ச்சிய இன்னொருத்தரும் அடையனும்னு நினைக்கனுனா அது புத்தக பகிர்வுதான். ஆனா புத்தகத்த வாங்கி போற யாரும் அவ்ளோ சீக்கிரம் யாரும் தர மாட்டறாங்க. இல்லனா தொலைந்து போச்சுன்னு அசால்டா ஒரு பதில். எனக்கு என் பிள்ளையவே தொலைச்ச மாதிரி ஒரு ஃபீலிங் அவங்களுக்கு எங்க புரியுது//

எனக்கு புரியுதுடா,நான் புக் கொடுத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன் :(

பரிசை பகிர மனமில்லை என்று சொல்லி விடுங்கள் ரேவ்ஸ் :)

அன்புடன்
நித்திலா

//புத்தகத்துக்குன்னு தனி அலமாரி// நிச்சயம் தேவை.
//அட்டை போட்டு பெயரை மறைக்கக் கூடாது.// எனக்கும் இந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் பொருத்தமாக ஒரு டஸ்ட் கவர் இருந்தால் அட்டை புதுமை மாறாமல் வைத்திருக்கலாம். 'க்லியர் சீல்' போட்டு வைக்கலாம்.
//என்ன பண்ணலாம்னு கொஞ்சம் சொல்லுங்கபா.// :-) கடன் உறவை முறிக்கும் என்பது உண்மைதான். அப்படி எழுதி வைப்பதும் உறவை முறிக்கும். தர முடியாது என்று சொல்லுவதும் உறவை முறிக்கும். முக்கியமான புத்தகம் என்றால் உள் அறையில் வெளியார் கண்ணில் படாமல் வைப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

ஆமா நிகி. சரியா சொன்னிங்க.அந்த பரிசு எப்பவும் அவங்க அன்பை சொல்லினே இருக்க்ம். பதிவுக்கு நன்றீ பா

Be simple be sample

ஆமாடா. எனக்கும் அந்த அனுபவம்தான்.திரும்ப திரும்ப கேட்டு சலிச்சு போச்சு.யாரவது புத்தகத்தை மடுச்சு வச்சி படிச்சா கூட மனசு பதறூம். தான்க்ஸ் டா பதிவுக்கு

Be simple be sample

நல்ல வழி முறை. சொல்லிட்டிங்க. நானும் புக் க்ஸ்க்கு டிரான்ஸ்பரண்ட் கவர் போடலாம்ம்னுதான் ஐடியா. .இன்னும் செயல் படுத்தல .சின்ன சோம்பல் . யாருடைய உறவும் முறிய வேண்டாம்னா உள்ள வைக்கறதுதான் நல்லது. ஒக்கே இமாம்மா அப்படியே செய்துடறேன்.தான்க்ஸ் இமாம்மா பதிவுக்கு

Be simple be sample

பரிசு என்றாலே சந்தோஷம் தான் அதிலும் எதிர்பாராததுன்னா இன்னும் சந்தோஷமா இருக்கும். எனக்கும் நிறைய சர்ப்ரைஸ் கிஃப்ட் கிடைச்சிருக்கு பரிச விட கொடுக்கறவங்க அன்பு தான் பெரிசா தெரியும் அந்த நேரம் அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும்.
இமா சொன்னது போல கேட்டா கொடுக்காம இருக்க முடியாது அன்பு முறியும், அதுக்கு உள்ளேயே வைத்திருக்கலாம்

ரேவ்ஸ் நல்லதொரு பகிர்வு, புத்தகங்களில் கண்டபடி கிறுக்கி வைப்பது, மடக்கி வைப்பது இது எல்லாம் எனக்கும் பிடிக்காது.
மெல்லிய அட்டைகள் போடுவது நல்ல விஷயம்.
என் குழந்தைகளின் பாடபுத்தகங்களுக்கு (textbooks) கண்ணாடித்தாள் அட்டைகளைத்தான் போட்டுக்கொடுப்பேன். அப்பொழுதான் அதிலிருக்கும் படங்கள் தெரியும், படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்பது என் எண்ணாம்.

