பேப்பர் ஃப்ளவர்

தேதி: February 4, 2014

4
Average: 4 (4 votes)

 

A4 அளவு கலர் பேப்பர் (விரும்பிய நிறங்களில்)
க்ளூ

 

A4 பேப்பரை (http://www.arusuvai.com/tamil/node/15022) இந்த லிங்கில் உள்ளது போல் முக்கோணங்களாக மடித்துக் கொள்ளவும்.
மடித்த முக்கோணங்களில் 14 முக்கோணங்களை எடுத்து, படத்தில் காட்டியவாறு முதல் சுற்றில் 7, அடுத்த சுற்றில் 7 என க்ளு வைத்துக் கோர்க்கவும்.
இரண்டு சுற்று மஞ்சள் நிற முக்கோணங்களை கோர்த்த பின்னர் மூன்றாவது சுற்று கோர்க்கும் முன், ஐந்து ஐந்து சிவப்பு நிற முக்கோணங்களாக கோர்த்து இரண்டையும் இணைத்து வைத்துக் கொள்ளவும். அதை மஞ்சள் நிற முக்கோணங்களுக்கு மேல் மூன்றாவது சுற்றாக இணைக்கவும். (எளிமையாக புரிந்துக் கொள்ள வலது புறத்தில் சிறியதாக தனியாக இருக்கும் பூவைக் காட்டி இருக்கிறேன். முதல் சுற்று ஆரஞ்சு, இரண்டாவது பச்சை, மூன்றாவது சிவப்பு, இந்த வரிசையில் தான், இப்பொழுது மூன்றாவது சுற்றில் ஐந்து ஐந்தாக கோர்த்து, இரண்டையும் இணைக்கவும்.)
அனைத்து சிவப்பும் கோர்த்ததும் இப்படி இருக்கும், 5 தான் கோர்க்க வேண்டும் என்பது இல்லை 3, 4, 5, 6, 7 இப்படி எத்தனை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
அடுத்து 4 வது சுற்று வேறோரு கலரை கொண்டு பார்டர் கட்டவும்.
இது ஏழு இதழ் பூ என்பதால் நடுவில் ஓட்டை பெரிதாக தெரியும், அதை மறைக்க சிறியதாய் படத்தில் உள்ளது போல் ஏதேனும் வைத்து கொள்ளவும்.
இங்கு இருப்பது 7, 5, 4, 3 இதழ்கள் உள்ள பூக்கள், நடுவில் உள்ள இடைவெளியும் நம் விருப்பம் போல் சேர்ப்பது தான்.
பச்சை நிற பேப்பரை ஸ்டிக் போல் சுருட்டி க்ளு தடவி, பூவின் நடுவில் சொருகவும். ஜாடியை அலங்கரிக்க பூக்கள் ரெடி

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்

அழகோ அழகு... கலர் காம்பினேஷன், ஃபினிஷிங்... எல்லாமே சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா தெளிவான‌ விளக்கம் ஒரு முறை படிச்சதுமே புரிந்துட்டு ரொம்ப‌ அழகான‌ கலர், எல்லா பூக்களுமே நல்லா இருக்கு எனக்கு பின்க் சான்டுல் ரொம்ப‌ பிடிச்சிருக்கு

colour a4 sheets kidaikavillai nangal irukum idathil engu kidaikum pls solungalen

ALL IS WELL

சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

எல்லா பூக்களும் ரொம்ப அழகாக இருக்கு... க்ரீன் கலர் பார்டர் பூ ரொம்ப...ரொம்ப அழகா இருக்கு...

கலை

ரம்யமா இருக்கு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரம்யமா இருக்கு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரேணு அக்கா,
சூப்பர் , ரொம்ப‌ பொறுமை அக்கா உங்களுக்கு,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Wwow super.romba azhaga iruku

வாழ்த்து சொன்ன தோழிகளுக்கு மிகவும் நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி ஏன் இப்படி எப்பவும் நல்ல விஷயம் சொல்லிட்டு ஸ்மைலி போட்டு என்னை படுத்தறீங்கோ:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கோகிலா ஸ்டேஷ்னரி கடைகளில் தேடி பாருங்க, அங்க கிடைக்கவில்லை என்றால், பிரிண்ட் போடும் பேப்பர் கிடைக்கும் கடைகளில் கேட்டு பாருங்க, இது வரை நான் இந்தியாவில் வாங்கியதில்லை, அதனால் எனக்கு வேற எதும் தெரியல.. இந்தியாவில் எங்க கிடைக்கும்ன்னு யாராவது சொல்லுங்கப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

nan ipothu mangalore,karnatakavil ullom chennail kidaikuma engu vangalam pls yaravathu solunga enaku intha flowera seiya romba asaiya iruku

ALL IS WELL

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ரொம்ப கலர் புல்லா இருக்கு பேப்பர் ப்ளவர் சூப்பர்,

தேன்க்யூ பாரதி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி வனி கொஞ்சம் வாங்கப்பா, நீங்க எங்க பேப்பர் வாங்கினீங்க இந்தியாவில்,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அருைம

Give respect and take respect