மிளகாய் சட்னி

தேதி: January 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வரமிளகாய் - 10
பூண்டு - 7 பல்
புளி - கொட்டை பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

அடுப்பில் வாணலியை வைத்து, குறைந்த தீயில் மிளகாயை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
வறுத்த மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
அதனுடன் பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த சட்னியுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான, காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

இது என் நெருங்கிய தோழியின் அம்மாவின் குறிப்பு. பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே எனக்கு அவர்கள் செய்யும் இந்த சட்னி ரொம்பவும் பிடிக்கும். நல்லெண்ணெய் சேர்ப்பது தான் இதில் நல்ல சுவையைக் கொடுக்கும். எண்ணெய் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சாப்பிடவும். எண்ணெயில் ஊற ஊற சுவை இன்னும் அதிகமாகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கே நைட் செய்துட்டு சொல்றேன், எனக்கு மிளகாய் சட்னி ரொம்ப பிடிக்கும். நாங்க வேற மாதிரி அரைப்போம் வித்யா.

சூப்பர்.... முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்

முதல் குறிப்புக்கு வாழ்த்துகள்! நல்ல குறிப்பு (சீக்கிரமே ட்ரை செய்கிறேன்)
படங்கள் பளிச்... பளிச்...

அன்பு வித்யா,

முதல் குறிப்பிற்கு வாழ்த்துக்கள்! குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆகா... ஸ்.... காரம். சூப்பரு. என் பள்ளி தோழி ஒருவர் வீட்டில் செய்யும் மிளகாய் சட்னி நியாபகம். ஆனால் அப்போதெல்லாம் ரெசிபி கேட்டு வைக்க தெரியல, இப்போ தோழியிட்ம் டச்சே இல்ல. அவசியம் செய்து பார்க்கிறேன். :) முதல் குறிப்பா வித்யா? இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நைட் செய்து எண்ணெயில் ஊற வச்சாச்சு காலையில் இட்லியுடன் சாப்பிட்டாச்சு ச்ச் சூப்பர்ர்ர்ர்ர்ர் சட்னி வித்யா நன்றி வித்யா. வாழ்த்துக்கள் வித்யா இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க.

நல்ல‌ அருமையான குறிப்பு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்

என் முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி..

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமா தேவி ரொம்ப ஈசி இது.. கண்டிப்பா செய்து பாருங்க.. நன்றி..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி ப்ரியா..

வித்யா பிரவீன்குமார்... :)

மன்னிக்கணும்.. உங்க பேரு எனக்கு தெரியல.. ரொம்ப நன்றிங்க.. படங்கள் மொபைல்'ல எடுத்தது தான்..

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமா காரம் தான்.. இட்லி கூட சூப்பரா இருக்கும்.. :) எனக்கும் என் ஸ்கூல் பிரண்ட் அம்மா தான் செய்வாங்க.. அவங்ககிட்ட தான் நான் இத தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி வனி..

வித்யா பிரவீன்குமார்... :)

அடடே.. செஞ்சு சாப்பிடச்சா.. இட்லி கூட தான் இது நல்லா இருக்கும் தோசைய விட.. நன்றி உமா..

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றிங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் வித்யா .. நேற்று இரவு உங்கள் மிளகாய் சட்னி தான் செய்தேன் நீங்க சொன்ன அதே இட்லி காமினேஷன்க்கு சூப்பரா இருந்துச்சு .. இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Akka Na Intha Dish try Pannana , Superaaaaaaa Irunthuchu....

கனிமொழி செய்து சாப்பிட்டாச்சா.. ரொம்ப சந்தோஷம்.. வாழ்த்துக்கு நன்றி..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி மகா.. நல்லா இருந்துச்சா... சந்தோஷம்..

வித்யா பிரவீன்குமார்... :)