சில‌ சந்தேகங்கள்

ஹாய் தோழீஸ்,
எனக்கு சில‌ சந்தேகங்கள் உள்ளன‌ தயவு செய்து தெளிவுபடுத்துங்கள். எனது சந்தேகங்களை கீழே பதிவு செய்துள்ளேன்.
1. விந்துவில் உயிரனுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்?
2. ஊர்ந்து செல்லும் திறன் எவ்வளவு இருக்க‌ வேண்டும்?
3. விந்து சோதனையின் ரிசல்ட் எப்பொழுதும் ஒரே மாதரி இருக்குமா இல்லை ