அதிகாலையே அது சுப வேளையே...

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்..
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...
என்னடா கன்னடத்து பைங்கிளி பாடுனது பத்தாதுன்னு இந்த பொண்ணு வேற ராகம் இழுக்குதேன்னு நினைக்கிறீங்களா தோழீஸ்... எல்லாம் காரணமாத்தானுங்கோய்...
ஆலய மணியும், பறவைகளின் இனிமையான ஒலியும் அதிகாலை நேரத்துல கேட்கும் சுகமே தனிதான் இல்லையா.. அந்த அதிகாலையை பற்றித் தான் இங்க சொல்ல வந்தேன்...:)
எத்தனைதான் சட்டுப்புட்டுன்னு // சூப்பர் ரைமிங்ல .....;) // நாம வேலையை செய்தாலும் 24 மணி நேரம் எனக்கு பத்தவே இல்லைன்னு சொல்றது பல பேரோட பன்ச்சு டைலாக்கா போச்சு...;)
என்ன தான் டைம் டேபிள போட்டாலும் ஒன்னுமே சரிவர மாட்டேங்குதேன்னு புலம்பறவங்களும் இந்த உலகத்துல இருக்காங்க மக்காஸ்...;)
ஆனா ஒரு சிலர் மட்டும் அமைதியான, நிம்மதியான மனசு, ஆடம்பரமில்லாத வாழ்வு, தன்னலமில்லாத எண்ணங்கள், தலை சிறந்த முடிவுகள் என்று அவர்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று முன்னேறி இருப்பாங்க, அது எப்படி?....
இப்படி வெற்றிபெறும் சில மனிதர்களிடம் இருக்கும் தலையாய ஒற்றுமை, என்னன்னு நாம பார்த்தால் அதில் முதல் இடம் வகிப்பது அதிகாலை நேரத்திலேயே அவங்க படுக்கையை விட்டு எழுந்திருப்பதாகத் தான் இருக்கும்...:)
பெஞ்சமின் பிராங்ளின் என்னும் அறிஞர் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தையும் அறிவையும் தரும் என்கிறார்..
அறிவத் தாராட்டி கூட பரவாயில்லைங்க // (நம்ம எல்லோருக்கும் அது கொஞ்சம் அதிகமாவே இருக்குல...;)// , இலவசமா ஆரோக்கியத்தை தரும் போது அதை நாம் முயற்சி செஞ்சு பார்த்தால் தான் என்ன தோழீஸ்,,,;)

காவல் துறை, மிலிட்டரி இதில சேர விரும்பும் வீரர்களுக்கு முதல் பயிற்சியே அதிகாலையிலேயே எழுந்திரிக்கிறது தான், அந்த நேரத்துல தான் எல்லாவிதமான உடல் பயிற்சியும் சொல்லி தருவாங்க.

பள்ளிகளிலும், கல்லூரி விடுதிகளிலும் // மெய்யாலுமான்னு என்னை கேட்கக் கூடாது..;) // அதிகாலையில் படுக்கையிலிருந்து எழுந்து படிக்கிறது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதிகாலையில எந்திரி எந்திரின்னு சொல்றியே அதுக்கு என்ன காரணம், ஏன் மத்த நேரத்துல படிச்சா படிப்பு ஏறாதா? இல்ல உடல் பயிற்சி செய்ய முடியாதான்னு சில பேரு கேட்கலாம்...

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்களை சொல்லி மாளாது. அதிகாலை எழுவதால் உடல், மனம் சுறுசுறுப்படையும், தேகம் ஆரோக்யமாக இருக்கும்.
மன இறுக்கம், டென்ஷன் இல்லாமல், பதறாமல் நம் வேலையை முழுமையாக செய்து முடிக்க முடியும். உடலுக்கும், மனதுக்கும் கிடைக்கும் இயற்கை பூஸ்ட்டே அதிகாலையில் எழுவது தானுங்க..:)

உஷத்காலம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்க்ள். உஷஸ் என்பது ஒரு பெண் தேவதை. அதிகாலை நேரத்துக்கு சொந்தகாரங்களே இவங்க தான், இந்த தேவதை கண் விழித்த பின்னர் தான் சூரியன் உதயமாக தொடங்குகிறான்.

அதனால தான் விடியும் காலைப் பொழுதை உஷத் காலம் என்கிறார்கள். இந்த தேவதையின் செழிப்பான கதிர்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி வரும் வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விஷேசமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரத்தில் வெளி நீர் சும்மா ஐஸ் மாதிரி சிலு சிலுன்னு இருந்தாலும் உள்ளே தண்ணீர் வெது வெதுப்பாகவே இருக்கும், இதை ஆறு, குளம் போன்றவற்றில் அதிகாலையில் நீராடியவர்கள் மற்றும் இனி நீராடலாம் என நினத்திருப்பவர்கள் உணரலாம்..:)

அதனால் தான் கோவில்களில் எல்லாம் அதிகாலை நேர பூஜைக்கு உள்ள சிறப்பு வேறு எந்த நேரத்துக்கும் இல்லை. அதிகாலையில் சத்தம் அதிகம் இருக்காது. சூரியனின் சூடான கதிர்கள் பூமியை தொடாத நேரம் என்பதால் பூமியும், செடி கொடிகளும், மரங்களும் குளிர்ச்சியாக இருக்கும்.. அந்த நேரத்தில் பூக்களின் நறுமணம் நம் மூச்சுக்காற்று வழி மூளைக்கு நிறைய சுத்தமான ஆக்சிஜனையும் எடுத்துச் செல்லும்.
அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களைக் முடித்து டீ அல்லது காபி குடித்துவிட்டு உங்கள் வேலையை செய்யத் தொடங்கினால் நாமே ஆச்சரியப்படும் வகையில் வேகமாகவும் அதே சமயத்தில் அழகாகவும் செய்து முடிக்க முடியும்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிகாலையில் பாடங்களைப் படிக்கும் போது எளிதாக அவர்களின் மனதில் பதிந்து விடும். //மொபைல மறைச்சு வெச்சு எல்லாம் விளையாடக் கூடாது தங்கங்களே....;) // அதே நேரத்தில் வீட்டரசிகள் ( அட நாம தாங்க ) வேலையையும் தொடங்கி விட்டால் அது ஒரு உற்சாகமான நாள் ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சூரியன் எழுந்திரிச்சதுக்கு அப்புறமும் படுக்கையிலேயே ரொம்ப நேரம் புரண்டு படுத்திருந்தால் நேரம் ஆக ஆக சோம்பேறித்தனம் தான் அதிகமாகுமே தவிர உடலுக்கு ஓய்வு இருக்காது. லேட்டா எந்திரிச்சா என்னென்ன ஆகும்னு உங்களுக்கே தெரியும்னாலும் நானும் சொல்லலேன்னா என் மனசு தாங்காது...;)

முதல் கோணல் முற்றிலும் கோணல் னு ஒரு பழமொழி இருக்கு, அது போல பதறிய காரியம் சிதறும்னும் சொல்லுவாங்க.
நேரத்தோட எழுந்திரிக்கலைனா அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். அவசர சமையல்ல கறிக்கு நீங்க உப்ப ஒரு வாட்டி போடுவீங்களோ இல்ல ஒன்ஸ் மோர் போடுவீங்களோ...;) அதுக்கும் மேல உங்க இஷ்டம்..;)
பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். அதுவும் வேலைக்கு போற ஆசாமியா இருந்தால் அலுவலகத்துக்கு கட்டாயம் லேட்டு தான் .
இந்த நேர தாமதம் உங்கள் மதிப்பையும் குறைத்து விடும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, அந்தநாளோட நிம்மதியே போய்விடும். காலை வேளையிலேயே எழுந்து நம்மளோட சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிச்சு அந்த நேரத்தை நம்ம குடும்பத்தோட ஜாலியாக என்ஜாய் பண்ணலாம்...:) முக்கியமாக உங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். உங்களால் தீர்க்க முடியாத குழப்பமான விசயங்களுக்கு கூட தெளிவான முடிவு கண்டு பிடிக்க முடியும்..

