பலாப்பழ ஷேக்

தேதி: February 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பலாச்சுளை - 6
தேங்காய் பால் - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ்


 

பலாச்சுளையிலிருந்து கொட்டைகளை நீக்கி விடவும். தேங்காய் பால் பிரெஷ்ஷாக இருக்க வேண்டும்.
மிக்ஸியில் பலாச்சுளையுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.
பிறகு தேவைக்கேற்ப ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்.
மிகவும் சுவையான பலாப்பழ ஷேக் தயார்.

நான் நாட்டு சக்கரை சேர்த்து செய்துள்ளேன். பொதுவாக இது வெள்ளை சர்க்கரையில் செய்யும் ரெசிப்பி தான். பலாபழத்தின் இனிப்பை பொருத்து சர்க்கரையின் அளவை கூடுதலாகவோ, குறைத்தோ சேர்க்கலாம். தேங்காய் பாலை அப்போதைக்கு தயாரித்துக் கொள்ளவும். தேங்காய் பால் சேர்ப்பதால் அரைத்த உடனேயே பருகி விடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எந்த ரெசிபியும் 4 ஃபோட்டோக்கு மேல போகுறதில்லை ;) இப்படி சுலபமா கொடுத்தா நான் கட்டாயம் ட்ரை பண்ணுவேன். இப்போ இங்கும் பழம் கிடைக்குது, வேறு ஏரியா பக்கம் போகனும். கட்டாயம் ட்ரை பண்றேன். யம்மி ரெசிபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ருசித்தேன்... சீசன் வந்ததும் கண்டிப்பாக செய்திடனும்... யம்மி

அன்பு வித்யா,

பலாப்பழம் ரெசிபி ரொம்ப‌ நல்லா இருக்கு, செய்வதற்கும் சுலபமாக‌ இருக்கும், செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் வித்யா,

ரெஸிப்பி ஈசியா இருக்கு... இங்க இப்ப பலாபழ சீசன் தான் அடுத்த வாரம் மார்க்கெட் போகும்போது வாங்கி செய்து பார்க்கிறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பலாப்பழ ஷேக் ஈசியா இருக்கு வித்யா. டேஸ்டாவும் இருக்கும்னு பார்க்கவே தெரியுது. பலாப்பழம் வாங்கும் போது கண்டிப்பா செய்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வித்யா சுவையான‌ குறிப்பு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஈசியான ரெசிபி இனி வருவது பலா பழம் சீசன் நான் கண்டிபாக செய்ய போறேன்.
தாங் யூ வித்யா.

நன்றி வனி.. கண்டிப்பா பழம் வாங்கி செய்து பாருங்க.. ரொம்ப நல்லா இருக்கும்..

// எந்த ரெசிபியும் 4 ஃபோட்டோக்கு மேல போகுறதில்லை ;) //
சமைக்க சோம்பேறித்தனம் தான்.. ;) வேற என்ன... :))

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி ப்ரியா.. பழம் கிடைத்தவுடன் செய்து பாருங்க.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா செய்து பாருங்க.. நல்லா இருக்கும்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி பிரேமா.. செய்து பாருங்க.. பாப்பாவுக்கு கண்டிப்பா பிடிக்கும்-னு நினைக்கிறேன்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமா உமா.. ரொம்ப சுலபம்.. ருசியாவும் இருக்கும்.. நன்றி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி அருள்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி பாரதி.. ரொம்ப சுலபம் தான்.. செய்து பாருங்க.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

பழம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பலாப்பழ ஷேக் பார்க்கவும் அழகு, செய்வதும் ஈசி போல‌. வாழ்த்துக்கள் வித்யா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றி முசி.. பழம் கிடைக்கும் போது செய்து பாருங்க.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமா சுமி.. ரொம்ப ஈஸி தான்.. நன்றி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)