பலாப்பழ பணியாரம்

தேதி: February 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பலாச்சுளைகள் - 8 (அ) 10
மைதா - முக்கால் கப்
ரவை - அரை கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவைக்கு


 

பலாச்சுளைகளுடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
மைதாவுடன் ரவையைக் கலந்து கொள்ளவும்.
அதனுடன் சோடா உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதைச் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நன்றாக கலந்துவிடவும். (தேவைப்பட்டால் மீண்டும் நீர் சேர்த்து கலக்கவும்).
சூடான பணியாரக் கல்லில் நெய் விட்டு மாவை ஊற்றி வேகவிடவும். சிவந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான பலாப்பழ பணியாரம் தயார்.

ரவை சேர்ப்பதால் நீரை இழுத்துக்கொள்ளும். அதனால் பணியார மாவு பதத்திற்கு தேவைப்படும் நீரை ஊறிய பிறகும் சேர்த்து சரிசெய்யலாம்.

இந்தக் கலவையை கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் எடுத்து ஊற்றி பொரித்தும் எடுக்கலாம். பணியாரமாக செய்யும்போது எண்ணெய் குறைவாக இருக்கும். பலாப்பழத்தின் இனிப்பிற்கேற்ப சரிபார்த்து சர்க்கரையைச் சேர்க்கவும். இதில் வெல்லத்தையும் துருவிச் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா,
பலாபழம் பனியாரம் ஈஸி அன்ட் சூப்பரா இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

செம‌ டெப்டிங் ரெசிபி.. டிஷ் சூப்பர் ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனிதா அந்த கடைசி போட்டோவ பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு இப்பவே சாப்பிடனும்னு, பொசுபொசுன்னு டேஸ்ட்டும் நிச்சயம் நல்லா இருக்கும்னு தான் தெரியுது.

ஏங்க பலா பழத்தாள பனியாரமா? இதுதான்ங கேள்வி பட்றன் செம கிள்ளாடிங்க எப்படிங்க கண்டு புடிச்சீங ஆனாளும் ஈசியான ரெசபீ எங்க ஊர்ல முன்னோர்கள் பலாக்காய் பிரியானினு சுழையினுல் சாதம் வைச்சு சமைப்பார்களாம் செம டேஸ்டியாம் உங்கள்ள யாறுக்காவது தெரிந்தாள் சொல்லி தர முடியுமா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

பலாப்பழத்துல பணியாரம் இப்பத்தான் கேள்விபடுறேன், பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்க்கவே ரொம்ப‌ அழகா இருக்கு டேஸ்டும் சூப்பரா இருக்கும் போல‌..... இரண்டாவது படத்தில் ரவை மஞ்சளா இருக்கு... வறுக்கணுமா அக்கா?

நான் வறுத்த ரவை தான் பயன்படுத்தி இருக்கேன். வாங்குவதே ரோஸ்டட் ரவை தான், அதனால் வறுக்க வேண்டும் என்று குறிப்பிட மறந்தேன். வறுக்காமலும் செய்யலாம் என்றே நினைக்கிறேன். ரேவ்ஸ் ஒரு ரெசிபி கொடுத்திருந்தாங்க முன்பு... வாழைப்பழ பணியாரம். அவங்க வறுக்காத ரவை பயன்படுத்தி பின் அந்த கலவை ஊறிய பின் அரைச்சிருப்பாங்க. அப்படி வேண்டுமானாலும் செய்து பாருங்க. நான் பயன்படுத்தியது ரோஸ்டட் தான், அரைக்கவும் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க இலங்கை தானே? நீங்க கேட்கும் குறிப்பு எனக்கு தெரியாது, ஆனா துஷ்யந்திக்கு தெரிந்திருக்கும் என நினைகிறேன். அவங்க குறிப்புகளில் தேடிப்பாருங்க, இல்லன்னா அவங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டு வைங்க, பார்த்தா தெரிஞ்சா நிச்சயம் உதவுவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பழாப்பழ பணியாரம் நல்லா டேஸ்டா இருக்கும்னு போட்டோவ பார்த்தாலே தெரியுது. மைதா சேர்த்தா கொழகொழப்பாகிடாதா?

