பீட்ஸ் ஹார்ட்

தேதி: February 11, 2014

4
Average: 4 (4 votes)

 

பீட்ஸ் இரண்டு அளவுகளில்
நரம்பு

 

விருப்பமான இரண்டு நிறங்களில் மணிகள் எடுத்து கொள்ளவும். இரண்டு அளவுகள் இருக்கட்டும், ஒரு பெரிய அளவு என்றால் அதற்கு அடுத்த சிறிய அளவு என்ற விதத்தில் எடுக்கவும், பெரிய வித்யாசமாக இருந்தால் அழகாக இருக்காது.
நரம்பில் முதலில் மூன்று மணிகளைக் கோர்த்து நான்காவது மணியில் நரம்பின் இரு முனைகளையும் க்ராஸாக விட்டு இழுக்கவும். இப்பொழுது டைமண்ட் வடிவில் இருக்கும், மணிகள் நரம்பின் நடு பகுதியில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
இடது பக்கம் பெரிய மணியும் வலது பக்கம் சிறிய மணியும் கோர்த்து ஒரு பெரிய மணியை கிராஸாக விட்டு லாக் செய்யவும். இதே போல் ஆறு சிறிய மணி வரும் வரை செய்யவும்.
ஆறு முறை சிறிய மணி முடிந்ததும், இதே முறையில் அடுத்து இரண்டு அடுக்கு பெரிய மணியில் போடவும். மூன்றாவது அடுக்கு வலது பக்கத்தில் இரண்டு மணிகளையும் கோர்த்து மூன்றாவது மணியில் கிராஸ் போட்டு லாக் செய்யவும்.
இனி இரண்டு முறை பெரிய மணி கொண்டு வரிசை உயர்த்தவும், மூன்றாவதாக ஸ்டெப் மூன்றில் இருப்பது போலவே செய்யவும்.
ஆறாவது சிறிய மணி கோர்த்ததும் முதல் முறை சேர்த்த மணியில் இணைத்து முடிச்சு போடவும்.
இரண்டு ஹார்ட் செய்து கொள்ளவும்.
இன்னொரு நரம்பை தனியாக கட் செய்து முதலில் ஒரு மணியை கோர்க்கவும், அதன் இரு முனைகளையும் ஹார்டில் இணைத்து மற்றொரு மணி கொண்டு லாக் செய்யவும். இதே போல் ஹார்ட் முழுக்க செய்யவும்.
இப்பொழுது இரண்டு ஹார்ட்டையும் இணைத்து படத்தில் உள்ளது போல செய்யவும், முழுவதும் முடிந்தவுடன் முடிச்சு போட்டு விடவும்.
பீட்ஸ் ஹார்ட் ரெடி. கீ செயின் அல்லது பெண்டன்ட் ஆக விரும்பியவாறு வைத்து கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க் யூ வனி :))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக அழகு..... காதலர் தின ஸ்பெஷலா... கலக்கலா இருக்கு....

தேன்க் யூ ப்ரியா !!! இந்த‌ மாசம் திரும்புற பக்கம் எல்லாம் இதயங்கள் கொள்ளை போற‌ அளவுக்கு இதயங்களா இருக்கு, அதான் இப்படி யோசிச்சு செய்தேன் வித்தியாசமா இருக்கட்டும் என்று:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப அழகா இருக்கு ரேணு

க்யூட்டா இருக்கு ரேணு.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு ரேணு.... :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்லா இருகுங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ungaluku aethana children irukanga.

யார கேக்குரீங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ungalathan jannath.nan kaeta question ku answer theritha konjam sollunga jannath.

முதலில் ஆசயா ஆண்குழந்தை வேண்டும் என கடவுலிடம் வேண்ட இந்தா என தந்து விட்டான் பின் ஒரு மூன் று வருடம் கழித்து (இல்லாததற்கு ஏங்குவதே உலக நியதி)பெண் குழந்தை வரம் கேட்டேன்
வரம் கிடைக்கவில்லை அதுவும் ஆண் தான் மொத்தம் இரண்டு குழந்தைகள்ங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நீங்க சென்னையா
உங்களுக்கு எத்தன குழந்தைங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அழகான‌ இதயம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆஹா ஐ ரொம்ப‌ நன்ராக‌ இருக்கு.

சகோதரிகள் உங்கள் சந்தேகங்களை அதற்கென்று உரிய இழைகளில் பேசலாமே!

பீட்ஸ் ஹார்ட் கைவினை பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கே சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

இமா , பால பாரதி, செல்வி,ஜனத், முசி மீரா பாரதி

அனைத்து தோழிகளுக்கும் நன்றி.....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா