என்5 வயது மகளுக்கு ஹீமோகுளோபின் குறைந்துள்ளது.உதவுங்கள்.

ஹாய் ப்ரன்ட்ஸ்,என் மகள் LKGபடிக்கிறாள்.அவள் காரமோ,குழம்போ சேர்ப்பதில்லை.ஸ்கூலுக்கு வெரும்தோசை,வெரும் இட்லி,வெரும்பூரிதான் கொன்டுசெல்கிராள்,அதுவும் மிச்சம் கொண்டுவ்ந்துவிடுவாள்.வேருஎதுவுமே பிடிக்கரதில்லை.வீட்டில் வந்தும் சாப்பிட அடம்பிடிக்கிராள் இதனால் இப்பொழுது உடம்புக்குமுடியாமல் போய் டாக்டரிடம் பார்த்தபோது அவர் ஹீமோகுளோபின் குறைந்துள்ள்து என்ருசொன்னார் .அதனால் அவளை நான் எப்படி மாற்றுவது என்ருசொல்லுங்கள்.எந்த மாதிரியான உண்வு கொடுக்கலாம்.ப்ளீஸ்

உதவுங்கள்.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடிக்க சொல்லுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடிக்க சொல்லுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடிக்க சொல்லுங்கள்.

நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.

{நன்றி ======> ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்}

உங்கள் பெயர் கண்மணியா!

வேறு தளங்களில் உள்ளவற்றை பிரதி செய்து அறுசுவையில் போடுவது வேண்டாமே!

‍- இமா க்றிஸ்

ஹீமோகுளோபின் அதிகரிக்க பேரீசைப் பழம், கீரை வகைகள், கீரை குழந்தை சாப்பிடாது அதனால அதை கடைந்து சாதத்தில் பிசைந்து கொடுங்கள்,

கண்மணி,பாலபாரதி ரொம்பநன்றி.

kanmani neenga sonna intha method periyavargalukum ketkuma... enaku same problem than... pls reply me....

ஹலோ இனியா,

நான் இரண்டாம் முறை கரு தரித்தபோது எனக்கு HB மிகவும் குறைந்து விட்டது. நான் கண்மணி அவர்கள் சொன்னது போல முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், திராட்சை ஊறிய தண்ணீரை குடிக்க முடியவில்லை. அதனால், நான் நேரடியாக கருப்பு திராட்சை மற்றும் அத்திப்பழத்தை தினமும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். நான் அடுத்த மாதம் செக் அப் சென்ற பொது 2 பாயிண்ட் அதிகரித்து இருந்தது. பெரியவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லை. உடனடி பலன். முயற்சி செய்து பாருங்க.

Thanks,
Mahi
http://mahibritto.blogspot.com

மேலும் சில பதிவுகள்