வாழைத்தண்டு சாம்பார்

தேதி: February 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
வாழைத்தண்டு - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று (சிறியது)
புளித்தண்ணீர் - அரை கப்
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிது
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
வரமிளகாய் - ஒன்று


 

வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாழைத் தண்டை விரும்பிய அளவில் நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கச் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, நறுக்கிய வாழைத் தண்டைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வாழைத் தண்டுடன் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும். மணமணக்கும் வாழைத்தண்டு சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழைத்தண்டு சாம்பார் வித்யாசமான சாம்பார். பார்க்க நல்லா இருக்கு செய்து பார்த்துட்டு சொல்லுறேன். எப்பவுமே ஒரே மாதிரி சாம்பார் வைக்கிறதுக்கு இந்த மாதிரி புதுமையான சாம்பார் வைக்கலாம் தாங்ஸ் வித்யா.

வாழைத்தண்டு எப்போதும் பொரியல் மட்டும் தான் செய்றது இல்லனா பச்சடி வேற எதுவும் எனக்கு தெரியாது இது புதுசா இருக்கு வித்யா குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு.

சரம்பார் சூப்பர்ங ஆனா இலங்கைல வாழன்தண்டிட்குதான் பஞ்சம்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு வித்யா,

வாழைத்தண்டு சாம்பார் ரெசிபி ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

வாழைத்தண்டு சாம்பார் எளிமையா இருக்கு வித்யா.வாழ்த்துக்கள். விருப்பபட்டியல்ல சேர்த்துருக்கேன். செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழைத்தண்டில் சாம்பார் வெச்சதே இல்லை... ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி பாரதி.. செய்து பாருங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

சாம்பார் செய்து பாருங்க உமா.. நல்லா இருக்கும்.. நன்றி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி ஜனா.. கிடைக்கும் போது கண்டிப்பா செய்து பாருங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றி சீதாம்மா.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி உமா.. செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி வனி.. நானும் கூட யதார்த்தமா முயற்சி பண்ணி பார்த்தது தான்.. ரொம்ப நல்லா இருந்துச்சு.. பொரியல் செய்தது போக மிச்சம் இருந்த தண்டில் செய்தது..

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி அருள்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு. தண்டு வாங்கி செய்து பார்க்கிறேன்.