கலை

பலாபழ பனியாரம் சூப்பர், குண்டு குண்டு பனியாரம் பொசு பொசுனு இருக்கு சூப்பர், வித்யாசமாகவும் இருக்கு பா, இப்பவே சாப்பிடனும் போல இருக்கு. இனி வருவது பலா, மாம்பழம் சீசன் பலாப்பழம் வைத்து பனியாரம் செய்யலாம். அது மாதிரி மாம்பழம் வைத்து என்ன செய்யலாம் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க வனி.

கொஞ்ச மொழு மொழுப்பாக தான் வரும், வழக்கமான அரிசி மாவு பணியாரம் போல வராது. நாம் எண்ணெயில் போட்டு எடுக்கும் இனிப்பு போன்று இருக்கும். ஆனாலும் ரவை சேர்ப்பதால் அதிக மொழு மொழுப்பு இல்லாமல் நன்றாகவே பூத்து வரும். செய்து பாருங்க கலை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலே "Google search" பெட்டியில் மாம்பழம் என்று தட்டி பாருங்க... ஏகப்பட்ட ரெசிபி வருது. அறுசுவையில் இல்லாததா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி, அவசியம் செய்து பாருங்க. நாளை ஊர் பயணம் இருப்பதால் நேற்றில் இருந்து எல்லாருக்கும் பதில் போட நேரமில்லாமல் போனது. அதான் கேள்வி கேட்டிருந்தவர்களுக்கு மட்டுமே உடனடியாக பதில் போட்டிருக்கேன். ஊரில் இருந்து வந்ததும் எல்லாருக்கும் பதிவு வரும். கோவிக்காதீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பழாப்பழ பணியாரம் சூப்பர்,கிடைக்கும் போது செய்துபார்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பழாப்பழ பணியாரம் சூப்பர் வனி! புசு புசுனு செம டெம்டிங்க்கா இருக்கு! :-) ஆனா, இங்க பலாப்பழம் கிடைக்கறதுதான் கஷ்டம், அப்புறம் எங்க நான் செய்துபார்க்க?! அதனால நீங்க செய்து அனுப்பிடுங்க... :-)

அன்புடன்
சுஸ்ரீ

வனி பலாப்பழ பணியாரம் ஈசியா இருக்கு. பழம் வாங்கும்போது செய்து பாக்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நான் செய்து பார்த்துடேன். ரொம்ப நல்ல இருக்கு. எங்க இருந்து இந்த மாதிரி புது ரெஸிபீ எல்லாம் கத்துக்கிறீங்க. ஸூபர்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்தா ஃபோட்டோ போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எனக்கு பிடிச்சது, அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டு எல்லாம் பிடிக்கல ஜனதுல், வாழைப்பழத்தில் செய்யறோமே ஏன் இதில் ட்ரை பண்ண கூடாதுன்னு முன்பு ஒரு முறை கையில் சிக்கியதை எல்லாம் ஏதோ ஒரு அளவில் சேர்த்து ட்ரை பண்ணேன், நல்லா வந்தது. அப்படியே இப்போ பழம் கிடைச்சா செய்வ்தாகிட்டுது. :) நீங்க கேட்ட பிரியாணி கிடைச்சுதா? நானும் தேடி பார்க்கிறேன். மிக்க நன்றி ஜனதுல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முன்பே ஒரு முறை செய்ததை ஃபேஸ்புக்கில் படம் போட்டிருந்தேனே... அதே தான். இம்முறை மாவு அளவுகள் தான் கொஞ்சம் மாற்றம். மிக்க நன்றி அருள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) சந்தேகத்தை முன்பே பதில் சொல்லிட்டேன் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் பிரியா. வறுத்த ரவையே தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) கிடைச்சுதா மாம்பழ ரெசிபி லிஸ்ட்??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பார்சல் வந்துடும் இன்னும் சில நாட்களில் ;) நலமா? எப்போ முன் போல் ரெசிபி அனுப்புவீங்க? ப்ரொக்கோலின்னு ஒரு காயை நான் மறக்கும் முன் வந்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டாயம் செய்துட்டு சொல்லுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நீங்க தான் முதல் செய்து பார்த்து பதிவிட்டது. பிடிங்க... இந்த ரோஜா பூவை. எங்கையும் பிடிக்கல பார்வதி, சும்மா வாழைப்பழத்தில் செய்வதை வேறு இனிப்பான பழத்தில் மாற்றி செய்த முயற்சி அவ்வளவு தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா