வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கிராம மகளிர் மேம்பாட்டு டிரஸ்ட் (TNRWD) மூலம் உங்களை வரவேற்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம். நமது டிரஸ்ட் தமிழக அரசில் பதிவு பெற்றது. மேலும் இந்திய அரசின் திட்ட குழுவில் அரசு சாரா தன்னார்வல தொண்டு நிறுவனமாக இணைந்து அதற்க்கான முறையான பதிவு எண்ணையும் பெற்ற அரசு சாரா தன்னார்வல தொண்டு நிறுவனம் ஆகும்.

தமிழ்நாடு அரசின் பதிவு பெற்ற "தமிழ்நாடு கிராம மகளிர் மேம்பாட்டு சேவை பிரிவு, IISBM (வணிக சமூக மேலாண்மை நிலையம்) மூலம் தமிழர்களுக்கு பலதரப்பட்ட தொழில்களுக்கான பயிற்ச்சிகளை அவரவர்களின் சொந்த ஊர்களிலேயே இலவசமாக நடத்த உள்ளது. ஒரு நாள் நேரடி பயிற்ச்சியுடன் தத்ரூபமான தொழிற்பயிற்ச்சிகளடங்கிய குறுந்தகடு (CD) ஒன்றையும் பயிற்ச்சியில் பங்கேற்க்கும் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.உறுப்பினர்கள் எந்தவொரு சுய தொழில் பயிற்ச்சியையும் தேர்ந்தெடுக்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் தொழில்பயிற்ச்சி எடுப்பதோ (அ) உற்பத்தி செய்வதை விட அப்பொருளை சந்தை படுத்துவதுதான் மிகுந்த சவாலான விழயமாக இருக்கும். அதுவும் பெண்களுக்கு "வீட்டிலிருந்தபடியே பொருட்களை உற்பத்தி செய்துவிடுவேன் ஆனால் அதை விற்க கஷ்ட பட வேண்டி இருக்குமே?" என்ற பயத்தில் சுயதொழில் பயிற்ச்சி எடுப்பதுடன் மேற்கொண்டு தொழில் செய்யாமல் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். சுயதொழிற்பயிற்ச்சி அளிக்கும் பெரும்பாலான நிலையங்களும் உற்பத்தி பொருட்களை சந்தபடுத்தி தருவதில்லை. எனவே இன்று பெரும்பாலான தமிழ் ஆண்கள் / பெண்கள் சுயதொழில் செய்வதை தவிர்த்து மற்றவர்களிடம் கை கட்டி வேலை செய்வதற்க்கு அலைய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். இதை போக்கும் விதத்தில் முதற்கட்டமாக உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்திய அளவில் விற்றுத்தரும் சேவையை துவக்கியுள்ளோம்.

எனவே, நாம் செய்யும் பொருட்களை எப்படி விற்பது? என்ற கலக்கத்தை விட்டு விட்டு தைரியமாக ஏதேனும் ஒரு சுயதொழிற்பயிற்ச்சியை நமது சேவை நிறுவனம் மூலம் பெற்று, உற்பத்தி செய்து அதனையும் நமது சேவை நிறுவனம் மூலமாகவே விற்பனை செய்யலாம். செவை அடிப்படையில் மட்டுமே இதனை செய்து வருகிறோம். ஒரே நிபந்தனை உற்பத்தி பொருள் தரமானதாகவும், மொத்த கொள்முதல் விலையிலும் இருக்க வேண்டும்.

தொழிற்பயிற்ச்சி எடுத்தாகி விட்டது... உற்பத்தியும் தொடங்கியாகிவிட்டது... விற்பனையும் நடந்து கொண்டிருக்கிறது... சில மாதங்களிலோ / வருடங்களிலோ தொழிலை விரிவு படுத்த நிதி உதவி கிடத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் சமயத்தில் நமது சேவை நிறுவனத்தின் மூலமாகவே அவருக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். (கடன் என்பது தொழில் மேம்பாட்டுக்கு மட்டும் தான் என்பதை கவனத்தில் கொள்க)

தொழில்பயிற்சியோ/ தொழிலோ செய்வதில் ஆர்வமில்லா உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க உள்ளோம்

உறுப்பினராக இணைய tnrwdt@gmail என்ற இ மெயிலில் தொடர்பு கொள்க‌

ஏற்கனவே தன்னார்வு தொண்டு நிறுவனஙகளை நடத்தி வரும் மற்றும் புதியதாக டிரஸ்ட் ஆரம்பித்து இச்சேவை மையத்துடன் இணைத்துக்கொண்டு உங்கள் பகுதியில் எமது சேவை மையம் மூலம் சேவைகளை பெற்று சேவைகளை செய்ய மாவட்ட /வட்ட வாரியாக சிற்ப்பாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். சேவை மையம் நடத்த தேவையான நிதி உதவிகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கு ஊக்கத்தொகைகளும் நிச்சயம் வழஙகப்படும். சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைமை அலுவலகத்திற்க்கு, மினி சூப்பர் மார்கெட் துவக்க உதவி செய்து தரப்படும்.

உறுப்பினர்களாக இணைந்து சேவைகளை பெற விரும்பும் தனி நபர்கள் (அ) குழுக்கள் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகம் அமைக்க / மாவட்ட துணை தலைமை அலுவலகம் அமைத்து சேவையாற்றுவதன் மூலம் வருமானமும் பெற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் tnrwdt@gmail என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் விவரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.

நான் திருப்பூரில் வசித்து வருகிறேன். Msc IT முடித்து இருக்கிறேன். நான் சுயதொழில் பயிற்சிகள் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன். எனக்கு அதை பற்றி விவரங்களை தர முடியுமா.

Thank you

மேலும் சில பதிவுகள்