ஆத்தா!! _____ ரெக்கார்ட் ப்ரேக் பண்ணிட்டாங்க!!!

முன் கதைச் சுருக்கம் - http://www.arusuvai.com/tamil/node/27198

இன்று 20 / 01 / 2014 - போட்டி முடிவு வெளியிட வேண்டிய தினம்.

'அட! என்னைப் போலவே சிந்திக்கிறாரே!'
பல சந்தர்ப்பங்களில் பலரைப் பற்றித் தோன்றி இருக்கிறது இப்படி.

புத்தாண்டுப் பரிசாக மீண்டும் மனதுக்குள் பெரிதாக ஒரு 'அட!!!'
இருந்தாலும்... பதின்மூன்று நாட்கள் மீதி இருந்தது. அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.
இறுதி நாளன்று நடுவர்கள் தெரிவும் அதே யோசனைதான்.
ரெக்கார்ட் துண்டுகள் தட்டையாகவும் மெல்லிதாகவும் இருப்பதால் ஒட்டுவது சற்று சவாலாக இருக்கிறது. வேலை நடக்கிறது. விரைவில் விளைபொருள் உங்கள் பார்வைக்கு வரும்.

வெற்றியாளர் பெயரைச் சொல்லுமுன் ஒரு க்ளூ...
படத்தைப் பாருங்கள். புரிகிறதா யாரென்று!!

சீதாலஷ்மி!!!! எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். :-)

நீங்கள் கேட்டபடியே, தட்டில் கொஞ்சம் கேக்கோடு... என் வாழ்த்துக்களையும் சேர்த்துப் பரிமாறுகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். :-)
~~~~~~~~~~~~~~~

சீதாலக்ஷ்மியின் யோசனையின்படி சிறு மாறுதலுடன் தயாரான ரெக்கார்ட் பென் ஸ்டாண்ட் குறிப்பு இங்கே - http://www.arusuvai.com/tamil/node/27669

போட்டியில் பங்குபற்றிய ஆதரவளித்த சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

5
Average: 5 (4 votes)

Comments

வாழ்த்துக்கள் சீதா :) பிடிங்க பூங்கொத்து.

இமா.. மேடம் வெளிய போயிருக்காங்க, வந்ததும் மேடைக்கு வருவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள்ங்க மேடம் :-)

நட்புடன்
குணா

வாழ்த்துக்கள் சீதாம்மா

Be simple be sample

வாழ்த்துக்கள் சீதாம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு இமா,

ஆஹா, ஆஹா!! சந்தோஷத்தில் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல:):)

உலக அழகிப் போட்டில ரிசல்ட் அறிவிச்சவுடனே - பரவசமா இருப்பாங்களே, அது மாதிரி, எனக்கு மனசுக்குள்ள ஒரே உற்சாகக் குதியல்!

நன்றி இமா! நன்றி, நன்றி!!!

நேத்து, ஊர் சுற்றப் போயாச்சு, அதனால இந்த இழையைப் பாக்கவேயில்ல, இப்ப வனி கூப்பிட்டு சொன்னதும்தான் பாத்தேன்.

ஒரு பக்கம் சந்தோஷம் கலந்த வெட்கம், இன்னொரு பக்கம் எனக்குத் தெரிஞ்ச எல்லார்கிட்டயும் - பாத்தீங்களா, பாத்தீங்களா என்று சொல்லணும்னு ஆசை!

அழகான கேக் ட்ரேயில் கேக்குகளுடன் கிடைத்திருக்கும் பரிசுக்கும் மிக்க நன்றி இமா! எல்லோருடனும் இந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம்!

என்ன இவ்வளவு சந்தோஷம், ஆர்ப்பாட்டம்னு தோணும். க்ரியேடிவிடி என்பது நமக்கும் இருக்கு, நம்மாலும் இந்த மாதிரி யோசிக்க முடியுது என்பதற்கு இமாவிடமிருந்து கிடைத்திருக்கும் அங்கீகாரம் அல்லவா இது! அதனால்தான் இவ்வளவு பெருமிதமும், பேரானந்தமும்!

வாழ்த்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி!

அன்புடன்

சீதாலஷ்மி