தேவதை வம்சம் நீயோ..!!

இரவு நேரம்.

அந்த உயர்ரக ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் இருந்து ஊர்ந்து வெளியே வந்து கொண்டிருந்த காரில் மகிழ்ச்சி கொப்பளிக்க காணப்பட்டனர் நிரஞ்சனும், நந்தனாவும்.

"நாம இப்படி வெளியில வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு நந்து"

"ம்.நம்ம தொழிலே நம்ம நேரத்தை எல்லாம் எடுத்துக்குது நிரூ"ஏக்கம் எதிரொலித்தது நந்தனாவின் குரலில்.

"ஒரு தொழில் போதும்னு சொன்னேன்,கேட்டியா நீ?பாக்குமட்டையில ஆரம்பிச்சு வாழை,பனையைத் தாண்டி சணல்ல வந்து நிற்கறே"

"என்ன நிரூ! நம்மால எவ்வளவு பேர் பயன் அடையறாங்க!இயற்கையை காப்பாத்தறோம்..."

"ஆதரவற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பு!நம்மளோட"ஒளி"அமைப்பு ஒளிமயமா நடந்துட்டிருக்கு!எல்லாத்தை விடவும் என்னோட நந்துகுட்டிக்கு ஆத்ம திருப்தி கிடைக்குது"

"அதே!அதே ஹீரோ"

கார் சாலைக்கு வந்திருக்கவும்,அவர்களை கடந்து சென்றது இருசக்கர வாகனமொன்று.

"நந்து"

"ம்"

"எனக்கும்...அவங்களை மாதிரி...பைக்ல உன் கூட பாஸ்ட்டா..."

"ஹலோ..ஹலோ...நமக்கு கல்யாணமாகி பன்னெண்டு வருஷம் ஆச்சு"

"அப்படியா!எனக்கென்னவோ...நீ உங்க வீட்டில மஸ்டர்டு யெல்லோ பட்டு சாரியில உன் ரூம் கதவு பின்னாடி ஒளிஞ்சுட்டு என்னை ஆசை...ஆசையாய் பார்த்திட்டிருந்தியே..."

"இருங்க!இருங்க!நான் ஆசையா ஒண்ணும் பார்க்கலை..."

"ம்"

"எதாவது உளறி...அப்பா கிட்ட...சொதப்பிடுவீங்களோனு பயத்தோட பார்த்திட்டிருந்தேன்"

"நான் சொதப்பறனா??இன்னைக்கு வரைக்கும் நம்ம கல்யாணம் "அக்மார்க் அரேஞ்சுடு மேரேஜா" இருக்கே,எப்படி,யாரால?"

"சரி!சரி!நீங்க சமர்த்துதான்!நான் ஆசையாதான் பார்த்தேன்!போதுமா"

"அது!இப்பவும் அப்ப மாதிரியே ஆசையா பார்க்கிறயா...எனக்கு வருஷம் ஓடறதே தெரிய மாட்டீங்குது ப்யூட்டி"

"காரை நிறுத்துங்க"

"என்ன நந்து,என்ன ஆச்சு"

"அந்த பஸ் ஸ்டாப்ல பாருங்க!ஒரு பொண்ணு..."

மனைவியைத் தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்தினான் நிரஞ்சன்.

அந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணிடம் நான்கு ஆடவர்கள் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க,இருவரும் காரில் இருந்து இறங்கி ஓடினர்.

அழுத முகத்தோடு இருந்த அப்பெண் காலடிச் சத்தத்தில் உதவி வேண்டி இருவரையும் எதிர் கொண்டு ஓடினாள்.

"அக்கா..அக்கா...என்னை காப்பாத்துக்கா..அண்ணே.."

"நீ பயப்படாதேமா!என் ஹஸ்பெண்ட் பெரிய போலீஸ் ஆபிசர்"

அப்பெண்ணைத் துரத்திக் கொண்டு வந்த கயவர்கள் "போலீஸ்"என்ற வார்த்தையில் மிரண்டு தலைதெறிக்க ஓடத் துவங்கினர்.

"டேய்!உங்களை எல்லாம் இப்பவே என்கவுன்டர்ல..."

"நிரூ!அவங்க எல்லாம் ஓடிட்டாங்க!இன்னும் எதுக்கு டயலாக் பேசிட்டு இருக்கீங்க"
என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.