முதலில் எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை மனதினுள் அட்டவணைப் படுத்தி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் வெற்றி உங்கள் பக்கம் தான்...:)

சொல்லுவதெல்லாம் ரொம்ப சுலபம் செய்யறது எவ்வளவு கஸ்டம்னு
தெரியுமா ? அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது. காலையில் எழுந்திருப்பது ஒன்னும் ரொம்ப பெரிய காரியமில்லை.

முயற்சி திருவினையாக்கும்னு சொல்லியிருக்காங்கல்ல, அது நமக்கு தான்னு நினைச்சுக்கங்க...:) எவ்வளவோ செஞ்சுட்டோம், காலையில நேரத்தோட எந்திரிக்கறது பெரிய விசயமா என்ன?...;)

முதல்ல காலையில் நேரத்தோட எழுந்திரிக்கனும்னா முதல் நாள் இரவு 10 மணிக்குள்ள படுக்கைக்கு போயிடனும். சித்தி, செல்லமே, சரவணன் மீனாட்சில நடிச்ச எல்லாரும் தூங்க போனதுக்கு அப்புறம் தான் நான் போவேன்னு யாரும் சேட்டை பண்ண கூடாது...;) சரியா???..;)

முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்க ட்ரை பண்ணுங்க. ஆனா அலாரம் அடிச்சா மனசு மட்டும் இல்லை கையும் ஆட்டோமேட்டிக்கா அத அணைச்சுட்டு... கைப்புள்ள... தூக்கத்த கண்டினியூ பண்ணுடான்னு சொல்லத்தான் செய்யும், அதனால எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தூரத்தில் அலாரத்தை வையுங்கள்.
இராத்திரியில் படுக்கைக்கு செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு படுங்கள். காலையில் தானாகவே எழுந்திரிக்க தொடங்குவீர்கள்.

கண் விழித்தவுடன் படுக்கையில் இருந்து துள்ளி குதிச்சு ( சிரமம் தான்.. ட்ரை பண்ணுங்க ) எழுந்து வேலை செய்ய தொடங்கினால் தூக்கம் போயே போச்சு.. போயிந்தே.. இட்ஸ் கான்...

இருட்டிலிருந்து உதித்து
உயர்ந்தெழும் சூரியன்....
பனித்துளியுடன் புல்வெளி ....
மொட்டவிழும் பூக்கள்...
சுகந்தமான தென்றல்...
பாடிச் செல்லும் பறவைகள்....
கூவி எழுப்பும் சேவல்...
அமைதியான பூமி.....
மண்ணுக்குள்ளும்
மனித மனதுக்குள்ளும்
காந்த சக்தியை புகுத்தும்
அழகான காலை
அது தான்..... அதிகாலை.......

என்ன அதிகாலையை ரசிக்க என்னைப் போல நீங்களும் தயாராகி விட்டீர்கள் தானே...:)

5
Average: 5 (4 votes)

Comments

சூப்பர் கட்டுரை சுமி ;-)

அதிகாலையில் எழுந்திருப்பது நான் இந்த வருடத்தில் எடுத்திருக்கும் பல ரெசல்யுஷ்ன்களில் ஒன்று :-) உங்கள் கட்டுரையை படித்த பின்பாவது அலாரத்தை ஆப் செய்து விட்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கும் பழக்கத்தை விட்டால் சரி ;-)
சுமி சொன்ன பின்பு முயற்சி செய்யவிட்டால் எப்படி, முயற்சி செய்து பார்ப்போம்... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூப்பருங்கோ ரொம்ப அழகா அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)

