கைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்

ஒரு காலத்தில் கைவினை பொருட்கள் செய்ய ஆரம்பித்த போது பொருட்கள் கிடைக்காது, ஒன்னு கிடைத்தால் இன்னொன்னு கிடைப்பதற்க்குள் செய்ய நினைத்ததே மறந்துவிடும். இப்படி பொருள் தேடி அலைய முடியாமல் தான் பேப்பர் கிராப்ட் தவிர வேறு செய்யவே மாட்டேன் என முடிவெடித்து அதுக்குள்ளேயே வண்டி சுத்தியது.ஊருக்கு போயிருந்த போது உனக்கு தகுந்த கடை இருக்கு போய் பார்க்கலாம் வா என எனது பெரியம்மா ஒரு கடைக்கு அழைத்து சென்றார். அந்த கடை முழுக்க கிராப்ட் செய்ய தேவையான பொருட்கள், அட எதை எடுக்க எதை விட என தெரியாமல் குழம்பிவிட்டேன்.அங்கு பொருட்கள் கொஞ்சம் வாங்கியதும் தான் நிறைய புது விதமாக கற்க தொடங்கினேன், அதே போல பொருள் இங்கு கிடைத்தால் தானே நம்ம வண்டி ஓடும் என இங்கும் பல கடைகள் தேடி கண்டும் பிடித்துவிட்டேன். நான் பொருள் வாங்கிய இடம் இரண்டே ஊர் தான். அறுசுவை தோழிகள் உலகம் முழுவதும் இருப்பதால் நீங்க இருக்கும் இடத்தில் கிராப்ட் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் எதும் பழக நினைப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

திருச்சி:
மலைக்கோட்டை சிங்காரத்தோப்பில் உள்ள ரேணுகா ஸ்டோர்ஸ்.
இங்கு பீட்ஸ், பேஷன் ஜூவல்லெரி ஐயிட்டம்ஸ், இன்னும் என்னத்த சொல்லன்னு தெரியல...எந்த பொருளை பார்த்தாலும் ஆசை வந்திடுது, பார்த்து வாங்கனும் .

உமா ஸ்டோர்ஸ்ன்னு நினைக்கறேன். உறையூர் கடைவீதி க்கு பக்கத்துல இருக்கு, அப்பலோ பார்மசி பின்னாடி இருக்கு.இங்கயும் ஓரளவு குட்டி குட்டி ஐட்டம்ஸ் கிடைக்குது.
நான் ஊர்ல கலர் பேப்பர் தேடி கிடைக்கல, கிராப்ட் கடைல காட்டியது ஆரிகாமி பேப்பர் போல ஒரு பக்கம் கலர், இன்னொரு பக்கம் வெள்ளைன்னு இருந்தது, அதுவும் கொஞ்சம் வலுவலுப்பா... பிரின்ட் எடுக்கும் பேப்பர் போல கலர் பேப்பர் எங்க கிடைக்கும்?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

Naan trichy one time than vanthuruken athanala enaku theriyathu sorry frnd.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

ஹாசனி தெரிந்தவர்கள் சொல்லட்டும், உங்கள் பக்கத்தின் கீழே தமிழ் எழுத்து உதவி உள்ளது அதில் பாருங்க எப்படி அடிக்கனும் என்று,

இப்பொழுது எளிமையாய் இருக்க நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.இந்த லின்க்ல பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/27437

உங்கள் வருகைக்கு நன்றிப்பா, தமிழில் டைப் செய்து பழகிகொள்ளுங்கள், இன்னும் எளிதாய் இருக்கும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

K kandippa seekirama tamil type palakiduren akka. Thanks akka

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

அபுதாபி:

கீரின் பிரான்ச்(Green Branch)இங்கும் எல்லா வகையான‌ பொருளும் கிடைக்குது, ஆனால் விலை கூட‌ இருக்கு, வேற‌ எங்கயும் கிடைக்கல‌, வாங்கியே ஆகனும் என்று நினைத்தால் வாங்கலாம், பொருட்கள் தரமா இருக்கு,அதுல‌ சூப்பர்.

United Book Shop in Mina mall இங்க‌ போம் ஷீட், போம் பால்ஸ் இன்னும் ஸ்கூல் வொர்க் சம்பந்த‌ பட்ட‌ பொருட்கள் எல்லாம் கிடைக்குது, விலையும் ஓ.கே.

தி புக் ஷாப் இது அல் வாதா மால் பின்பக்கம் இருக்கு, இங்க‌ நான் பொறுமையா என்ன‌ என்னென்ன‌ இருக்குன்னு பார்க்கல‌, ஆனா கிராப்ட் அயிட்டம் இருக்கு, இங்க‌ இது வரை ஒன்னும் வாங்கல‌, விலை பார்த்த‌ வரை ஓ.கே தான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சவுதி அராபியா

riyadh தில் கிராப்ட் அயிட்டம் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும்.

god is great

//ஒரு பக்கம் கலர், இன்னொரு பக்கம் வெள்ளைன்னு இருந்தது// - வார்னிஷ் பேப்பர்

// பிரின்ட் எடுக்கும் பேப்பர் போல கலர் பேப்பர்// க்ராஃப்ட் ஸ்டோர்லயே கிடைக்கும். ப்ரிண்டிங் பேப்பர் என்றே கேட்கலாம். அல்லது ஸ்டேஷனரி கடைகள்ல கேளுங்க.

பெங்களூரில் ஒரு எக்ஸிபிஷன் போயிருந்தேன். இட்சி பிட்சி ஸ்டால் போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லா க்ராஃப்ட் சப்ளைஸும் கிடைத்தது. அவர்களது விலைகள் பலது நியூஸி விலைகளோடு ஒப்பிட மலிவாக இருந்தது. அங்கு ரேணு விசாரிக்கும் கலர் பேப்பர் பாக் செய்து போட்டிருந்தார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இட்சி பிட்சி ஸ்டோர்ஸ் இருக்குமா!

‍- இமா க்றிஸ்

Nama hand work vacha blouse thaika help panunga plz.

Kalam pon ponrathu

Plz epd thaikanum work vacha blousa.helpme

Kalam pon ponrathu

இட்சி பிட்சி எனக்கு தெரிந்தவரையில் பெங்களூர் மட்டும் தான். ஒரே ஒரு கடை டெல்லியில் இருக்குன்னு நினைக்கிறேன். ஆனால் அதன் பொருட்கள் பல கடைகளில் கிடைக்கும். சென்னையில் TTk Road Crossword Book Stores' கிடைக்கும்னு சொன்னாங்க. நேரில் போனதில்லை. எனக்கு தெரிஞ்சு ரேணு கேட்கும் A4 பேப்பர் புக் ஷாப்பிலேயே கிடைக்கும். நான் சென்னையில் நிறைய கடைகளில் வாங்கி இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்