"யாரும்மா நீ!உன் வீடு எங்க இருக்கு"

அப்பெண் பதில் பேசாமல் கண்ணீரோடு கீழே கிடந்த தனது கூடையை எடுக்க,
அதில் சின்ன சின்ன பொம்மைகள் இருந்தது.நந்தனா அப்பெண்ணை அளவிடுவது போல் பார்த்தாள்.இருபது வயது இருக்கும்!பொம்மை விற்கும் பெண்!பாவம்!தாய்,தந்தை இல்லையோ...வீட்டிற்கு வழி தெரியாமல் தவிக்கிறாளோ...இல்லை...எதுவும் பிரச்சனையோ...!

"உன் அட்ரஸ் சொல்லுமா"

"வீடு..வீடு...வேண்டாம்"

"எங்க கூட வர்றயாமா"

அப்பெண் ஒரு திடுக்கிடலோடு நந்தனாவைப் பார்த்தாள்.அவள் கண்களில் பயமும்,சந்தேகமும் ஒருங்கே தோன்றியது.ஒரே துணையான தாய் மறைந்த பின்பு இந்த உலகில் வாழ்வது...தினமும் ஒரு போராட்டம்தான்!எத்தனை பேர் இவர்களைப் போல் அழைத்து..நம்பி சென்று...தப்பி வருவதே வேலையாகப் போய் விட்டது!!குடிசையிலும் பாதுகாப்பு இல்லை!வேலைக்கு சென்றாலும் தொல்லை!கடவுளே!!

"இங்க பாருமா"

அப்பெண் நிமிர்ந்து பார்க்க,காரிலிருந்த தன் கைப்பையில் இருந்து பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அவளிடம் கொடுத்தாள் நந்தனா.

"இதை வச்சுக்கோ!இங்க அமுத்தனும்!உனக்கு எங்கனால ஆபத்துனு தோணுச்சுனா...இந்த மிளகாய் பொடியைத் தூவிட்டு தப்பிக்கலாம்"

கார் பின் கதவை நந்தனா திறந்து விடவும் நம்பிக்கை துளிர்த்த மனதோடு எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள் அப்பெண்.

"போலாம் நிரூ"

"என்ன மூட்அவுட் ஆயிட்டியா"

"இந்த காலத்தில எல்லா பொண்ணுக கையிலயும் மொபைல் இருக்கு!அதே மாதிரி ஒரு பெப்பர் ஸ்பிரேவையும் வைச்சுக்கனும்!"

"என் நந்துகுட்டிக்கு ஒரு பலத்த கைதட்டல்!விசில்.."

"நிரூ.."

"நான் சீரியஸாதான் சொல்றேன் நந்து!நீ சொன்னது நூற்றுக்கு நூறு சரி! மொபைல்,மேக்கப் ஐடம்ஸ்,பணத்தை விட அவசியமானது,அத்தியாவசியமானது
பெப்பர் ஸ்பிரேதான்!அப்பதான் இந்த மாதிரி மோசமான ஆளுக,திருடங்க கிட்ட இருந்தெல்லாம் தப்பிக்க முடியும்"

கணவனின் பேச்சை ஆமோதித்தபடியே தனது கைபேசியை காதிற்கு கொடுத்தாள்
நந்தனா.

"அத்தை!எங்க இருக்கீங்க"

"கிளம்பிட்டீங்களா!நான் பத்து நிமிஷத்தில வரேன் அத்தை!பை"

"என்ன நந்து!அம்மா இன்னும் வீட்டுக்கு போகாம இருக்காங்களா"

"எதாவது முக்கியமான வேலையா இருக்கும் நிரூ"

மூன்று பெரிய கட்டிடங்கள் ஒரே வளாகத்தினுள் நின்றிருக்க,அதனுள் சென்று நின்றது நிரஞ்சனின் கார்.மின் விளக்குகளின் ஒளியில் "ஒளி"என்ற பெரிய எழுத்துக்கள் முகப்பில் மின்ன,அதனருகில் "நிமிர்ந்து நில் பெண்ணே!!"என்ற வரி பளீரிட்டுக் கொண்டிருந்தது.

அருகருகே இருந்த கட்டிடங்களில் ஒன்று ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி,மற்றொன்று பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையம்,இறுதியானது யோகா,தியானத்தோடு தற்காப்பு கலைகளும் பயில்விக்கும் கூடம்!

நந்தனாவின் பத்து வருட உழைப்பிலும்,முயற்சியிலும் உருவானதே இந்த "ஒளி" அமைப்பு!!இருளில் தவிக்கும் பெண்களின் வாழ்விற்கு ஒளியேற்ற உருவாக்கிய அமைப்பை,இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தின் துணையோடு செவ்வனே நடத்தி வருகிறாள் நந்தனா.

