மசாலா மீன்

தேதி: February 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மீன் துண்டுகள் ‍- ஒரு கிலோ
இஞ்சி‍ - ஒரு விரல் நீள‌த் துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை ‍ - ஒரு சிறு துண்டு
ஏலக்காய் ‍- 2
உப்பு - சிறிதளவு
எலுமிச்சை சாறு ‍- அரை தேக்கரண்டி
மீன் மசாலா தூள் ‍ - 50 கிராம்
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் ‍ - பொரிக்க‌ தேவையான‌ அளவு


 

மீன் துண்டுகளை நன்றாக‌ சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ஃப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல‌ கலந்து வைக்கவும்.
இந்த மசாலாக் கலவையை மீன் துண்டுகளின் மேல் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். (வெயிலிலும் வைக்கலாம்).
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான‌ தீயில் வைத்து மீன் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும்.
சூடான‌, சுவையான‌ மசாலா மீன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் தா முதல் பதிவா?சூப்பறுங்க கட்டாயம் பன்னி பார்பன்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அச்சோ இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.சீக்கிரம் செய்துபார்த்துடறேன்.

Be simple be sample

குறிப்பை அழகாக‌ திருத்தி வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி

ஜன்னத்துல் நன்றி... செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.......

ரேவதி... நன்றி.... சீக்கிரம் செய்து விடுங்கள்... பின்னூட்டமும் போடுங்கள்......

innikku itha than seiya poren

இது உங்க வாழ்க்கை...
உங்களுடைய எந்த ஒரு முடிவையும் நீங்களே எடுங்க...
பிறருடைய ஆலோசனைகளுக்கும் கொஞ்சம் காது கொடுங்க...
உங்களுடைய புதிய முயற்சிகள் தோல்வி அடைஞ்சாலும் பரவாஇல்லை...
கடைசியில் முடிவை நீங்களே எடுங்க...

மீன் வாசனை இங்க வருது. நாளைக்கே செய்துர்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ப்ரியா மீன் பார்க்கவே அழகா இருக்கு :) நீங்களும் ப்ரீத்தி மிக்ஸிதான் வைச்சிருக்கீங்க‌ போல‌ இருக்கு.
அழகான‌ குறிப்பிற்கு வாழ்த்துக்கள் தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர் க்ரிஸ்பி ஃப்ரை... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா