நாகை - ஒரு இனிய சந்திப்பு

மன்றத்தில் இருந்து புதைந்து விடும் என்பதால் ப்லாகில் போட சொன்ன தோழிகளுக்காக...

கை பர பரனு எப்படா எழுதுவோம்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். இப்ப விட்டா நல்ல சமயம் கிடைக்காது. எல்லாரும் அவங்க பங்குக்கு சொல்லிட்டாங்க. நான் சொல்லாம எப்புடி?
நாகை சந்திப்பு பற்றி தோழர் பாபு சொன்னதும், முதலில் நினைவுக்கு வந்தது, கோவை சந்திப்பிற்கு அவருடன் சேர்ந்து எல்லா பிளானும் போட்டு கடைசியில் காய்ச்சலால் போக முடியாமல் பல்பு வாங்கியது தான்.அதனால் இம்முறை என் ஆர்வ கோளாறை எல்லாம் மூட்டை கட்டி வைத்து பொறுமையா காத்திருந்தேன். என்னவருக்கு லீவு கிடைத்ததும்,வேறு முகுர்த்தங்களின் காரணங்களால் எங்கள் வீட்டு பெரியவர்களால் எங்கள் திருமண நாளுக்கு சென்னை வர இயலாத காரணத்தாலும் நாகை செல்வது உறுதியானது. ஒரே நாளாக இருந்தாலும் சரி என நாகை செல்ல ஆயத்தமானோம். கோவிலுக்கும் செல்ல ஆசை.அம்மா வீட்டில் தனியா இருக்க வேணாம் என தம்பியை வந்து தங்க சொல்லி டிக்கெட் புக் செய்தோம். கார் வாசலில் 10.15க்கு வந்து வெயிட் செய்யது, எங்க ஆளு அவசர அவசரமாய் 10 மணிக்கு வந்தாரு.இது எப்பவும் எங்களுக்கு நடப்பதே. எடுக்க வேண்டிய கேமராவை கூட எடுத்து வெக்கல. போக போறதில்லே என்றே நினைத்து விட்டேன். எல்லாருக்கும் க்வில்டு ஃப்ரெம் செய்து சந்திப்பு ஃபோட்டோவை போட்டு கொடுக்க ஆசை. ஆனால் வழக்கம் போல அதெல்லாம் செய்ய முடியலே :(

ஸ்வரு - இவரை பற்றி தான் சொல்லி ஆகணும். நீங்க வாங்க கோவிலுக்கு போறது பத்தி நாங்க பாத்துக்கறோம்னு அக்கறையாய் சொன்னாங்க. இவங்களை பத்தி கடைசியா சொல்றேன்..

சந்தேகத்துடனே ஒரு வழியா பஸ் ஏறிட்டோம்.நம்பவே முடியல. இரவு அட்மின்க்கு கால் பண்ணும் போதெல்லாம், அந்த பக்கம் நம்ம மக்களின் ஆராவாரமான சத்தம் எனக்கு இந்த பக்கம் கடுப்பை கிளப்பியது. என்ன செய்ய..எக்சைட்மண்ட்ல தூக்கமும் இல்ல. தோழர் பாபுவின் இரவு நேர பணி பற்றி தெரிஞ்ச காரணத்தால் சங்கடமே படாம பஸ் ஏறியதில் இருந்து அவருக்கு அப்டேட் செய்துட்டே இருந்தோம். காலை ரீச் ஆனதும், பாபு அவர்களை அழைத்த வேகத்தில் வந்தார்.அப்பவும் நம்ப முடியவில்லை.காரில் அதிகாலை ஏறியதும் ஹாப்பி வெட்டிங் சொல்லி சாக்லேட் பாக்ஸ் ஒன்றை கொடுத்து சிலிர்க்க வைத்தார். அடிக்கடி பேசியதாலா என்னவோ எங்கள் இருவருக்குமே தோழர் பாபுவை பார்த்ததும் அன்று தான் முதன் முதலில் சந்தித்ததை போல உணர்வே ஏற்படவில்லை.பலமுறை பார்த்து பழகியது போல ஒரு உணர்வு.

ரூமுக்கு அழைத்து வந்து, சிம்பிளா தான் இருக்கும் என்று சொல்லி அவரது சிம்ப்ளிசிட்டியை காட்டினார். முதலில் நான் கேட்டது சீதாலஷ்மி ரூமை தான். ஏனா அவரை தான் முன்னமே பார்த்து இருக்கேன். அட பக்கத்து ரூம் தானா? அதிகாலையிலேயே தட்டி இருக்க வேண்டியது. போனா போட்டும்னு விட்டேன் சின்ன பொண்ணு தானே என...சரி, ஒரு ரெண்டு மணி நேரம் நல்லா தூங்கி எழலாம் என நினைத்தால் இந்த தூக்கம் எங்கே வந்தது?

பின் ஒரு 8.30 மணிக்கு எழுந்து , பிரஷ் பண்ணிட்டு ,கதவருகே நைசா காத வெச்சு வராண்டாவில் யாராவது இருப்பாங்களான்னு யோசிச்சேன்.. அட குளிக்காட்டி என்ன போயி நம்ம பசங்க தானே என கதவ திறந்து வெளியே வந்து பார்த்தா, அந்த கடைசியில் ஒரு குட்டி பொண்ணு.. அட நம்ம இமா தான். நானே இமா என கத்தி, நான் தான் ரம்யா என சொல்லி, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம , குளிக்காமலேயே கட்டி பிடிச்சுட்டேன்.அவங்களும் தான்.ஆனா அவங்க சூப்பரா ஃபிரஷா ரெடி ஆகி இருந்தாங்க.என்ன ஒரு தருணம் அது. ?

அப்றம் , பொறுமை இல்லாம சீதாலஷ்மி கதவ தட்டி, அங்கிள் தான் பேசினாரு.மேடம் ரெடி ஆயிட்டு இருந்தாங்க. அப்புறம் அவங்களையும் அதே கெட்டப்பில் கட்டி பிடிச்சு, அப்புறம் என்ன, உள்ளே வந்து நான் புறப்பட்டேன்.

அப்புறம் அட்மின் எல்லாரையும் அறிமுகபடுத்த ஏக சந்தோசம். செல்வி அவர்களையும், சாதிகா அவர்களையும் சந்தித்தேன்.அதிகம் முன் பேசியது இல்லை என்றாலும் மிக இயல்பாக பேசினார்கள்.கனிமொழி குடும்பத்தாரும் அப்படியே ,அவங்க வீட்டு பெரியவங்க தான் சுட்டி என கேள்விபட்டேன்.குணா அவர்களை கண்டு எங்க ஊரு தமிழ் கொங்கு தமிழை கேட்டதும் அளவில்லா மகிழ்ச்சி. அநியாயத்துக்கு அமைதியா இருந்தாரு.கல்ப்ஸ் குடும்பத்தாரையும், கல்ப்ஸ்ஸையும் பார்த்து ஏனோ வித்தியாசமாக தோன்றவில்லை. .பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி சகஜமா பேச தொடங்கினோம். அவரது குட்டிசும் படு சமர்த்து.இதே உணர்வு தான் எனக்கு ஸ்வருவிடமும் தோன்றியது. காலை உணவு சரியாக சாப்பிடமுடியாமல் போனது. பின் அட்மின் எல்லாரையும் அழைத்துக் கொண்டே சென்றபடி இருந்தார்.என்னவருக்கும் புதியவர்கள் என்ற எண்ணம் இல்லை.
கடைசியாக செல்லகுட்டி நவீனாவும், குழந்தை சிரிப்பு மாறாத சென்பகாவும் வந்து சாக்லேட் தந்து வாழ்த்தி கோவிலுக்கு அழைத்து சென்று அர்ச்சனை செய்தனர். எங்கள் மனம் நெகிழ்ந்து விட்டது.

பெரிய அமைப்பான வீடு. உள்ளே நுழைந்ததும், தோழர் பாபுவின் தாயார் வரவேற்றார். ரொம்ப பெரியவங்களை எதிர்பார்த்திருப்பார் போல, அட சின்ன பசங்களா இருகிங்களே என சொல்லி எங்களை அளவில்லா மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். :) ஹிஹிஹி ..

ஒரே கப்சிப்..அட்மின் பின்னாடியே போனோம். ஒரு அறைக்கு போனதும்,திடிரென எல்லாரும் ஒருமித்த குரலில் கோரசாக கைதட்டியபடியே வாழ்த்து சொன்னதும், ஒரு நிமிஷம் ஷாக்... ஒரே எம்பேரஸசிங்கா ஆச்சு.அத்தனை பேரின் அன்பு நிறைந்த ஆசிகளில் நனைந்து குடும்பத்தாரை இந்த நாளில் பிரிந்து இருக்கிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் கண்களில் நீர் வர வைத்தனர்.அன்றே.. நினைத்தேன்.. இந்த வருடம் முக்கியமானதாக எங்கள் வாழ்க்கையில் அமையும் என ...சீதாலஷ்மி பாக்கெட் நிறைய இனிப்புகளை கொடுத்து .வாழ்த்தினார்.

டேபிளில் ஒரு பெரிய கேக் வைத்து வெட்ட சொன்னார்கள். நவீனா எங்களை காப்பாற்றிவிட்டார். அப்பவும் விடாமல் ஊட்டி விடுங்க என சத்தம். வேறு வழி. எள்ளளவும் நினைக்கவில்லை இத்தனை சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுமென.செண்பகா வேணாம் என சொல்ல கேட்காமல் எல்லார் சார்பிலும் அன்பளிப்பை கொடுத்தார். இதில் மிக துருதுருவென ரகளை செய்தது, பத்மா ,ரேவதி, மற்றும் சுபத்ரா தான்.

அட்மின் ஆபிஸ் 2 ,3 கணினியுடன் சிம்பிளாக இருக்கும் என உள்ளபடி நினைத்தேன், ஆனால் வைபரண்ட் ப்லூவில் அழகான ஆம்பியன்ஸ் கொண்டு குட்டி எம் என் சி ரேஞ்சில் இருந்தது. அட்மினின் ரூமும் அப்படியே.எதுமே வாங்க முடியாமல் கடவுள் புண்ணியத்தில் தங்கிய விடுதியின் கீழேயே உள்ள கடையில் நவீனா , வர்ஷா க்கு ஒரு ஒரு பார்பியும், ராகுலுக்கு ஒரு ஆட்டோவும் வாங்கினோம். பிடித்ததா என தெரியவில்லை.கல்ப்சின் மாமா அத்தை அடிக்கடி என்னை பார்த்துட்டே இருந்தாங்க. பின் அருகில் வந்து பாசமா எங்க பொண்ணு பெரும் ரம்யா தாம்மா என சொன்னங்க.சாதிகா அவர்களின் சகோதரியும் சிரித்த முகம். இமா அவர்களை பேசவிட்டு ரசித்து கொண்டு இருந்தோம். கனியும் அவரது அக்காவும் ஒன்று போல.. பாவம் செல்வி அவர்களிடம் பி எஸ் என் எல் பற்றி என்னவர் முதல் கொண்டு சிலர் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

கல்ப்சின் தங்கை கல்ப்சை விட கலகலன்னு பேசிட்டு இருந்தார்.
நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ஸ்வருவும், அவரது ஆத்துக்காரரும் அங்கே வந்து மேலும் இடத்தை ககலப்பாக்கினார்கள்.
சீதாலஷ்மி தான் துருதுருவென ஏதாவது செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தார்.என்னையும் அவரையும் நம்பி பாவம் செண்பகா, பத்மா, ரேவதி, சுபா எங்கள் அணியில் சேர்ந்தனர்.ஆனால் நாங்கள் கேடி தனமா பலவற்றை செய்தோம்.

சீரியசாக விளையாட சீட்டுகளை எழுத தொடங்கினார் கல்ப்ஸ்.ஒரே சத்தம், சிரிப்பு, குதூகலம் , சந்தோசம், அரட்டை மட்டுமே...அறுசுவை புதிய தளத்தை அட்மின் காட்ட எல்லாரும் ஆர்வத்துடன் கண்டோம். சீதாலஷ்மி அங்கிளின் சீரியல் சீன் ஒன்றை ரசித்தோம்.

லவேரியா பெயரை கண்டுபிடிப்பதற்குள் போதும் என்றாகிவிட்டது.ஆண்களை எல்லாம் ஒரு டீமில் போட்டு கொடுமை படுத்திவிட்டோம்.நாட்டாமை என்ற பெயரை அங்கிளை விட்டு நடிக்க சொன்ன போது அவர் ஒரு எபிசோடுக்கு தேவையான அளவு அருமையாக நடித்து காட்டி தூள் கிளப்பிவிட்டார்.கடைசியாக ஒரு சொம்பை காட்டி குணா அவர்கள் நொடியில் நடித்து காட்டினார்.அவ்வபோது ஸ்வருவின் ஆத்துக்காரர் சிரிப்பு வெடிகளை போட்டுக் கொண்டே இருந்தார்.

