துரியன் பழம்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம். துரியன் பழம் குழந்தை இன்மைக்கு சாபிடுவதுனல்லது என்று நம் தோழிகள் நெறைய பேர் கூறியதை பார்த்தேன். அதனால் நீண்ட நாட்களாக தேடி இன்று தான் துரியன் வணங்கி வந்துள்ளேன். அதை period நேரத்தில் சாப்பிடலாமா? எப்போது எப்படி சாப்பிட வேண்டும். அளவு இருக்கிறதா? என்று விளக்கமாக சொல்லுங்கள்.

துரியன் பழத்தை வாங்கி வந்து காற்றோடமாக‌ வைத்து விடுங்கள். இரண்டு நாட்களில் பழத்தில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு ஏற்பட்ட‌ பிறகு பழத்தை உரித்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் நீங்களும் உங்கள் கணவரும் சாப்பிடுங்கள். அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தயிர்,மோர் சேர்த்து கொள்ள வேண்டாம். எனக்கு சொன்னவர்கள் இப்படிதான் பயன்படுத்த‌ சொன்னார்கள்.

period நேரத்தில் சாப்பிடலாமா என்று சொல்லுங்கள். ஒரு நாளைக்கு எத்தனை பழம் சாப்பிட வேண்டும்.பதில் அளித்ததற்கு நன்றி மீனா. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.மீனா நீங்கள் துரியன் சாப்பிட்டு பலன் கிடைத்துள்ளதா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஒரு பழத்தை உரித்து மூன்று நாட்களுக்கு மூன்று பங்குகளாக‌ பிரித்து வைத்து கொள்ளுங்கள்.ஒரு நாளைக்கு ஒரு பங்கை எடுத்து இருவரும் சரி பாதியாக‌ சப்பிடுங்கள்.period நேரத்தில் சாப்பிட‌லாம் என்றுதான் எனக்கு சொன்னார்கள். பதினைந்து நாளுக்கு ஒரு முறை மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட‌ சொன்னார்கள். பத்து நாட்களுக்கு முன்புதான் முதல் முறையாக‌ சாப்பிட்டேன். நம்பிக்கையோடு சாப்பிடுங்கள் நல்லதே நடக்கும். all the best sangeetha.

என்றும் நட்புடன்
மீனாகண்ணப்பன்

Thankyou for your reply

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் தோழி. துரியன் பழம் சாப்டீங்களா எப்படி இருந்தது.

Hi Meena,

துரியன் பழதிற்கு englishil பேரு என்ன?

உங்கள் வைஷ்ு:)

ஆங்கிலத்திலும் துரியன் என்று தான் நினைக்கிறேன். எனக்கு சரியாக‌ தெரியவில்லை தோழி.

துரியன் பழம் சாப்பிட்டேன் அதில் இனிப்பு அதிகம் இல்லை. எந்த ஒரு சுவையும் தெரிய வில்லை. அந்நாள் நெறைய பேர் இனிப்பாக இருக்கும் என்று சொல்லிருந்தர்கள். ஒருவேளை எனக்கு பழம் எப்படி வாங்க வேண்டும் என்று தெரிய வில்லையோ என்னமோ போங்க. குவைத்ல 1பழம் 5 K.D. 1கிலோ 2.500 K.D. நம்ம இந்தியன் காசுக்கு 1100 ரூபா ஆச்சி. மொத்தமா அதுல 10 பழம் தான் இருந்தது. நீங்க தொடர்ந்து சாப்பிட்டு என்ன பலன் கிடைக்குதுன்னு சொல்லுங்க தோழி, உங்கள் பதிலுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்திலும் துரியன் பழம் DURIYAN தான் தோழி.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நீங்க‌ குவைத்ல‌ இருக்கிங்களா? இங்கு 1 kg ‍ 450 ரூபாய் தான். நான் ஒருமுறை தான் சாப்பிட்டேன். அடுத்த‌ வாரம் சென்று வாங்கி வந்து மறுபடியும் சாப்பிட‌ வேண்டும் தோழி. உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடம் ஆயிற்று?

துரியன் பழம் 2014 சாப்பீட்டூ இருக்கீங்கள்ல அதனால் உங்களுக்கு குழந்தை பிறநதுச்சா நீங்க‌ சொன்னா நானும் சாப்பிடலாம்னு இருக்கேன் SIS

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்