help me

என்னுடய நாக்கின் கீழ் பகுதியில் புண் ஏற்ப்பட்டுள்ளது.
இது சிவப்பு நிறத்திலும் வலியையும் தருகிறது. I have this problem last one week. pls help me

வைட்டமின் பி12 குறைவினால் வாய்ப் புண் வர வாய்ப்புண்டு,
அதிக மன அழுத்தத்தாலும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் வருவதுண்டு
வெண்மையாக படர்ந்திருந்தால் fungal infection காரணமாக வந்திருக்கலாம்,சிவப்பாக
இருப்பதால் மேலே குறிப்பிட்ட ஏதாவதாக இருக்கலாம்
சாப்பிடும் போதும் ,சூடாக அருந்தும் போதும் வலி ஏற்படும்.
மருத்துவ ஆலோசனை நாடுவது நல்லது.

வெண்ணெய் தடவலாம் என்று கேள்விப் பட்டுள்ளேன்,ஆனால் எந்த அளவிற்க்கு பயன் படும் என்று தெரியவில்லை

வனி சொல்லறததான் நானும் சொல்ல வந்தேன், உங்களுக்கு வாய்புண் தான் வந்திருக்கு நீங்க வெண்ணெய் தடவுங்கள் எரிச்சல் இல்லாமல் இருக்கும்,

அன்பு தீபஸ்ரீ,

தேங்காய் ஒரு கீற்று எடுத்து, நன்றாக‌ மென்று சாப்பிடுங்க‌. தேங்காய்ப்பால் அந்தப் புண்ணில் பட்டு, புண் ஆறும்.

தேங்காய்ப் பால் எடுத்து, கொஞ்சம் இனிப்பு சேர்த்து, வெதுவெதுப்பான‌ சூட்டில் குடிக்கலாம்.

பாசிப்பயறு/ பாசிப்பருப்பு கஞ்சி செய்து, தேங்காய்ப்பால், காய்ச்சிய‌ பால் சேர்த்துக் குடிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை சூப், அல்லது கூட்டு செய்து, சாதத்துடன் சாப்பிட்டாலும் வாய்ப்புண் ஆறும்.

பொதுவாக‌ வயிறு புண் ஆகியிருந்தால், வாய்ப்புண் வரும்னு சொல்வாங்க‌. அதனால் தேங்காய், பாசிப்பருப்பு இதெல்லாம் சேர்த்தால், வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டுமே ஆறும்.

பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் சாப்பிட்டாலும் புண் ஆறும். டாக்டரிடம் கன்சல்ட் செய்து, பின் சாப்பிடுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்