போண்டா

தேதி: February 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள்
கொத்தமல்லித் தழை
உப்பு
எண்ணெய்
மேல் மாவிற்கு:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரம் மசாலா தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மேல் மாவிற்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் செய்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
ஈஸியான போண்டா தயார். மாலை நேர டிபனுக்கு ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

போண்டா சூப்பர், போண்டா செய்ய உருளைக்கிழங்கு மட்டும் போதுமா இல்லை அதோட பச்சை பட்டாணி சேர்த்து செய்யலாம.

சிம்பிள் & ஈசியான‌ குறிப்பு. பிடித்திருக்கு.

சேம் பின்ச் சேம் பின்ச் ரேவதி, நானும் இப்படி தான் செய்வேன். ஒரே ஒரு மாற்றம் கேரட், பீன்ஸ் வேக வைத்து சேர்ப்பேன். உங்க மெத்தட்லயும் செய்து பார்க்கறேன் ரேவதி. மேல் மாவுக்கு பஜ்ஜி மிக்ஸ் தான் எவ்வளோ சோம்பேறின்னு உங்களுக்கு தெரிஞ்சுட்டா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ரேவ்.

ரேவ்ஸ் குறிப்பு அருமை :)
வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அபூர்வமான டிஷ்ங கண்டிப்பா செய்துடுரன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அருமையான குறிப்பாருக்கே ரேவ்ஸ். சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரேவதி மேடம்.. போண்டா நேற்று ஈவ்னிங் செய்து பார்த்தேன்.. நல்லா இருந்துச்சு.. எல்லோருக்கும் பிடிச்சுருந்துச்சு. நான் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூள் போட்டேன். ஒரு டீஸ்பூன் சரியான அளவு தானா?

கலை

அன்பு ரேவதி,

எல்லோருக்கும் பிடித்தமான‌ உணவு. குறிப்பு ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

உருளை கிழங்கு உருண்டையை பிரட் துண்டின் நடுவில் வைத்து உருட்டி, பின்பு கடலை மாவில் போட்டு பொரித்தால் இன்னும் சுவையாக‌ இருக்கும்.

எனது குறிப்பை வெளிட்ட‌ அட்மின்& அறுசுவை குழுவினருக்கு நன்றி

Be simple be sample

தாமதமான‌ பதிலுக்கு மன்னிக்கவும்.தான்க்யூ பாலா .நம்ம‌ இஷ்டம்தான்பா எதுவும் சேர்த்துக்கலாம்.

Be simple be sample

ஆமாபா .ரொம்ப ஈசி குறிப்பு .தான்க்யூ

Be simple be sample

ஐய் கிள்ளிக்கோங்க‌ சேம் பின்ச்.அப்படியிம் செய்வேன் நானும் காய்கள் சேர்த்து. யார்கிட்டயும் சொல்ல‌ மாட்டேன் பா. தான்க்யூ

Be simple be sample

ரொம்ப தான்க்ஸ் செல்வி

ஜனதுல் செய்துட்டு சொல்லுங்கபா. தான்க்ஸ்

Be simple be sample

தான்க்யூ உமா

Be simple be sample

கலை செய்து பார்த்துட்டு பதிவிட்டதுக்கு தான்க்ஸ்பா. கொஞ்சம் மசாலா அதிகம் ஆனா பிரச்சனை இல்ல‌

Be simple be sample

தான்க்யு சீதாம்மா

Be simple be sample

நல்ல‌ டிப்ஸ் .கண்டிப்பா ஒரு முறை இதுபோல‌ செய்து பார்க்கிறேன்பா. தான்க்யூ

Be simple be sample

இவருக்கு பிடிச்ச போண்டா. இதுவரை செய்ததில்லை, அவசியம் ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் முறையே இவ்வளவு அருமையா போண்டா செய்ய‌ முடியுமான்னு நானே ஆச்சர்யபட்டேன் நான் செய்ததை சுவைத்து. அவ்வளவு நல்லா இருந்தது. சுவையான‌ போண்டா குறிப்புக்கு நன்றி ரேவ்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanku so much vani. Seithu parthutu sonnathuku.

Be simple be sample