/முதல் கோணல் முற்றிலும் கோணல் னு ஒரு பழமொழி இருக்கு, அது போல பதறிய காரியம் சிதறும்னும் சொல்லுவாங்க./ சரிதான் சுமி காலை லேட்டா எழுந்து வேலையை தொடங்கினா அன்னிக்கு முழுக்க வேலை இழுத்துட்டே போகும்
ஆனா அதிகாலை எழுந்திரிக்கரதுன்னா அதை விட கஷ்ட்டமாச்சே :o
அலாரம் வச்சாலும் ஆஃப் பன்னிட்டுல்ல தூங்குறேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் ஆளா வந்து வாழ்த்து சொன்னதற்க்கு ரொம்ப நன்றி பிந்து.
//அதிகாலையில் எழுந்திருப்பது நான் இந்த வருடத்தில் எடுத்திருக்கும் பல ரெசல்யுஷ்ன்களில் ஒன்று :-) உங்கள் கட்டுரையை படித்த பின்பாவது அலாரத்தை ஆப் செய்து விட்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கும் பழக்கத்தை விட்டால் சரி ;-)// கொஞ்சநாளைக்கு கஷ்டப்பட்டாலும் பழகிட்டா அந்த டைமுக்கு நாமே பெட்ட விட்டு ஆட்டோமேட்டிக்கா எழுந்திரிச்சுடுவோம் பிந்து...
//சுமி சொன்ன பின்பு முயற்சி செய்யவிட்டால் எப்படி, முயற்சி செய்து பார்ப்போம்... :)//முயற்சி திருவினையாக்கும் பிந்து...இது சுமி சொன்னது இல்லை பிந்து...;)
உங்கள் பதிவுக்கு மீண்டும் எனது நன்றிகள் பிந்து..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//சூப்பருங்கோ ரொம்ப அழகா அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)// உங்கள் வாழ்த்துக்களுக்கு நெம்ப டேங்ஸ்ங்கோவ்..:)
/// சரிதான் சுமி காலை லேட்டா எழுந்து வேலையை தொடங்கினா அன்னிக்கு முழுக்க வேலை இழுத்துட்டே போகும்// உண்மை தான் சுவா. நானும் அன்பவப்பட்டு இருக்கேன், அதனோட பாதிப்பு தான் இந்த கட்டுரை...;)
//ஆனா அதிகாலை எழுந்திரிக்கரதுன்னா அதை விட கஷ்ட்டமாச்சே :o
அலாரம் வச்சாலும் ஆஃப் பன்னிட்டுல்ல தூங்குறேன் ;)// என்ன கொடுமை சுவா இது.... ;) அதுக்கு தான் சொல்றேன் ,அலாரத்தை உங்க பெட்ரூமூக்கு வெளில செட் பண்ணி வெச்சுட்டு தூங்குங்கன்னு..;)
உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அதிகாலையே சுப வேளையே ரொம்ப சரிங்க காலையில எழுந்து சூரியன் மென்மையா எழுந்துக்குறத பார்க்கறதே மனதுக்கு புத்துணர்ச்சி தாங்க.
பிந்து சொன்னது போல எனக்கும் இந்த வருடத்தோட முக்கிய தீர்மானமே இது தான் சுமி. அத உற்சாகப்படுத்துறது போல உங்க கட்டுரையும் இருந்துச்சுங்க நன்றிங்க சுமி, டெய்லி ஒரு முறை இந்த கட்டுரைய படிக்க போறேன்.

சூப்பர் சூப்பர்... நேற்றே வழியில் வரும் போது படிச்சேன், மறுபடி தமிங்கில பதிவு போடக்கூடாதுன்னு விட்டுட்டேன். ;) நானும் காலை எழுந்து படிக்கனும்னு படிக்கும் காலத்தில் இருந்து நினைப்பேன், ஆனா எழுந்து உட்கார்ந்தா தூங்கிடுவேன் :P நமக்கு ராக்கோழி மாதிரி படிச்சா தான் செட் ஆகும்னு விட்டுட்டேன். எப்பவுமே நைட் விடிய விடிய படிச்சுட்டு நீங்க சொன்ன தேவதை எழும்போது நான் தூங்க போயிருவேன். :) இரண்டு தேவதைகள் ஒரே நேரத்தில் முழிச்சிருக்க கூடாது பாருங்க, அதான். ஒன்னு உண்மை... காலையில் எழுந்தா அன்று முழுக்க ரொம்ப ஃப்ரெஷா, ரொம்ப நேரம் இருக்க மாதிரி இருக்கும். ட்ரூ. ட்ரை பண்றேன் மறுபடி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுமி அழகா சொல்லி இருக்கீங்க :) நல்ல பயனுள்ள பகிர்வு, வரிக்கு வரி கவிதை நடைல வார்த்தைகளை வெளிப்படுத்தி இருக்கீங்க, உங்க எழுத்து நடை நல்லா இருக்கு, மேன்மேலும் கட்டுரைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அதிகாலைப்பற்றிய வர்ணனையும் நேரத்தில் எழுவதைப்பற்றிய விளக்கங்களும் ரொம்ப அருமைங்க :-)
நல்ல பயனுள்ள பகிர்வு, படங்களும் நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