எதேச்சையாக நான் கவனிக்கும் போது தான், " நீயே போயி குடு " என்ற வாக்கியத்தை மிரட்டலுடன் சேர்த்த கணீர் குரலில் நவீனா பத்மாவை மிரட்டிய அந்த பயங்கர காட்சியை காண முடிந்தது. ஒரு குட்டி பூவுக்குள் இத்தனை சத்தமா என்று தோன்றியது.. சிரிப்பை அடக்க முடியவில்லை.
அட்மினின் சகோதரியும் பிள்ளைகளும் அப்போது வந்தனர்.அட அவர்களும் ரொம்ப பழகியவர்கள் போல பேசினார்கள்... :)

மழைக்கும் , வீட்டின் சிட் அவுட்டில் நிற்கவும் குளுமையாக இருந்தது.பல விதமான உணவு வகைகள் பரிமாற பட நாங்கள் சைவத்தை உண்டோம். அன்று ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்று மெனுவை படித்த உடன் டென்சனாகி போனேன்.. சரி அடுத்த முறை சாப்ட்டுக்கலாம்.இப்படி எல்லாம் ஏற்பாட்டை தோழர் பாபுவால் தான் செய்ய முடியும்..தோழர் நாகை சிவா அவரின் குடும்பத்தாரை காண முடியவில்லை என்ற குறை தான் எங்களுக்கு.. :(

பிறகு என்ன.. மீண்டும் அரட்டை தான்.. கமல் நடிகரை மூன்றே க்லுவில் அழகாய் சாதிகா கண்டுபிடித்தார்.ஆண்களை மட்டும் ஒரு குழுவாய் போட்டு அதற்கு அப்பப்ப என்னவர் அடித்த கமன்ட்களை அனைவரும் ரசித்து சிரித்த வண்ணம் இருந்தனர்.செல்வி அவர்கள் மனதில் நினைத்த உப்மா வை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த ஆண்கள் அணியும், அதை நான் கண்டுபிடித்து செல்வி அவர்களை டென்சனாக்கி ஆண்கள் அணிக்கு க்ளு கொடுத்தும் பயன் இல்லை. அவர்கள் கண்டுபிடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, என்னவரை நான் கண்களால் மிரட்டி சொல்ல வைக்க முயல, மற்ற அங்கிள்ஸ் எல்லாம், எனக்கும் இந்த குழுக்கும் சம்மந்தமே இல்லை என எங்காளை டீலில் விட, அவர் மற்ற மூன்று குழுக்களும் ஆளுக்கு ஒன்றாக எங்களை பிரித்து எடுத்து கொண்டு இனி இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார் பாவம்.

இன்னும் கலகலவென சென்றது ஃபோட்டோ செஷன் தான். காற்று பலமாக அடிக்க , யாரின் தலைமுடியும் ஒழுங்காய் இல்லை.. தோழர் பாபு மட்டும் டீக்கா ட்ரஸ் பண்ணிட்டு வந்துட்டாரு.மாடல்ஸ்களை படம் எடுப்பது போல நிறைய காமிராஸ் . படம் எடுக்கையில் யார் வாயும் சும்மா இல்ல.. பேசிட்டு சிரிச்சுட்டு கத்திட்டு... அட ஒழுங்கா நில்லுங்கப்பா.. என சொல்ல தேவையாய் அலுச்சாட்டியம் செய்தோம். பின் பாபு அவர்கள் வீடியோ எடுக்க தொடங்க உல்டாவாய் எல்லாரும் கப்சிப். ஃபோட்டோக்கு வீடியோவில் இருக்க வேண்டியது போல கலகலன்னு பேசிட்டு , வீடியோவில் ஃபோட்டோவில் இருக்க வேண்டியது போல சமர்த்தா நின்னு ஃபோட்டோ எடுப்பவர்களை கடுப்பாக்கினொம். :)

பின் அவசர அவசரமாக கோவிலுக்கு கிளம்பி , போயி சேர முடியாதோ என்ற டென்ஷன் தோழர் பாபு முகத்திலும், விஜய் அண்ணன் அவர்களின் முகத்திலும் தெரிந்தது. அனைவரிடமும் பிரியா விடை வேறு வழியின்றி கொடுத்து, எட்றா வண்டியை என்பது போல சொல்லி, விஜய் அண்ணா காரை வேகமாக எங்களுக்காக அடித்து ஓட்டினார் பாவம். இந்த மழை காலத்திலும், இருட்டிலும் அவர் எங்களுக்காக எடுத்த சிரத்தை மிக அதிகம்.இளைய ராஜா இசையும், என்னுடைய மற்றும் ஸ்வருவின் நிற்காத வாயாடலும் 2.30 மணி நேரத்தை மிக சுருக்கியது.பூஜைக்கு தேவையான பொருட்களை மிக அக்கறையாய் எங்களுக்காக வாங்கியும், வழியில் ஸ்வீட் வாங்கியும் சென்றார்கள் . ஆனால் கோவில் அன்று முன்னதாக சாத்தி இருந்தது.இந்த நாளில் நாங்கள் பெற்ற அன்பு ஆசிகளால், எங்களுக்கு கோவிலுக்குள் செல்ல முடியவில்லை என்ற பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. ஆனால் மிகவும் வருந்தியவர்கள் ஸ்வரு தம்பதியினர் தான். விஜய் அண்ணா ரொம்பவே வருத்தப்பட்டார். கடைசியாக பாபா கோவிக்கு அழைத்து சென்றது என்றுமே மறக்க முடியாது.மிக பெரிய பாபா சிலை எல்லா குறைகளையும் தீர்த்தது. மனதை மிக இலகுவாக்கி கொடுத்தது. இப்படியும் மனிதர்களா என்று தோன்றியது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி , உனக்கு அண்ணன் இல்லையா, இரண்டு அக்காக்கள் தானா, அப்படி எனில் உன் பிள்ளைகளுக்கு நான் தான் தாய் மாமா என்று கூறி மேலும் சிலிர்க்க வைத்தார். அதிகம் பேசி பழக்கம் இன்றி, செய்கையில் மட்டுமே காட்டும் தன்மை கொண்ட எங்கள் இருவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அவர் விடவே இல்லை அடுத்த கும்பகோணம் பயணம் பற்றி காலண்டர் பார்க்க தொடங்கினார். இத்தனை அலைச்சலிலும் தம்பதியினர் ஒவ்வொரு கோவிலை தாண்டும் போதும் அதன் வரலாற்றை விளக்கியபடி வந்தார்கள். பின் வீட்டுக்கு வந்து அடுத்த நாள் விடுப்பு எடுக்க நினைத்து மீட்டிங் இருந்ததால் எடுக்க முடியவில்லை. ஸ்வருவின் அம்மாவை பார்த்து அவர் செய்த சூடான இட்லி, கார குழம்பு, கடலை பருப்பு குழம்பையும் சுவைத்தோம்.அவங்க போக வேண்டிய ரிஷப்ஷன் கூட போகாமல் எங்களுக்காக அலைந்துக் கொண்டிருந்தனர் பாவம் .அவர்கள் வீட்டு செல்ல குட்டிகளான செல்ல பிராணிகளுக்கு என் மீது ஏனோ தனி பாசம்.நல்ல உரையாடல்களுக்கு பின்,வேண்டாம் எனக் கூறியும் இரவு நேரம் எங்களுக்காக பஸ் ஸ்டாப்பிற்கு வந்து காத்திருந்து பஸ் ஏற்றிவிட்டு சென்றனர். நாங்கள் இருவரும் முகத்தை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டோம். வேறு என்ன செய்வது. அனைவரையும் பார்த்த திருப்தி நிம்மதியாக உறங்கினோம்.

இந்த சந்திப்பு பல உணர்வுகளை விட்டு சென்றது. யாரின் முகமும் பார்க்கும் முன்னமே இப்படி பார்த்து நடந்து கொள்பவர்களை பற்றி என் தோழியிடம் சொன்னால் நம்ப மறுக்கிறாள். இன்டர்நெட்டில் அறிமுகமாகும் நபர்களை நம்பாதே என்கிறாள். . அறுசுவைக்கு மெம்பர் ஆகு பின் தெரியும் என்றேன். அவள் சொன்னது உண்மை தானே, பயணமே செய்திராத இடத்திற்கு ஒருவரை நம்பி அதிகாலையில் எப்படி சென்று சாலையில், காத்திருந்தோம் ?... முன் பின் பார்த்திராத இருவரை நம்பி எப்படி காரில் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும்? இவை எல்லாம் அறுசுவை என்ற தளத்தில் இருந்து அனைவரின் மனதிற்கும் நுழைந்த தோழர் பாபு என்ற மனிதரால் தான் முடியும்.. எத்தனை நல்ல மனிதர்கள்.?வியப்பாக இருந்தது.. அநியாயத்துக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்துவிட்டு குறை என்று சொல்லிக் கொள்கிறார்.எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்..இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.இதன் மூலம் அனைவரின் சார்பாகவும் மானசீக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் புதிய சைட் வரல என்று சொல்லும் போதெல்லாம் என்னவர் என்னிடம், ஒரு போஸ்ட் போட்டா அது அறுசுவை பேஜ்க்கு போயி அழகா உக்காருதுன்னு தான் உனக்கு தெரியும், ஆனால் அது பின்னாடி எப்பேற்பட்ட உழைப்பு இருக்கு தெரியுமா என்று அறுசுவை பற்றியும், சான்சே இல்லே என்று அடிக்கடி தோழர் பாபுவை பற்றியும் , செண்பகா மற்றும் சோ ஸ்வீட் பாப்பா, கலகல துருதுரு அறுசுவை பொண்ணுங்க என்றும் மற்ற தோழிகளை பற்றியும் பேச தொடங்கிவிட்டார்.

அட அறுசுவையில் இன்னிக்கு என்ன என்று கேட்க தொடங்கி, ஸ்ட்ரெஸ் இருந்தா அருசுவைய பாருங்கறாரு மனுசர்.உறுப்பனர்களையும் தாண்டி, அழகா அவங்க குடும்பத்தார் மனதிலும் நல்ல நம்பிக்கையை வேறு எந்த இணையதளத்தாலும் உருவாக்க முடியாது.

இன்னும் நிறைய இருக்க.... ஆனால் என்ன செய்வது... மேலே கூறியதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.

Average: 4.7 (6 votes)

Comments

அன்பு ரம்யா,

அழகாக எழுதியிருக்கீங்க.

//அட அறுசுவையில் இன்னிக்கு என்ன என்று கேட்க தொடங்கி, ஸ்ட்ரெஸ் இருந்தா அருசுவைய பாருங்கறாரு மனுசர்.உறுப்பனர்களையும் தாண்டி, அழகா அவங்க குடும்பத்தார் மனதிலும் நல்ல நம்பிக்கையை வேறு எந்த இணையதளத்தாலும் உருவாக்க முடியாது.//

அறுசுவையின் அருமையை மிகச் சிறப்பாக சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

முதல்ல ரம்யாகார்த்திக்கிற்கு இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள் :)

எப்படி இருக்கீங்க ரம்ஸ்.. பேசவே முடில....( நலம் விசாரிப்பு)

இப்ப விஷயத்திற்கு வாரேன்,

எல்லாரும் ஒரு முடிவோடதான் களம் இறங்கியிருக்கீங்க, நாங்களும் புகைய வெளியவிடாம அங்க இங்க ஓடி ஓடி பதிவு போட்டுட்டு இருக்கிறோம்.
விடமாட்டீங்க போல இருக்கு..

எல்லாரும் (ஒரே இடத்தில பத்தவெய்ய்ங்க பரட்டைங்களானு சொல்லமானு வருது, எங்க சொன்னா அடிப்பீங்களோனு,)

எல்லாரும் ஒரே இடத்தில பட்டாச கொளுத்துங்கமானு சொல்லிபோட்டு ஓடிடுறேன்.

ரம்யா அதெப்படி இவ்வள்வு அழகா வீட்டு வாசப்படி இறங்கினதிலிருந்து, மறுபடி வாசப்படி ஏறுனது வரைக்கும் அழகா சொல்ல முடிது.. மிக அருமைப்பா :)
நாங்களாம் வரலேனாலும் எங்களையும் அழைச்சிட்டு போனாப்பில ஒரு பீலிங்கு.. இருங்க கண்ணை தொடச்சிக்கிறேன். சும்மா வெங்காயம் உரிச்சிட்டிருந்தேனா, கண்ல தண்ணி வந்திருச்சு.. நாங்களாம் என்ன குட்டி புள்ளீங்களா அழுவறதுக்கு...:)

குளிக்காம கொள்ளாம அன்பு பாராட்டுறதுக்கு மேற்கோள் காட்ட "அன்பிற்கும் அடைகுந்தாழ் உண்டோ" குறளை இந்த இடத்தில போட்டுக்கலாம்னு நினைக்கிறேன்.

நிஜமாவே நீங்க சொன்ன நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவரமுடிது ரம்ஸ்..

நீங்க எப்படி இமாவை பார்த்த உடனே ஓடினீங்க, நாந்தான் ரம்யானு சொன்னீங்க, அன்பு பாராட்டினீங்கனு, அதான் பூச்சரம் மட்டுமே காட்டிய இமா, இப்ப முகத்தையும் காட்டிட்டாங்களே!!

அதுனால கற்பனையா இல்லாம நேர்ல பார்த்த பீலிங்கு ,ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சேன்ப்பா :)

மிக அருமையான நிகழ்வை அழகா சொல்லி அசத்திட்டீங்க ரம்ஸ் :)

//மேலே கூறியதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.// என்னையும்...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்டா... எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்களா... என் காதுல புகை புகையா வருது.

உண்மைதான் ரம்ஸ். முகம் தெரியாத நட்புதான் என்றாலும் அறுசுவை நட்புக்குள் அன்பும் பாசமும் அக்கறையும் மிக அதிகம். ரெண்டுநாள் காணாம போனாலே என்னாச்சு எப்படி இருக்கீங்கன்னு அன்போடு விசாரிக்கும் நட்பு வேறெங்கும் கிடைத்தது இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரம்யா...உங்களின் சிரிப்பைப்போல் இனிக்க இனிக்க விவரமாக எழுதிய பாங்கு பிரம்மிக்க வைகின்றது.சந்தித்த நிகழ்வுகள் என்றும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும்

arusuvai is a wonderful website

ரம்யா,நாங்களூம் நாகைக்கு வந்த உணர்வு ஏற்படுத்திட்டிங்க

Be simple be sample

ரம்ஸ் அழகா அச்சு மாறாமல் நடந்ததை அப்படியே சொலியிருக்கீங்க பா சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இதுக்கு பேரு தான் ரவுண்டு கட்டி அடிக்கிறதா?..;) நாங்க எல்லாம் வடிவேலுக்கு சொந்தக்காரங்க.. அதனால நாகை கெட்டு கெதர் பற்றி எவ்வளவு பேரு பதிவு போட்டாலும் படிப்போம், கமெண்ட்டும் கொடுப்போம்.. பயந்து, கவலைப்பட்டு ஓடமாட்டோம், அறுசுவையையே சுத்தி சுத்தி தான் வருவோம்...;) திரும்ப திரும்ப படிச்சாலும் திகட்டாத பதிவு ரம்யா... வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Valthukal Hi naan ithi padithathum vilavil kalandukondadu ponra unarvu ungal silarathu arimugam ellada mugangali tharinthathil happy

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

//ஒரு குட்டி பொண்ணு.// நன்றி ரம்ஸ். பாபு அண்ணா குண்டு என்று சொல்லிட்டாங்க. நீங்க ரொம்..ப நல்ல பொண்ணு. ;)

நான் சீதாலக்ஷ்மி ரூமைத் தேடி வெளியே வந்தேன். எதிர்பார்க்காமல் ஒரு சந்திப்பு. யுரேக்கா! ரம்ஸைக் கண்டுபிடிச்சிட்டேன்!!! மனசுக்குள்ள ஒரு குதி. ;))
//நானே இமா என கத்தி,// போன்ல ஓ..ங்கி கத்தினீங்க. ;) அடுத்த பக்கம் இருந்த ஆள்தான் பாவம் . ;))
//நான் தான் ரம்யா என சொல்லி,// ஆஹா! நீங்க சொல்லாட்டா மட்டும் புரிஞ்சிருக்காது எனக்கு! பார்த்து இருக்கிறேனே இருவர் முகத்தையும் முகநூலில். ;) நிச்சயம் மறக்க முடியாத தருணம்தான் அது இல்ல!

யாராச்சும் அந்த சீனை வீடியோ எடுத்து வைச்சிருந்தா என் ஐடீக்கு அனுப்பி வைங்க ப்ளீஸ்!! ;D

‍- இமா க்றிஸ்