மல்லி இஞ்சி பச்சடி

தேதி: February 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

இஞ்சி - 4-5 துண்டு (ஒரு இன்ச் அளவு)
மல்லி விதை - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
தேங்காய் பூ - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் - தாளிக்க


 

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சியை நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை, வரமிளகாய் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். (மல்லி கருகிவிடக்கூடாது).
வதக்கிய இஞ்சி, மல்லி, மிளகாய் அனைத்தையும் மிக்சியில் போட்டு தேங்காய் பூ மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.
வாணலியில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும்.
மணமான மல்லி இஞ்சி பச்சடி தயார். சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

மல்லியும், இஞ்சியும் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. இந்த பச்சடியை வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம். அசைவம் நிறைய சாப்பிட்டதாகத் தோன்றும் நாட்களில் அடுத்த நாள் இந்த பச்சடியும் ரசமும் செய்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா... சுலபமான சுவையான குறிப்புகளா அடுக்குறீங்க. சப்புகொட்டுது இங்க ;) அவசியம் செய்துட்டு சொல்றேன் வித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா அக்கா சுலபமான‌ குறிப்பு,
இது மாதிரி இப்ப‌ தான் கேள்வி படுறேன்.செய்திடலாம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இந்த பச்சடிய எப்படிங்க கண்டு புடிச்சீங்க இப்படி அசத்துரீங்க சமயல்கலை உங்க கூட பிறந்ததா?

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஜீரணத்துக்கு அருமையான ரெசிபி குடுத்துருகீங்க. செய்து பார்க்குறேன். வாழ்த்துக்கள் தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மல்லி இஞ்சி பச்சடி இப்பவே செய்து சாப்பிடனும் போல‌ இருக்கு சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் அருமையா இருக்கும்னு தோணுது. நாளைக்கே செய்துட்டு சொல்றேன் வித்யா

அன்பு வித்யா,

பார்க்கும்போதே ரொம்ப‌ அருமையாக‌ இருக்கு, நல்ல‌ குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

பச்சடி சூப்பர். செய்வதும் சுலபம் போல‌, கண்டிப்பாக‌ ட்ரை செய்து பார்க்கிறேன், வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாவ்! கலக்குறீங்க வித்யா.... வாழ்த்துகள்!!

வாவ்! கலக்குறீங்க வித்யா.... வாழ்த்துகள்!!

அன்பு வித்யா
அருமையான் குறிப்பு. செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி... :)

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றி வனி.. நான் சமைக்கறதுல ரொம்ப சோம்பேறி.. அதான் குறிப்பெல்லாம் சுலபமானதா இருக்கு.. ;)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி சுபி.. செய்து பாருங்க.. நல்லா இருக்கும்..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றிங்க..

// இப்படி அசத்துரீங்க சமயல்கலை உங்க கூட பிறந்ததா?//
ஆனாலும் அறுசுவை-ல இருக்கும் இவ்வளவு குறிப்புகளையும் நம்ம மக்களோட சமையல் திறமையும் பார்த்ததுக்கு அப்புறம் கூட என்னை பார்த்து இந்த கேள்விய கேட்டிருக்கீங்களே.. உங்களுக்கு பெரிய மனசுங்க.. :)

நிஜமாவே நான் சமைக்கறதுல ரொம்ப சோம்பேறிங்க.. நம்ம அறுசுவை மக்களை பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி உமா.. கண்டிப்பா செய்து பாருங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி தேவி.. ஆமாம் சூடான சாதத்தில் இந்த பச்சடியோட நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.. செய்து பாருங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றி சீதாம்மா.. குறிப்பு வந்த உடனே பதிவு போட்டு ஊக்கபடுத்துவதற்கு.. :) செய்து பார்த்து சொல்லுங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி சுமி.. கண்டிப்பா செய்து பாருங்க.. ரொம்ப சுலபம் தான்..

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றிங்க... :)

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றிங்க மஞ்சு.. :) கண்டிப்பா செய்து பாருங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

Easy receipe priya..superb

Be simple be sample

வித்யா இதுபோன்ற‌ சட்னி இன்னும் செய்ததில்லை, மிகவும் ஆரோக்கியமான‌ குறிப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். தயாரித்துவிட்டு படம் போடுகிறேன் தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

S correct cmd

நீங்க‌ என்ன‌ எழுதி இருக்கீங்க‌, ஒண்ணுமே புரில‌, கரக்ட் காமெடினு போட்டிருந்தா நான் வன்மையா எதிர்க்கிறேன்.. இல்ல‌ நல்ல‌ கமெண்ட்னு போட்டிருந்தா, எனக்கெதுக்கு பாராட்டு, வித்யா நல்லதொரு சட்னி செய்து விளக்கி இருக்காங்க‌. அவங்களை நல்லவிதமா பாராட்டுங்க‌, இல்லேனா படிச்சிட்டு... போய்ருங்க‌, இது போல‌ பதிவு அங்கங்க‌ போடுறீங்களே!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆரோக்கியமான‌ குறிப்பு,நல்லாயிருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி அருள்... செய்து பாருங்க.. இது நம்ம ஊர்ப்பக்கம் செய்யறது தான்.. சாதத்தோட நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும்..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி முசி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)