அப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும்....

நீயா நானாவில் இந்த டாபிக் பேசுனா நல்லா இருக்கும்ன்னு நான் நினைச்சது அப்பாக்களின் செல்லமும், அம்மாக்களின் கோபமும், போன வாரம் அந்த தலைப்பு தான் வந்திருக்கு, இருந்தாலும் நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை, முக்கால் வாசி அம்மாகளை மட்டும் குற்றவாளி ஆக்கிட்டாங்களோன்னு ஒரு எண்ணம்,இன்னமும் கொஞ்சம் ஆழமா பார்த்திருந்தா அம்மாக்கள் பாடு புரிஞ்சு இருந்திருக்கும்ன்னு தோனுச்சு!!

அம்மா கோவமா மாற காரணமே அப்பா தானோன்னு தோனுது, அவங்க எல்லா விஷயத்துக்கும் செல்லம் கொடுக்கும் போது அம்மா கண்டிப்பா இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படறாங்க!!

செல்லமா பிள்ளையா வளர்க்கறேன்னு அப்பாங்க பன்ற தப்பு அவங்களுக்கு தெரியுதா இல்லையான்னே சந்தேகமாக இருக்கு!! செல்லபிள்ளையா வளர்கறது தப்பு இல்லை, ஆனா எப்படி செல்லம் கொடுக்கனும்ங்கறதையும் பார்க்கனும் தானே!!

குழந்தைங்ககிட்ட சூழ்நிலைக்கு ஏற்றது போல அம்மாக்கள் நடந்துக்குவாங்க, அவங்களோட அழுகை கூட பிடிவாதமா உண்மையான்னு கண்டுபிடிச்சு அதுக்கு ஏற்ற மாதிரி அம்மா கொண்டு போகும் போது அப்பா வந்தா மொத்த போராட்டமும் வீணா போகுது, அம்மா ஒரு விஷயத்தில் கண்டிக்கும் போது உள்ள நுழைஞ்சு அவங்க ஹீரோவாகவும், அம்மாக்களை வில்லியாகவும் ஆக்கிடறாங்க.

பிள்ளைங்க கேட்டா உடனே கொடு, அழறானா உடனே கொடு, எனக்கு இந்த உடனேங்கற விஷயத்தில் உடன்பாடு இல்லை, ஏன்னா எதோதட மதிப்பையும் உணர வைக்க முடியல.ஸ்கூல் பேங்குகுள்ளவே விழுந்துகிடக்கு பென்சில், அதை கவனிக்காம பென்சில கானாம் எனக்கு புதுசு கொடுன்னா எப்படி கொடுக்க? தேடி பார்க்கனும்ன்னு எண்ணம் வர மாட்டிக்குது, வீட்ல திட்டுவாங்களேன்னு மனசுல தோனல, காரணம் அப்பாகிட்ட கேட்டா உடனே கிடைக்கும். அம்மாகிட்ட கேட்டா தேடி எடுக்க சொல்லுவாங்க. எது ஈஸி?

அம்மாக்கள் பிள்ளைகளை மிரட்ட உபயோகிக்கற ஒரே வார்த்தை அப்பா வந்தா திட்டுவாங்க, தப்பு செய்யாதைன்னு, ஆனா இப்ப இருக்க பிள்ளைகள் அம்மாவ மிரட்டுது திட்டுன அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு இந்த கொடுமைய எங்க சொல்ல:(

அப்பா கோவமா அடிச்சாலோ திட்டினாலோ அம்மாக்கள் அப்பா ஏன் கோவபட்டார், நீ என்ன தப்பு பன்னின? சாரி சொல்லு அப்பாகிட்ட இப்படி அம்மாக்கள் சொல்லுவது போல பிள்ளைகளுக்கு எத்தனை முறை அப்பா அம்மாவின் கஷ்டத்தை விளக்கி இருக்காங்க, இதெல்லாம் சொல்லி புரியவைக்கனும்ன்னு ஏன் தோனமாட்டிக்குது இந்த அப்பாமார்களுக்கு:(, ஆனால் பதிலுக்கு கேலியும் கிண்டலும் தான் நீ தான் பெஸ்ட், அம்மா வொர்ஸ்ட்ங்கற மாதிரி..

பிள்ளைகள் சிரிக்கும் போது கொஞ்ச ரெடி, ஆனா அழும் போது சமாளிக்க ரெடி இல்ல,

எக்ஸாம்ல அதிகமா மார்க் வரனும் ஆனா நான் சொல்லி கொடுக்க மாட்டேன்

நான் செல்லம் தான் கொடுப்பேன், ஆனா பிள்ளைய ஒழுக்கமா நீதான் வளர்க்கனும்

என் பிள்ளைக்கு எதுக்கு வேலை சொல்ற, நீ வீட்ல என்ன பன்ற நீ செய்ய கூடாதா?

பிள்ளைங்க சாப்பட‌ என்ன‌ கேட்டாலும் வாங்கிதான் தருவேன், எதும் வந்தா நீ தான் பார்க்கனும் வேற வழி இல்ல

இப்படி இருக்க எண்ண ஓட்டங்கள் மாறுன நல்லா இருக்கும். அப்பா வீட்ல இருக்கும் போது வீடு அமைதியா இருக்கனும்ங்கறதுக்காக பிள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் ஓ.கே சொன்னா ரெம்ப கஷ்டம்.

நம்ம‌ பன்னுன‌ தப்புக்கு அப்பா வந்தா அம்மாவ‌ திட்டுவாங்களோன்னு அம்மாவுக்கு பாவம் பார்க்கற‌ காலம் போய், அம்மா தானே திட்டுவாங்குவாங்கன்னு சந்தோஷபடறாங்க‌ பிள்ளைங்க‌!!

5
Average: 4.5 (4 votes)

Comments

அன்பு ரேணுகா,

அப்பப்பா, பிள்ளைங்களை வளர்க்கறதுக்குள்ள‌, அம்மாக்கள் படும் பாடு! ரொம்பவும் நொந்து போய் சொல்லி இருக்கீங்க‌.

ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்று தலைப்பு போட்டு, உலக‌ அப்பாக்கள் எல்லார்கிட்டயும் படிக்க‌ சொல்லணும். அப்பவாவது அம்மாக்களின் கஷ்டம் அவங்களுக்கும் புரியும்.

அன்புடன்

சீதாலஷ்மி

நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே.என்ன செய்வது?எல்லோரும் அப்பா செல்லம் ஆயிட்டாங்க

//அப்பா கோவமா அடிச்சாலோ திட்டினாலோ அம்மாக்கள் அப்பா ஏன் கோவபட்டார், நீ என்ன தப்பு பன்னின? சாரி சொல்லு அப்பாகிட்ட// - நான் அடிக்கடி செய்வது. ஆனா இதுவே நான் திட்டினா அடிச்சா அவர் என்ன சொல்வார் தெரியுமா?? “ஏன் இப்படி போட்டு அடிக்கிற? இப்படிலாமா பேசுவாங்க குழந்தைகிட்ட? போ நீ முதல்ல...” எனக்கு தான் இது. :) என் பிள்ளைகள் இப்பலாம் நான் திட்டினா என்னையே கேட்கறாங்க... “இப்படியா திட்டுவாங்க??”ன்னு. எல்லாம் நீங்க சொன்ன மாதிரி அப்பாவை ஃபாலோ பண்றாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை ரேணு

அந்த போட்டோ உங்கள் பதிவிற்கு மிக பொருத்தம்

நானும் நீயா நானா சென்ற வாரம் பார்த்தேன் அதில் எல்லா குழந்தையும் அப்பா தான் பிடிக்கும் நான் அப்பா செல்லம் தான் என்று சொல்கிறார்கள். அப்பா குழந்தைகளுக்கு என்ன தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் அம்மா படும் கஷ்டம். இப்ப இருக்கும் கால கட்டத்தில் நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் உண்மை. அப்பா வந்தா திட்டுவாங்க தப்பு செய்யாதே. ஆனால் இப்ப இருக்கும் பிள்ளைகள் திட்டுனா அப்பாகிட்ட சொல்லுவேன் எங்கள் வீட்டில் இது நடக்குது.

உங்க வார்த்தைகள் முற்றிலும் உண்மை. குழந்தைகள் பற்றிய ஃபுல் டென்ஷனும் அம்மாக்குதான்.வெளில போய் நல்லமுறையில் நடக்கிறான்.யுவர் சன் ஈஸ் வெரி நைஸ் அண்டு ஸ்மார்ட் மிஸ்ட்டர்ன்னு சொன்னா பெருமையா இருப்பாங்க.பட் என் மனைவி பங்கு இதில் அதிகம்னு சொல்ல மனம் வராது.
பிள்ளைகளின் உடையிலிருந்து பரிட்சை,உடல்நலம்னு சொல்லிட்டே போலாம் இப்படி அனைத்திலும் அம்மா பங்கு இருக்கு. ஆஃபீஸ் வொர்க் முடிஞ்சு வீட்டிலிருக்கும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கட்டும்னு நாம அதற்கும் சேர்த்து அல்லாடுவோம்.ஆனா அப்பாஸ்லாம் நாள் முழுக்க பார்க்கராளே கொஞ்சம் அவளுக்கு பிடித்த வேலை செய்யட்டும்னு டைம் விட மாட்டாங்க.சோ 24 ஹவர்ஸ் ஃபுல் அரஸ்ட்டுதான் போங்க....:-(

புரியாது சீதா அம்மா புரியாது!! அப்படி புரிஞ்சுகிட்டா இப்படி நம்ம புலம்ப மாட்டோமே:)
எப்படி படிக்க வைச்சாலும் அவங்கள பத்தின விஷயம்ன்னா அழகா ஸ்கிப் பன்னிடுவாங்க அவ்வளவு திறமைசாலிகள்:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நிக்கிலா அப்பாக்கள் ஓவர் செல்லம் தரவும், அம்மாக்கள் கண்டிக்கவும் பிள்ளங்க முடிவு அப்பா தான் பெஸ்ட்ன்னு,

நன்றி பிரியா போட்ட தேட தான் ரெம்ப நேரம் எடுத்துச்சு, இந்த வரிகளும் தலைப்பும் ஒத்து போனாதாலே இதையே சூஸ் பன்னிட்டேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நானும் இதே பாடு தான் வனி படறேன், என் மேல தப்பு இருந்தா கூட பசங்க முன்னாடி சொல்லாம தனியா சொல்லாம், ஆனா எல்லா திட்டும் பசங்க முன்னாடியே விழும் போது பசங்களுக்கு நம்ம காமடியா தெரியறோம், திரும்பவும் பசங்ககிட்ட மிரட்டுனா நம்மள மிரட்டறாங்க:(

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பாலபாரதி வீட்டுக்குவீடு வாசல் படி போலதான் இருக்கு, இந்த பிரச்சனை எல்லாம், யாரவது ஒருத்தர் புரிஞ்சுக்கனும் , இல்லாட்டி அம்மாக்கள் பாடு திண்டாட்டம் தான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு இந்த விஷயத்தில் எல்லா அம்மாக்களும் சேம் பின்ச் போட்டுகலாம், அத்தனை ஒற்றுமை:)
ஒரு பிள்ளை சூப்பரா வளர்ந்தா அப்பா மாதிரி சூப்பர், சின்ன தப்பு பன்னுனா கூட உங்க அம்மா எப்படி வளர்த்து வெச்சுருக்கா உன்னன்னு பேசுர சமுகம் தான் இருக்கு,
அதனால தான் சில நேரம் இரவில் எல்லாரையும் தூங்கவைச்சுட்டு உட்காந்திடறது இது எனக்கான நேரம்ன்னு,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

"பிள்ளைகள் சிரிக்கும் போது கொஞ்ச ரெடி, ஆனா அழும் போது சமாளிக்க ரெடி இல்ல,

எக்ஸாம்ல அதிகமா மார்க் வரனும் ஆனா நான் சொல்லி கொடுக்க மாட்டேன்

நான் செல்லம் தான் கொடுப்பேன், ஆனா பிள்ளைய ஒழுக்கமா நீதான் வளர்க்கனும்

என் பிள்ளைக்கு எதுக்கு வேலை சொல்ற, நீ வீட்ல என்ன பன்ற நீ செய்ய கூடாதா?"

ஆஹா! எங்க‌ வீட்டுககு வந்து பாத்துட்டிங்களா!!

அன்புடன்
ஜெயா

அன்பு ரேணு,
எல்லா வீடுகளிலும் நடக்கும் வழமையான‌ நிகழ்ச்சி தான். ஆனால், குழந்தைகளுக்கு என்ன‌ வேணும்னு அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும். அது இப்போதைய‌ விள‌ம்பரதார்களுக்கும் கூட‌ தெரிந்து இருக்கிறது.

அனுபவமோ?;)

அன்புடன்,
செல்வி.

100ல ஒரு வார்த்தை. இந்த பசங்களூக்கு நாம வில்லியாதான் மாறிட்ட்டோம்.நம்ம கிட்ட கேட்கணும்னு கூட தோண மாட்டுது.அப்பா ஓக்கே சொல்லிட்டா அப்பறம் என்னன்னு ஆச்சு.என்னமோ போகங்க.இந்த அப்பாங்களே இப்படிதான்

Be simple be sample

நீங்க சொல்வது முற்றிலும் உண்மை ரேணுகா,எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம் தான்,பிள்ளைகள் அம்மாவை இப்போ புரிஞ்சுக்க மாட்டாங்க,அவங்க பிள்ளைகளை வளர்க்கும் போதுதான் தெரியும்
ஆனால் கணவர்கள் எப்போது தான் புரிந்து கொள்வார்களோ ????

ஜெயா நான் நினைச்சேன் எங்க வீடு தான் அப்படின்னு, ஆனா உன் வீடு மட்டும் இல்லை, இப்ப எல்லாவீட்டு நிலவரமும் அப்படித்தான்னு வந்திடுச்சு நிலைமை,

உங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லல, அட்ரஸ் தாங்க அந்த பக்கம் வந்தா கண்டிப்பா வாரேன்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்வி அக்கா இப்படி இத்தனை தூரம் வந்திட்டு ஒரு டிப்ஸ் சிப்ஸ் கொடுக்காம போனா எப்படி? எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு, இந்த அம்மா எல்லாம் ரெம்ப நல்லவங்க, எவ்வளவு படுத்தினாலும் தாங்கிக்குவாங்கன்னு:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இருக்க வீடே அதிர்ர மாதிரி பசங்க சத்த போட்டா கூட நீ வந்து மிரட்டுன்னு தான் கூப்பிடுவாங்க, அவங்க மிரட்டுனா பிள்ளைங்க கேக்காதாம், இப்படியே சொல்லி சொல்லி நம்மள வில்லிகளா ஆக்கிட்டாங்க ரேவதி
அம்மா எல்லாம் சும்மான்ற மாதிரி தான் இருக்கு, உப்புக்கு சப்பா இருக்கோம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதே அதே வாணி,இந்த பிள்ளைகளுக்கு நம்மள புரிய வைச்சே காலம் போகுது போங்க,அவங்க எல்லாம் புரிஞ்சுகறது ரெம்ப கஷ்டம், ஒரு நாள் முழுக்க வீட்டையும் சமாளிச்சு பிள்ளையவும் சமாளிக்க விடனும், இரண்டு நாளுக்கு விட்டா தெரியும் நம்ம பாடு, ஆனால் ஒத்துக்க மாட்டாங்க, கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல டயலாக் தான் வரும்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உண்மைதான்.

ஆஹா ஒரு சிலர் மட்டும் இல்ல ஒட்டு மொத்த தலைமுறையுமே இப்படி தான் வளர்ந்துட்டு இருக்காங்களா? அப்பாக்கள் எல்லாரும் ஆபிஸ், வேலைன்னு நிறைய நேரம் வெளியில இருக்கறதுனால வீட்டில் பெரும்பாலும் என்ன நடக்குதுன்னு அவர்களுக்கு தெரிவதில்லை வீட்டில் இருக்கும் கொஞ்சம் நேரம் ஏன் பிள்ளைகளை கடிந்துக்கனும்னு அவங்க எதுவும் சொல்றதில்லை, அப்பறம் இன்னொரு விஷயம் என்னான்னா நிறைய அப்பாக்கள் நாம தான் இதுலாம் அனுபவிக்கல, இப்படிலாம் இல்ல அவங்களாவது அனுபவிக்கட்டுமேன்னு கேட்கறதுலாம் செய்து கொடுத்துடுறாங்க. ஆனா அம்மாக்கள் அப்படி இல்லை இரண்டு நிலையையும் பிள்ளைகளுக்கு உணர்த்தனும்னு போராடுறாங்க அதில் கண்டிப்பு, கோபம்லாம் வருமா அப்போ அம்மாலாம் வில்லி ஆகிடுறாங்க அப்பாலாம் ஹீரோ ஆகிடுறாங்க பிள்ளைங்கட்ட. எப்போதான் இந்த பிள்ளைகளும் அப்பாக்களும் புரிஞ்சுக்க போறாங்களோ

தேவி நீங்க‌ சொல்றது சரிதான், அப்பாக்கள் பிள்ளைகளை இலகுவாக‌ வளர்க்க‌ பார்க்கிரார்கள், அப்படி நினைப்பது தவறு இல்லை, அதற்க்கு இப்படி இத்தனை செல்லம் தேவை தானா என்று யோசித்தால் நல்லாயிருக்கும், ஒட்டு மொத்த‌ தலைமுறையே ஒரே போல் வளர்வதால் தான் இன்று இந்த‌ செய்தி தொலைகாட்சி வரை எட்டி இருக்கு போல‌:(

பாரதி நன்றி!!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா, நீங்க சொன்ன அதே கதை தான் எங்க வீட்டுல! இன்னும் ஒரு படி மேல போய் அவங்க அப்பாகிட்ட அம்மா நல்ல இல்லனு சிபாரிசு வேற!!!