இரவு நேரம் என்பதாலோ எங்கும் நிசப்தம் நிலவியது!

"நீ இங்க தங்கிக்கலாம்!உனக்கு எந்த பிரச்சனையும் வராது!இறங்கி வா"

நிரஞ்சனும்,நந்தனாவும் முன்னே செல்ல அவர்களைப் பின் தொடர்ந்தாள் அப்பெண்.

வரவேற்பில் காத்திருந்த சத்யவதி மருமகளைக் கண்டு எழுந்து வந்தார்.

"என்ன நந்தா...யாரிந்த பொண்ணு"

"அத்தை...இந்த பொண்ணு பஸ் ஸ்டேன்ட்ல நின்னுட்டு இருந்துச்சு.."

அப்பெண்ணின் முகத்தை கனிவுடன் பார்த்தார் சத்யவதி.

"உன் பேர் என்னம்மா"

"மல்லி"

"சாப்பிட்டியா"

"இல்லை"

"சரி!சாப்பிடலாம் வா"

சத்யவதியின் கனிவான குரலில் மறு பேச்சில்லாமல் அவரோடு சென்றாள் மல்லி.

நிரஞ்சனும்,நந்தனாவும் நிம்மதி அடைந்தவர்களாய் ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

மனைவியையே கொஞ்சம் காதலோடும்,கொஞ்சம் கர்வத்தோடும் பார்த்தான் நிரஞ்சன்.

"என்ன பார்வை உந்தன் பார்வை"

"காதல் பார்வைதான் நந்து"

"எதுக்கு இப்ப இந்த பார்வை"

"எப்பவுமே காதல் பார்வைதான் கண்ணே"

"உஷ்.."

"எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு நந்து!எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி பண்ற
இந்த தேவதை எனக்கு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்தான்"

"ம்ஹூம்!இது நான் சொல்ல வேண்டியது நிரூ!நான் ஆசைப்பட்டேன்னு... எனக்காக இந்த ஒளி அமைப்பை ஏற்படுத்தினதோட துணையாவும் நிற்கறீங்க"

"என்னடா இது"

கணவனின் நேசத்தை நினைத்தாலே நந்தனாவின் உள்ளம் உருகி,விழிகள் வழிந்து விடும்!!

"நந்து!என்னை பார்த்தா பாவமா இல்லையா"

"ஏன்"

"அம்மா வந்து..உன் கண்ணீரை பார்த்தாங்க...அவ்வளவுதான்!என் மருமகள் கண்ணில் கண்ணீரானு...என்னை வீட்டைவிட்டு அனுப்பிடுவாங்க"

"அத்தை...அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க"

"கண்டிப்பா செய்வாங்க!நீயும்,அந்த ஐஸ்சும்தானே அவங்களுக்கு செல்லம்"

"என்ன நந்து!நிரஞ்சன் என்ன சொல்றான்"

"இந்த உலகத்திலயே பெஸ்ட் அம்மா,பெஸ்ட் மாமியார் இரண்டுமே நீங்கதான்னு சொல்றார் அத்தை"

"யாரு இந்த போக்கிரியா"

நந்தனாவின் கைபேசி சிணுங்கியது.

"ஐஷூவாதான் இருக்கும்!நிஜந்தனை வர வேண்டாம்னு சொல்லிடு நந்து"

"அக்காதான் அத்தை"

"ஹலோ ஐஸ்"

"என்ன நந்து!எங்க போனீங்க எல்லாரும்!அத்தை பக்கத்தில இருக்காங்களா! வீட்டுக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்கீங்க"

"சாரி ஐஸ்!வீட்டுக்குதான் கிளம்பிட்டு இருக்கோம்!நாங்க வந்துடுவோம்!நிரூ இருக்கார்"

"சீக்கிரம் வாங்க!பை"

"போலாம் அத்தை!ஐஸ் கோபமா இருக்காங்க"

"அவளுக்கு நீ எப்பவுமே குழந்தைதான் நந்து!கொஞ்சம் லேட்டானாலும் டென்சன் ஆயிடுவா"

"அண்ணன்தான் பாவம்!ஐஸ் புலம்பலை கேட்டு கேட்டு காதில ஓட்டை விழுந்துடுமோனு பயந்துட்டு இருக்கார்"

"நிரஞ்சா..."

"சரி!சரி!போலாம் வாங்க"

"மல்லி எதாவது சொன்னாளா அத்தை"

"இல்லைடா!நான் எதுவும் கேட்கலை!இரண்டு நாள் போகட்டும்"

"ராதாக்கா கிட்டயா விட்டீங்க"

"ஆமாடா"

அரைமணி நேர பயணத்திற்கு பிறகு மூவரும் வீட்டினுள் செல்ல,ஐஸ்வர்யா அவர்களைச் செல்லமாக கடிந்து கொண்டாள்.

"கோவிச்சுக்காதே தங்கம்"மூத்த மருமகளை சத்யவதி சமாதானப்படுத்த.

"சாரி ஐஸ்!குட்நைட்!நாளைக்கு பிளாஷ் பேக் சொல்றேன்"

"குட்நைட் அண்ணி!குட்நைட் மா"

நிரஞ்சனும்,நந்தனாவும் ஹாலிலிருந்து தங்கள் அறை நோக்கி நகர்ந்தனர்.

மாடிக்குச் செல்ல பாதி படிகளை கடந்தவள் படியிலேயே நின்று விட திரும்பிப் பார்த்தான் நிரஞ்சன்.

"என்ன நந்து"

நந்தனா தன் கைகளை நீட்டவும்,அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு மீதிப் படிகளைக் கடந்து தங்கள் அறைக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.

"என்ன நந்து இவ்வளவு வெயிட்டா இருக்கே"என்றான் இறக்கி விட்டபடி.

"நான் ஒண்ணும் வெயிட்டா இல்லை"

"தூக்கின எனக்குதானே தெரியும்" சோபாவில் அமர்ந்த நிரஞ்சன் மூச்சு வாங்குவது போல் பாவனை செய்தான்.

நந்தனா முறைக்க,"இப்படி வாரத்துக்கு நாலு கிலோ ஏறிட்டு இருந்தே...அப்புறம் நீ..."

நிரஞ்சன் முடிப்பதற்குள்ளாகவே அவன் முதுகில் ஓர் அடி விழுந்தது.

நந்தனாவிடம் செல்ல அடி வாங்காமல் நிரஞ்சனின் நாள் முடிவுறாது!!

"நான் அம்பத்தைஞ்சு கிலோதான் இருக்கேன் தெரியுமா"

"தெரியும் ப்யூட்டி"என்றவன் அவள் கைகளைப் பற்றி இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான்.

"நீ!ஆண்டவன் எனக்காகவே அனுப்பி வைச்ச பிப்டிபைவ் கேஜி பொக்கே"

"அப்புறம்"

"என்னோட அன்பு தேவதை!தப்பு!தப்பு!நீ எல்லாருக்குமே தேவதைதான்!"

நந்தனா கைகள் எழுந்து அவன் சிகையை கலைத்தது.

"அப்புறம்"

"என் பட்டு ரோஜா"

"அப்புறம்"

"என் புட்டு பாப்பா"

"அப்புறம்"

இக்கதை முடிவில்லாதது என்று புரிந்தது போல் விண்ணிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவு தனது பவனியை தொடர்ந்தது.

Average: 5 (1 vote)

Comments

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க, கதையின் போக்கிலேயே ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திச்செல்வது மிகவும் அருமைங்க,
வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

வாங்க குணா,

இரண்டு பக்கமும் கமென்ட் போட்டிருக்கீங்க,ரொம்ப நன்றி குணா :)

//கதை ரொம்ப நல்லாயிருக்குங்க// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா :)

//கதையின் போக்கிலேயே ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திச்செல்வது மிகவும் அருமைங்க//

கவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு மிகவும் நன்றி குணா :)

முதல் பதிவிற்கும்,வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் குணா :)

அன்புடன்
நித்திலா

அருமை நித்தி . காதலோடு கருத்தும் சூப்பர்

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ்,

//அருமை நித்தி//காதலோடு கருத்தும் சூப்பர்//

ரொம்ப சந்தோஷம்டா.தேங்க்ஸ்டா ரேவ்ஸ் :)

வருகைக்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிடா ரேவ்ஸ் :)

அன்புடன்
நித்திலா

கதைக்குள்ள மூழ்கி போயிட்டேன் நித்திலா, காதலோடு விளையாட்டு பேச்சுக்கள் அருமை!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நல்லா இருந்துது கதை.. எப்போதும் போல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ரேணுகா,

என் கதை பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//கதைக்குள்ள மூழ்கி போயிட்டேன் நித்திலா, காதலோடு விளையாட்டு பேச்சுக்கள் அருமை//

கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு,நன்றி ரேணு :)

உங்கள் உற்சாகமான பாராட்டு மனதிற்கு மகிழ்வையும்,நிறைவையும்

தருகிறது தோழி.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தோழி :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் வனிதா,

//நல்லா இருந்துது கதை.. எப்போதும் போல//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி வனிதா :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா

கதை அருமை நித்திலா நிறைய கருத்துக்களுடன் சிறு காதலுடன் நீங்க எழுதியிருக்கும் விதம் நல்லா இருக்கு நித்தி. கதாபாத்திரங்களின் பெயர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

இந்த கதை மிகவும் இனிமையாக இருந்தது. படிக்க படிக்க ரொம்ப இனிமையாக இருந்தது. இந்த கதையிருந்து தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும், அப்புறம் அத்தை அம்மாவாக இருக்காங்க .கணவன் மனைவி ஒற்றுமையாகவும் , அன்பாகவும், விட்டு கொடுக்குற குணம் மிக அருமையாக இருந்தது.

நித்திலா, கதை சூப்பர். உங்கள் கதையெல்லாம் எப்போதும் படிப்பேன். வழக்கம் போல அழகான கதை.
வாணி

ஹாய் தேவி,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//கதை அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி :)

//நிறைய கருத்துக்களுடன் சிறு காதலுடன் நீங்க எழுதியிருக்கும் விதம் நல்லா இருக்கு நித்தி.//

உங்களுடைய மனமார்ந்த பாராட்டில் என்னுள்ளம் நிறைவு பெற்றது.உங்கள்

பாராட்டில் இருக்கும் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது.அடுத்த

கதைக்கு என்னுள் வித்திட்டு விட்டது தேவி :)

நித்தியென்ற அழைப்பில் மனதோரம் ஓர் இதம் :) ஸ்பெஷல் தேங்க்ஸ் தேவி :)

//கதாபாத்திரங்களின் பெயர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//

ரொம்ப சந்தோஷம்டா தேவி,கதாபாத்திர பெயர்களை ரசித்து,பகிர்ந்து

கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :)

தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் தோழி :)

அன்புடன்
நித்திலா

ஹாய் பாலா,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//இந்த கதை மிகவும் இனிமையாக இருந்தது. படிக்க படிக்க ரொம்ப இனிமையாக இருந்தது//

கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி.உங்கள் கருத்தை வாசித்து

என் மனதிலும் ஓர் இனிமை படர்ந்தது.நன்றி தோழி :)

//இந்த கதையிருந்து தெரியாதவங்களுக்கு உதவி செய்யனும், அப்புறம் அத்தை அம்மாவாக இருக்காங்க .கணவன் மனைவி ஒற்றுமையாகவும் , அன்பாகவும், விட்டு கொடுக்குற குணம் மிக அருமையாக இருந்தது//

பாலா,அழகுற வரிசைப்படுத்தியதற்கு மகிழ்வடைவதா,நிறைவடைவதா,

எனது அன்பான நன்றிகள் ஆயிரம் தோழி :)

தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் வாணி,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//கதை சூப்பர்// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி :)

//உங்கள் கதையெல்லாம் எப்போதும் படிப்பேன்//

ரொம்ப நன்றி வாணி.நீங்கள் என் கதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறீர்கள்

என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.மௌனம் கலைந்து பேசியதற்கு

எனது நன்றிகள் தோழி.

//வழக்கம் போல அழகான கதை//

அளவில்லா ஆனந்தம் கொண்டேன்.எனது அன்பான நன்றிகள் வாணி :)

என் கதைகளை வாசித்ததற்கும்,முதல் வருகைக்கும்,கருத்திற்கும்

மீண்டும் எனது நன்றிகள் தோழி :)

அன்புடன்
நித்திலா

அன்பு நித்திலா,

அன்பும் ஆதரவும் காட்டும் உங்கள் கதையின் தேவதைக்கு, அருமையானதொரு குடும்பத்தையும் அமைச்சு கொடுத்திருக்கீங்க.

இந்தக் கதையில் வரும் தேவதை போல, மற்றவர்களுக்கு உதவும் பெண்கள் - எல்லா இடங்களிலும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.

எப்பவும் போல - கனிவும் காதலும் நிரம்பிய உரையாடல்களுடன் கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி