ஆண் குழந்தைக்கு எப்போது காது குத்தலாம்?

வணக்கம்

என் மகனுக்கு 21/2 வயது ஆகிறது, எங்கள் வழக்கப்படி நாங்கள் முதல் மொட்டை குழந்தை பிறந்த ஊரில் (டெலிவரி பார்த்த ஊரில்) தான் எடுப்போம். அடுத்த மொட்டை குல தெய்வத்திற்கு போடலாம் என்று இருக்கிறோம் - மொட்டை அடிப்பதோடு காது குத்தி விடலாம் என்கிறார்கள் மாமனார் வீட்டில், ஆண் குழந்தைக்கு எப்போது காது குத்தலாம்?. இப்போது குத்துவது சரியா?. என் அப்பா ஜாதகம் பார்த்த போது 5 வயதுக்கு மேல் தான் குத்தனும் ன்னு சொல்லிட்டாங்க - நான் இப்போ எந்த பக்கம் பேசுறதுன்னு புரியல. மிகவும் குழப்பமாக உள்ளது, அனுபவம் உள்ளவர்கள், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள், ஆன்மீக வாதிகள் எனக்கு நல்ல அறிவுரை கூறவும். இந்த சம்பிரதாயம், யார் பேச்சை கேட்பது, எப்படி நடப்பது எல்லாம் ரொம்ப கஷ்டமாக உள்ளது. அறிவுரைக்கு எதிர்பார்க்கிறேன்

நன்றி
பாபு நடேசன்

//இந்த சம்பிரதாயம், யார் பேச்சை கேட்பது, எப்படி நடப்பது எல்லாம் ரொம்ப கஷ்டமாக உள்ளது. அறிவுரைக்கு எதிர்பார்க்கிறேன்// இதற்கு மட்டும் என் கருத்து... நீங்களும் மனைவியும், இரண்டு வீட்டாரோடும் அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவாக எடுங்கள். யாராவது ஒரு பக்கத்தினர் நிச்சயம் விட்டுக் கொடுப்பார்கள்.

இங்கு வந்து சம்பிரதாயங்கள் பற்றிக் கேட்டால் ஆள் ஆளுக்கு ஒன்று சொல்லுவோம். இன்னும் அதிகம் கஷ்டமாகப் போகும். :-)

‍- இமா க்றிஸ்

இதுல‌ மற்றவர்கள் கருத்தோட‌ உங்க‌ இருவரது வீட்டு பெரியவங்ககிட்ட‌ கேட்கறது தான் நல்லது. ஆண்பிள்ளைகளுக்கு பெருசா எதுவும் விஷேசம் செய்ய‌ மாட்டோம்ல‌ அதனால‌ மொட்டை அடிப்பதோடு காது குத்துவதும் வைத்துக் கொண்டு சொந்தங்கள் சேரும் ஒரு விசேஷமாக‌ செய்துடுங்கள் மொட்டை அடித்து காதுகுத்தி பார்க்க‌ குழந்தைங்க‌ அழகா இருப்பாங்க‌.

மேலும் சில பதிவுகள்