துரியன் பழம்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம். துரியன் பழம் குழந்தை இன்மைக்கு சாபிடுவதுனல்லது என்று நம் தோழிகள் நெறைய பேர் கூறியதை பார்த்தேன். அதனால் நீண்ட நாட்களாக தேடி இன்று தான் துரியன் வணங்கி வந்துள்ளேன். அதை period நேரத்தில் சாப்பிடலாமா? எப்போது எப்படி சாப்பிட வேண்டும். அளவு இருக்கிறதா? என்று விளக்கமாக சொல்லுங்கள்.

நீங்க துரியன்பழம் சாப்பிடீங்கல்ல‌ உங்களுக்கு பழன் கிடச்சதா சொல்லுங்க‌ எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆச்சு குழந்தை இல்லை +

எல்லாம் நன்மைக்கே

நீங்க துரியன்பழம் சாப்பிடீங்கல்ல‌ உங்களுக்கு பழன் கிடச்சதா சொல்லுங்க‌ எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆச்சு குழந்தை இல்லை +

எல்லாம் நன்மைக்கே

துரியன் பழத்தின் தாயகம் இந்தோனேஷியா , மலேஷியாவில் உள்ள மழைக்காடுகள் இங்கு தான் அதிக அளவில் வளர்கிறது . துரியன் பழத்தில் கார்போஹைட்ரெட் - 21% ப்ரோட்டீன் - 2.5% கொழுப்பு - 20% கொலஸ்ட்ரால் - 0% பைபர் - 10% உள்ளது இதை தவிர நிறைய விட்டமின் ,எலெக்ட்ரோலைட் , மினரல் ,பைட்டொ நியூட்ரிசியன் அதிக அளவில் உள்ளது இது பழங்களின் அரசன் என அழைக்கப்படுகிறது இது கேன்சர் வராமல் தடுக்கிறது என விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது . குழந்தையின்மையை இந்த பழம் போக்குகிறது என்பது பழங்கால நம்பிக்கை தவிர இது நிரூபிக்கப்படவில்லை . இந்தபழம் வெண்ணைப்பழம் , பலாப்பழம் . வாழைப்பழம் போன்றது .

இந்த பழத்தை ஆண் , பெண் இருவரும் சாப்பிடலாம் , நானும் இந்த பழத்தை சாப்பிட்டுஇருக்கேன் இது வரைக்கும் பலன் இல்லை . இந்த பழம் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள பழக்கடைகளில் கிடைக்கும் முன் பதிவு செய்யவேண்டும். நானும் திண்டுக்கல் தான்.

நானும் திண்டுக்கல் தான்.///// சந்தோசமா இருக்கு எங்க‌ ஊர்லையே அறுசுவையில் எனக்கு ஒரு தோழி
நான் இன்னும் டிரை பன்னல‌ இனிமேல் தான் வாங்கனும், ரியல் புரூட் சொல்லிவைக்கலாமா, நீங்க‌ ஒரு கிலோ என்ன‌ amount வாங்கினீங்க‌, மேலும் நான் மலர்செல்வி டாக்டர் தான் டிரிட்மென்ட் எடுத்துக்கறேன்

எல்லாம் நன்மைக்கே

ரியல் புரூட் சொல்லி வைங்க , நாங்க கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கினோம். நான் பாரதி மருத்துவமனையில் டிரிட்மென்ட் எடுத்தேன்

sorry sis ரெண்டு நாள் அறுசுவை ஒப்பன் பன்ன‌ டைம் இல்லை, 1000 ரூபா நா ரெம்ப‌ அதிகமா இருக்கு, நம்ம‌ அறுசுவை தோழிகள் 450 கு வாங்கியதா சொன்னாங்க‌, அதான் கேட்டே ,பாரதி மருத்துவமனையில் டிரிட்மென்ட் உங்களுக்கு எப்படி இருக்கு, மலர் செல்வி பரவாயில்லை நான் அவங்ககிட்ட‌ போனபிற்கு ஒருமுறை கன்சிவ் ஆனேன், ஆனால் எனக்கு கருப்பை பிரச்சனை நால‌ குழந்தை இதய‌ துடிப்பு இல்லாமபோச்சு,

எல்லாம் நன்மைக்கே

கடவுளின் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும் குழந்தை பிறக்கும் . எனக்கு ஒரு ஆறு நாட்களாக நேரம் இல்லாத காரணத்தால் அறுசுவை பார்க்க முடியவில்லை .துரியன் பழம் எங்களுக்கு என் உறவினர் வாங்கித்தந்தார் . பாரதி மருத்துவமனையில் டிரீட்மென்ட் சரியில்லை பா .

கடவுளின் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும் குழந்தை பிறக்கும் ///// எனக்கும் அந்த‌ நம்பிக்கை அதிகமாக‌ இருக்கிறது, அதுவும் எனக்கு 2 முறை குழந்தை அபாசன் ஆனதால் கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு டாக்டர் சொல்லீ இருக்காங்க‌. எனக்கும் நிறைய‌ நம்பிக்கை இருக்கு, அதான் டிரிட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன். மலைவேப்பு சாப்பிடுரேன், நீங்களும் மலைவேம்பு டிரை பன்னி பாருங்க‌ நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்,

எல்லாம் நன்மைக்கே

கடவுள் அருளால் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது

Virukum idam mobile number thanga pls

மேலும் சில பதிவுகள்