தேதி: February 17, 2014
துணி - விரும்பிய இரண்டு நிறங்களில்
ஸ்பாஞ்ச் லைனிங் துணி
எம்ராய்டரி நூல் - பச்சை மற்றும் விரும்பிய நிறம்
எம்ப்ராய்டரி ஃப்ரேம் (Hoop)
பேப்பர்
ஜிப் - ஒன்று
ஊசி
படத்தில் உள்ளது போல் இரண்டு நிறங்களிலுள்ள துணிகளையும் இணைத்து தைத்துக் கொள்ளவும். பிறகு மேல்புறம் 16 சென்டிமீட்டரும், மற்ற மூன்று புறங்களும் 8 சென்டி மீட்டரும் இருக்குமாறு படத்தில் உள்ள வடிவத்தில் பேப்பரை வெட்டிக் கொள்ளவும்.

விரும்பிய டிசைனை பென்சிலால் துணியில் வரையவும். பிறகு துணியை ஃப்ரேமில் பொருத்திக் கொள்ளவும்.

எம்ப்ராய்டரி நூலைக் கோர்த்து விரும்பிய டிசைனை தைக்கவும்.

பேப்பரின் அளவில் துணியையும், ஸ்பாஞ்ச் லைனிங் துணியையும் வெட்டி வைக்கவும்.

துணியுடன் ஸ்பாஞ்ச் லைனிங் துணியைச் சேர்த்து ஓரத்தைச் சுற்றிலும் தைத்துக் கொள்ளவும்.

பிறகு படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு பக்க ஓரத்திலும் ஜிப் வைத்து தைத்து, துணியைத் திருப்பிவிட்டு பர்ஸின் ஓரங்களைத் தைத்து முடிக்கவும்.

அழகான மணி பர்ஸ் தயார். ஜிப்பின் ஓரத்தில் கீ செயின் மாட்டி அலங்கரிக்கலாம்.

Comments
musi
பர்ஸ் அழகாக இருக்கு. ஜிப் தைத்த பிறகு தான் 2 துணியையும் ஜாயின் பண்ணி தைக்கணுமா?
கலை
musi
பர்ஸ் அழகாக இருக்கிறது. செய்முறை விளக்கமும் தெளிவாக உள்ளது.
- இமா க்றிஸ்
முசி
அழகான பர்ஸ் முசி. நல்ல கலரும் கூட. விளக்கம் ரொம்ப தெளிவா இருக்கு
பர்ஸ்
முசி அழகா இருக்கு, தைக்க கொஞ்சம் சோம்பலா இருக்கு, தையலில் ஆர்வம் வந்தால் நிச்சயம் முயற்சித்து விட்டு சொல்கிறேன்:) எப்பன்னு மட்டும் கேட்காதீங்க:) கலர் காமினேஷன் சூப்பர்
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
musi
அழகாக இருக்கிறது. கலரும் நல்லா இருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முசி
சூப்பரா இருக்கு முசி.
எம்பிராய்டரியும் நல்லா போடறீங்க பா
நன்றி.
கைவினைக் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கலை383
நன்றி,ஜிப் தைத்த பிறகு தான் 2 துணியையும் ஜாயின் பண்ண வேண்டும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
இமா
வாழ்த்துக்கு மிக்க நன்றி,இமா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
உமாகுணா
வாழ்த்துக்கு நன்றி தோழி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரேனுகா
உங்க பாரட்டிர்க்கு நன்றி தோழி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நிகிலா
வாழ்த்துக்கு நன்றி தோழி.ஏதோ எம்பிராய்டரி சுமாரா போடுவேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.