7 மாத குழந்தைக்கு பழ உணவு -சந்தேகம்

7 மாத குழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்?கொடுக்கும் போது தண்ணீரில் அவித்து கொடுக்க வேண்டுமா?அல்லது ஆவியில் வேக வைத்து கொடுக்க வேண்டுமா? எதில் சத்துக்கள் குறையாமல் கிடைக்கும்?உதவுங்கள் ...

ஆப்பிள், மாதுளை பழங்கள் கொடுக்கலாம், ஆப்பிளை வேக வைத்து கொடுக்கலாம், மாதுளையை மிக்சியில் போட்டு அடித்து கொடுக்கலாம்,

பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.ஆப்பிள் நேற்று கொடுத்தேன்.வயிறு வலித்ததா என்று தெரியவில்லை இரவு முழுவதும் தூங்காமல் முனங்கிக்கொண்டே இருந்தான்.

enoda sonku ippo 7 month nadakudhu.. na 5month la irundhu palam kodukkara apple madhulai grind panni juice pola tharuva. valaipalam appadiye kaila masichu tharuva..nanga Delhi la irukom inga irukara doctors fruits appadiye tharanum vega vetchu kodutha sathu poidum nu sonnadhala na appadiye thara aarambichuta.. ningalum unga doctor ta ketu eppadi tharalam nu aalosanai kelunga... endha palam koduthalum adutha oru varathuku appuram dha vera pudhu palam tharanum appo dha kulandhiaiku endha palam serum seradhu nu therium...

//7 மாத குழந்தைக்கு// திட‌ உணவுகள் ஓரளவு நன்கு செரிக்கும் வயதுதான். பழங்களை மசித்து மட்டும் கொடுத்தால் போதும். //என்ன பழங்கள்// வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி பிரச்சினை இல்லாதவை. அளவோடு ஊட்டுங்கள். //எதில் சத்துக்கள் குறையாமல் கிடைக்கும்?// இரண்டையும் விட‌ சமைக்காத‌ பழங்களில் சத்து அதிகம்.

‍- இமா க்றிஸ்

டாக்டரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் ஊசி போட்டதால் குழந்தை அழுதான். ஒன்றுமே கேட்க முடியவில்லை.பேபி சென்டரில் பார்த்து தான் வேக வைத்து ஊட்டினேன்.இனி பச்சையாக மசித்து நீங்கள் சொன்னது போல் ஊட்டுகிறேன்.தனியாக இருப்பதால் ஒவ்வொன்றும் கொடுப்பதற்கு முன்னால் நிறைய சந்தேகம் வருகிறது...மறுபடியும் நன்றி

தோழி தளீகா எங்கபா ஆள காணோம் குழந்தை வளர்ப்பு நல்லஆலோசனை தருவார் !

god is great

http://www.arusuvai.com/tamil/node/14967

இந்த லிங்க் ஐ தட்டிப் பாருங்க Rakshan ,தளிகா குழந்தையின் உணவு பற்றி விரிவாக எழுதியிருக்காங்க,என்னென்ன பழங்கள் கொடுக்கலாம் என்பதும் உள்ளது

Hi என் குழந்தைக்கு 7 மாத தொடங்கியுள்ளது பழ வகையில் ஏலக்கி வாழைபழம் தருகிறேன் இதனால் குழந்தைக்கு சளி பிடிக்குமா????

Apple koduthaal stomach pain varumah????

மேலும் சில பதிவுகள்