//காலையில் நேரத்தோட எழுந்திரிக்கனும்னா முதல் நாள் இரவு 10 மணிக்குள்ள படுக்கைக்கு போயிடனும்.// ;) ஓகே! இமா தூங்கப் போறேன். நல்லிரவு. ;)

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிவுக்கு நன்றிங்க..
//சுமி அதிகாலையே சுப வேளையே ரொம்ப சரிங்க காலையில எழுந்து சூரியன் மென்மையா எழுந்துக்குறத பார்க்கறதே மனதுக்கு புத்துணர்ச்சி தாங்க.// நமக்கு கிடைக்கும் இயற்கையான டானிக் தேவி..:)
//பிந்து சொன்னது போல எனக்கும் இந்த வருடத்தோட முக்கிய தீர்மானமே இது தான் சுமி. அத உற்சாகப்படுத்துறது போல உங்க கட்டுரையும் இருந்துச்சுங்க நன்றிங்க சுமி, டெய்லி ஒரு முறை இந்த கட்டுரைய படிக்க போறேன்.// ரொம்ப சந்தோசங்க... மீண்டும் உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//சூப்பர் சூப்பர்... நேற்றே வழியில் வரும் போது படிச்சேன், மறுபடி தமிங்கில பதிவு போடக்கூடாதுன்னு விட்டுட்டேன். ;) // நன்றி..நன்றி வனி.. நீங்க எதுல பதிவு போட்டாலும் எனக்கு சந்தோசமே வனி..:)
//நானும் காலை எழுந்து படிக்கனும்னு படிக்கும் காலத்தில் இருந்து நினைப்பேன், ஆனா எழுந்து உட்கார்ந்தா தூங்கிடுவேன் :P நமக்கு ராக்கோழி மாதிரி படிச்சா தான் செட் ஆகும்னு விட்டுட்டேன். // ஓ... நீங்க அப்ப குடுகுடுப்பகாரங்களோட ரிலேட்டிவ்ன்னு சொல்லுங்க...;)
//எப்பவுமே நைட் விடிய விடிய படிச்சுட்டு நீங்க சொன்ன தேவதை எழும்போது நான் தூங்க போயிருவேன். :) இரண்டு தேவதைகள் ஒரே நேரத்தில் முழிச்சிருக்க கூடாது பாருங்க, // ஆனாலும் இம்புட்டு தன்னடக்கம் உங்களுக்கு தேவையா வனி...;)
//ஒன்னு உண்மை... காலையில் எழுந்தா அன்று முழுக்க ரொம்ப ஃப்ரெஷா, ரொம்ப நேரம் இருக்க மாதிரி இருக்கும். ட்ரூ. ட்ரை பண்றேன் மறுபடி.// முயன்றால் முடியாதது இல்லைங்கோ...:)
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ,பாராட்டுக்களுக்கும் எனது நன்றிகள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

/சுமி அழகா சொல்லி இருக்கீங்க :) // ரொம்ப டேங்ஸ்ங்க..:)
//நல்ல பயனுள்ள பகிர்வு, வரிக்கு வரி கவிதை நடைல வார்த்தைகளை வெளிப்படுத்தி இருக்கீங்க,// நான் பறக்கிறேன் அருள்...:)
//உங்க எழுத்து நடை நல்லா இருக்கு, மேன்மேலும் கட்டுரைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமி :)// உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அருள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//அதிகாலைப்பற்றிய வர்ணனையும் நேரத்தில் எழுவதைப்பற்றிய விளக்கங்களும் ரொம்ப அருமைங்க :-)// அருமைன்னு சொன்னால் மட்டும் பத்தாது தம்பி... அதிகாலையிலேயே எழுந்திரிக்கவும் செய்யனும்..:) உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் தம்பி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

////காலையில் நேரத்தோட எழுந்திரிக்கனும்னா முதல் நாள் இரவு 10 மணிக்குள்ள படுக்கைக்கு போயிடனும்.// ;) ஓகே! இமா தூங்கப் போறேன். நல்லிரவு. ;)// படிச்ச உடனே அதன் படி நடக்க தொடங்கிட்டீங்கன்னு சொல்லுங்க..;)சூப்பரு..:)
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் இமாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

// அருமைன்னு சொன்னால் மட்டும் பத்தாது தம்பி.. அதிகாலையிலேயே எழுந்திரிக்கவும் செய்யணும்..:)//
ஹிஹி அக்காங், நான் இரண்டு வருடமாய் பிரம்மமுகூர்த்ததிலே எழுந்திரிக்கற ஆள் :-) என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே :-)

நட்புடன்
குணா

சுப்பரா சொல்லிட்டிங்க சுமி. நானும் முதல்ல இப்படுத்தான் அலாரம் ஆஃப் பண்ணீட்டு தூங்வேன்.இப்ப வாக்கிங் போக ஆரம்பிச்சதுல இருந்து சீக்கிரம் எழுந்து பழக்கம் ஆயாச்சு. நிஜமாகவே அதிகாலை எல்லாத்தையும் ரசிச்சு வாக்கிங் போய்ட்டு வந்தா அந்த நாள் முழுக்க உற்சாகம் தான்.நல்ல பதிவு

Be simple be sample

அதிகாலையில வாக்கிங் போறதோட சுகமே அலாதிதான் ரேவ்ஸ். நானும் இந்தியால இருந்த வரைக்கும் போயிட்டு இருந்தேன், இங்க குளிர்ல எங்க போறது? அதனால ஜன்னல் வழியா அதிகாலையை பார்த்துட்டே த்ரெட் மில்ல ஓடறதோட சரி..;)
உங்கள் பதிவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அதிகாலை நேரம் மிகவும் பிடிக்கும்,அதுவும் குளிர் காலம்ன்னா சூப்பர், அது மட்டும் இல்லாமல் பசங்க ஸ்கூல் போறதால எழுந்தே ஆகவேண்டியதா தான் இருக்கு:)நானும் தயார் தான் உங்களுடன்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

//சுமி அதிகாலை நேரம் மிகவும் பிடிக்கும்,அதுவும் குளிர் காலம்ன்னா சூப்பர், // எனக்கும் ரொம்ப பிடிக்கும் ரேணு..
//பசங்க ஸ்கூல் போறதால எழுந்தே ஆகவேண்டியதா தான் இருக்கு:)// அதே பிளட் தான் இங்கேயும் ரேணு..;)
பதிவுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் ரேணு..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குணா தம்பி..முதல்ல மன்னிச்சூ.. ;)
//ஹிஹி அக்காங், நான் இரண்டு வருடமாய் பிரம்மமுகூர்த்ததிலே எழுந்திரிக்கற ஆள் :-) என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே :-)// அதெல்லாம் சும்மா உல்லுலாயிக்கு சொன்னது தம்பி...;) கோவை மாநகரத்தையே கூவி எழுப்பறது நீங்க தான்னு எனக்கு தெரியாதா தம்பி...;) ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு சுமி,
சரியான நேரத்துல உங்க பதிவு படிச்சேன்.என் maid is leaving job ஊருக்கு போகிறாள். நான்கரை , இரண்டரை வயது பிள்ளைகள் எனக்கு.பிளான் பண்ணி வேலை செய்யோணும்.அதிகாலைக்கு welcome. Pudhusa aal vaikka bayamarukku.

எவ்வளவோ பண்ணிட்டோம்,
இத பண்ண மாட்டோமா!

சும்மா லுலுலாய்க்கு சொன்னீங்களா, நெம்ப நன்றிங் அக்காங் :-)
கோவை மாநகரத்தையே கூவி எழுப்பறது நானு இல்லீங்க்கா :-) [யாரோ உங்களுக்கு தவறான தகவல் தந்திருக்காங்க]

நட்புடன்
குணா

அன்புள்ள சங்கீதா,
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள்.
//நான்கரை , இரண்டரை வயது பிள்ளைகள் எனக்கு.// மேனேஜ் செய்வது கஷ்டம் தான்,, குட்டீஸ் தூங்கும் போதே முக்கால்வாசி வேலையை முடிச்சுடுங்க.. நான் அப்படி தான் செய்வேன்.
மீண்டும் எனது நன்றிகள் சங்கீதா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு சுமி,

எங்க அம்மா அடிக்கடி என்கிட்ட சொல்லுவாங்க, ‘காலையில ஒரு பத்து நிமிஷம் முன்னாடி எந்திரி, அரை மணி நேரத்துக்கு முன்னால எல்லா வேலையும் முடிச்சிடலாம்’ அப்படின்னு.

அந்த பத்து நிமிஷம் என்பது டென்ஷன் இல்லாம எல்லா வேலையையும் ப்ளான் பண்ணி செய்து, அரை மணி நேரத்தை சேமிக்க உதவும் என்பது உண்மை.

ஆனா நான் இன்னும் சீக்கிரம் எழுந்து கொள்ளப் பழகவே இல்லையே, என்ன செய்யறது?

உங்க பதிவு படிச்சதும் ஒரு வேகம் வருது, இனிமேலாவது(!) சீக்கிரம் எழுந்திருப்போம் என்று!

பார்க்கலாம், வழக்கம் போல வருடா வருடம் தொடரும் புத்தாண்டு சபதமாக இல்லாமல், இப்ப இருந்து கடைப்பிடிக்கிறேனா என்று.

அன்புடன்

சீதாலஷ்மி

Hi Sumi...
Unga indha katturai enaku rombavae porutthamanadhu.Padikkavae oru putthunarchiya irukku.Nitchayama na follow pannuvan.

No pains,No gains

ANANTHAGOWRI.G

//எங்க அம்மா அடிக்கடி என்கிட்ட சொல்லுவாங்க, ‘காலையில ஒரு பத்து நிமிஷம் முன்னாடி எந்திரி, அரை மணி நேரத்துக்கு முன்னால எல்லா வேலையும் முடிச்சிடலாம்’ அப்படின்னு.// உங்க அம்மாவுமா... ;) ஆனா அது உண்மை தான். என் அப்பா சொல்லுவார், அந்த வேலையை செய்வதானாலும் காலையிலேயே செய்ய வேண்டும், இல்லைனா பதட்டத்துல எல்லாமே எக்கு தப்பா முடிஞ்சுடும்னு...
//ஆனா நான் இன்னும் சீக்கிரம் எழுந்து கொள்ளப் பழகவே இல்லையே, என்ன செய்யறது?// மனுசனுக்கு கஷ்டம்னா தெய்வத்துகிட்ட முறையிடலாம், அந்த தெய்வமே கஷ்டம்னா என்ன சொல்ல...;)
//உங்க பதிவு படிச்சதும் ஒரு வேகம் வருது, இனிமேலாவது(!) சீக்கிரம் எழுந்திருப்போம் என்று!பார்க்கலாம், வழக்கம் போல வருடா வருடம் தொடரும் புத்தாண்டு சபதமாக இல்லாமல், இப்ப இருந்து கடைப்பிடிக்கிறேனா என்று.// உடியும் என்றால் வானம் கூட தொட்டு விடும் தூரம் தானுங்க சீதாம்மா.. உங்க முயற்சி வெற்றி பெறும்..:)
உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் சீதாம்மா...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றி .

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....