நோட்டுப்புத்தகங்களுக்கு பள்ளியிலே கொடுக்கும் அட்டைகளை போட்டுகொடுத்துதான் ஆகவேண்டும் வேறு வழியில்லை.
அதிலும் கூட அட்டைப்பக்கத்தில் பொன்மொழிகள், அழகான படங்கள் போட்ட நோட்டைத்தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மறைப்பது போன்ற அட்டையையும் கொடுத்து அதை போடச்சொல்லிவிடுவர் :( ஆனால் பாடப்புத்தகங்களுக்கு இதுபோன்ற நிபந்தனை இல்லை :).

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

புத்தகங்களை நானும் பாதுகாப்பாக முதலில் சின்ன அலமாரி நிறைய கதைபுத்தகங்கள்,சிறுவர்மலர் எல்லாம் சிறுவயதில் அதிகம் சேர்த்துவைப்பேன், மாதம் ஒருமுறையாவது வரிசைகளை மாற்றி அடுக்கி அழகாக வைப்பேன், பழைய நினைவை ஞாபகப்படுத்திட்டீங்க, :-)
பள்ளிப்பாடபுத்தகங்கள் பொறுத்தவரையில் பைண்டிங் செய்து பாதுகாப்பது நல்லது, பரிசாய் கிடைத்த புத்தகங்களை பிறர்கண்படாதவாறு வைப்பதே சிறந்ததுங்க அக்காங், இன்னும் புத்தகத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்றால் எனக்கு கொரியர் பண்ணிடுங்க :-)

நட்புடன்
குணா

ஆமா கேட்டும் குடுக்கலனா கஷ்டம்தான். என்ன பண்ணறது.. பதிவுக்கு ரொம்பதான்க்ஸ்

Be simple be sample

ரொம்ப சரியா சொன்னிங்க செல்வி. புத்தகம் ஒரு பொக்கிஷமாதான் பாதுக்காக்குனும். தான்க்யு செல்வி

Be simple be sample

குணா தம்பிங். நல்ல பழக்கம் .அப்படியே கடைபிடிங்க .அங்க இருக்கற புக்க அக்காக்கும் கொரியர் பண்ணிடுங்க் .தான்க்ஸ் தம்பிங்

Be simple be sample

புத்தகங்கள் விலை மதிப்பில்லா பரிசு ரேவ்ஸ். ஆனால் கடன் கேட்பவர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பது.... தெரியலியே... அவ்வ்வ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு ரேவதி,

புத்தகங்கள் உண்மையிலேயே விலை மதிக்க முடியாத பரிசுகள்தான். பத்திரமாக வச்சுக்குங்க. ஒவ்வொரு தடவை அதைப் பிரிக்கும்போதும், அதைக் கொடுத்தவங்க நினைவும் சேர்ந்தே வரும்.

கஷ்டப்பட்டு, பைண்ட் செய்து, சேர்த்து வைத்த தொகுதிகளை, இரவல் கொடுத்து, மிஸ் பண்ணியிருக்கேன்:(.

கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாதே, அதனால், இப்பல்லாம் என்னோட லைப்ரரி அலமாரி, மற்றவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் எட்டாத தூரத்தில்தான்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆமா கவி அதே பிரச்சனை தான்.என்னதான் செய்றது. இங்குட்டும் சேம் பிள்ட் அவ்வ்வ்வ்வ்வ்வ்

Be simple be sample

ஆமா மா.எல்லாருக்கும் இந்த அனுபவம் வந்துடுது.நீங்க. நல்லா பிளானுங்க இருக்கிங்க.அனுபவம் இப்படி லாம் நம்பல இப்படி பண்ணறவங்க வைக்குது.

Be simple be sample

ரேவ்ஸ் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் :)

நானும் இமாம்மாவை வழிமொழிகிறேன்..........:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்ஸ் சுவா. இமாம்மா முடிவையே பரிசிலினை பண்ணீடுவோம்

Be simple be sample

உங்க அன்பு பரிசு அன்பவம் மூலம் எங்களுக்கும் பரிசு கொடுத்திட்டீங்க ரேவ்ஸ்...:) வாழ்த்துக்கள்...:)
//பரிசுன்னதும் ஏதோ ஓட்டப்பந்தயத்துல கலந்துட்டு தான் வாங்கினேன்னு நினைக்கக் கூடாது.// அப்படியெல்லாம் உங்கள் பத்தி தப்பா நினைக்க முடியுமா ரேவ்..;)
//நாம அடைந்த மகிழ்ச்சிய இன்னொருத்தரும் அடையனும்னு நினைக்கனுனா அது புத்தக பகிர்வுதான். ஆனா புத்தகத்த வாங்கி போற யாரும் அவ்ளோ சீக்கிரம் யாரும் தர மாட்டறாங்க. இல்லனா தொலைந்து போச்சுன்னு அசால்டா ஒரு பதில். எனக்கு என் பிள்ளையவே தொலைச்ச மாதிரி ஒரு ஃபீலிங்// உண்மை தான் ரேவ்.
//யாராவது கேட்டா என்ன சொல்லலாம் குடுக்கலாமா, வேண்டாமா இல்ல கடன் அன்பை (எலும்பை) முறிக்கும்னு எழுதி வச்சிடலாமா என்ன பண்ணலாம்னு கொஞ்சம் சொல்லுங்கபா.// எதை முறிப்பீங்கன்னு இப்படி பப்ளிக்கா சொன்னதுக்கு அப்புறமும் நான் உங்க கிட்ட உங்க அன்பு பரிசை கேட்பேன்... அய்யோ...;) ..:)
என் பாராட்டுக்கள் ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நமக்கும் புக்குக்கும் படிக்கிற காலத்துலயே உறவு சரி இல்லை. இப்ப கேட்கவே வேண்டாம். ;) இருந்தாலும் என் அம்மாவை பார்த்து புத்தகங்களை விரும்புறவங்க, எந்த அளவு அதை பாதுகாப்பாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது. அம்மா ரொம்ப காலமா பாதுகாத்து பைண்ட் பண்ணி வைத்த பல சரித்திர நாவல்கள் இப்போது இல்லை. பலரும் படிக்க வாங்கி திரும்ப தராமலே விட்டுவிட்டார்கள். அம்மா யாரிடமும் கொடுக்கவே விரும்பாதவை, வீட்டில் பிள்ளைகள் நாங்கள் கூட எடுக்க அனுமதி இல்லாமல் வைத்திருந்தவை... இன்று இல்லவே இல்லை என்பது அம்மா நினைத்து நினைத்து வருந்தும் போது இப்படி கூட புத்தகங்களை நேசிக்க முடியுமா என்று தோண்றும். பாதுகாப்பா இமா சொன்னது போல யார் கண்ணிலும் படாத ரூமில் வைங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுமி. இந்த அளவுக்கு பயப்பட கூடாது.அது அன்பா சொல்லற வார்த்தை தான். தான்க்ஸ். பா பாராட்டுக்கு..

வனி. நீங்க ஏற்கன்வே உங்க அம்மா புக் சேகரிச்சு வச்சுக்கறத பத்தி சொல்லிக்கிறீங்க. கண்டிப்பா மிஸ் பண்ணிட்டோம்னா ரொம்ப. கஷ்டம்தான்பா. எனக்கு சேகரிச்சு வைக்க இடம் பற்றா குறையும் உண்டு.பதிவு க்கு நன்றீ

Be simple be sample

அழகா சொல்லிருக்கீங்க, அன்பு பரிசு நமக்கு கிடைச்சத எப்படி அடுத்தவங்களுக்கு கொடுக்க முடியும்? பத்திரமா பரிசு மட்டும் உள்ளையே வைங்க ரேவதி!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சரி ரேணுகா அப்படியே செய்துடறேன்.தான்க்ஸ் பா பதிவு க்கு

Be simple be sample