சால்மன் மீன்

என் மகனுக்கு 8மாதம் தொட்ங்க உள்ளது இது வரை நான் பருப்பு சாதம் பழங்கள் முட்டை மஞ்சள் கரு மட்டும் தருகிறேன் சீரகம் மிளகு இதுவரை சேர்த்தது இல்லை குழந்தைக்கு சால்மன் மீன் மருத்துவர் தர‌ சொன்னார் அதை எப்படி செய்து தருவது

என் குழந்தைக்கு டாக்டர் சால்மன் மீனை ஆவியில் வேக வைத்து,வேக வைத்த உருளை கிழங்குடன் மசித்து அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து கொடுக்க சொன்னார்கள்.ஒரு வயதிற்க்கும் மேல் தான் குழந்தைக்கு இங்கு உப்பு சேர்ப்பதுண்டு,ஆனால் சிட்டிகை மிளகு சேர்க்க சொல்லியிருந்தார்கள்.

உருளைக்குப் பதில் ஒரு நாள் சாதத்துடனும்,மற்றொரு நாள் குழைய வேக வைத்த பாசி பருப்புடனும் சேர்த்துக்கொடுக்கலாம்.வேறு காய்கறிகளும் செர்க்கலாம்.

நன்றி வாணி மேடம்..

நன்றி

மேலும் சில பதிவுகள்