கோழி குழம்பு

தேதி: February 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 15
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
பட்டை - ஒரு அங்குல துண்டு
கறி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு, சோம்பு, கறிவேப்பிலை


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றில் கறி மிளகாய் தூள் தவிர மற்ற பொருட்களை வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அதனுடன் கறி மிளகாய் தூள் சேர்த்து மைய அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, சிக்கனைப் போட்டு வதக்கவும்.
சிக்கன் சிறிது வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுலபமான, சுவையான கோழி குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோழிக்குழம்பு சூப்பர் வித்யா.
வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வித்யா பார்க்கும் போதே தெரிது, நல்லா சுவையாவும் மணமாவும் இருக்கும்னு, நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முதல் முறையா 4 படத்தை தாண்டிட்டீங்க ;) வாழ்த்துக்கள். சூப்பர் குழம்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா