புதினா தக்காளி கூலண்ட்

தேதி: February 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புதினா - ஒரு கைப்பிடி அளவு
தக்காளி - ஒன்று
இஞ்சி - சிறு துண்டு
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ்


 

புதினா மற்றும் தக்காளியை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
மிக்ஸியில் புதினாவுடன் நான்காக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றை வடிகட்டி தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்து, தேவைக்கேற்ப ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்.
சுவையான புதினா தக்காளி கூலண்ட் தயார்.

புதினாவும், தக்காளியும் சருமத்திற்கு மிகவும் நல்லது. வாரம் 2 அல்லது 3 முறை இந்த கூலண்டை பருகினால் சருமம் பளபளப்பாகும். இஞ்சியும், புதினாவும் ஜீரணத்திற்கும் நல்லது.

நான் புதினாவை அதிகமாகச் சேர்த்துள்ளதால், பச்சை நிறமாக உள்ளது. புதினாவை அதிகமாகச் சேர்க்க விரும்பாதவர்கள் இதில் பாதி அளவு மட்டும் சேர்க்கலாம்.

சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த புதினா தக்காளி கூலண்டை தவிர்த்துவிடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெயில் காலத்தை வரவேற்க அருமையான‌ குறிப்பு... ஜில் ஜில் கூல் கூல்... இப்போ இல்லை செய்துவிட்டு சொல்கிறேன்.....

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றிகள்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமா ப்ரியா.. ரொம்ப ஹெல்தி.. கண்டிப்பா செய்து பாருங்க.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

குறிப்பு ந‌ல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கூலண்ட் ரொம்ப ஹெல்தி & அருமையா இருக்கு வித்யா. வெயிலுக்கு ஏற்ற நல்ல குறிப்பு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கூலண்ட் மிக‌ அருமையா இருந்தது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Puthina tomoto kulad....
endry try panni pakuren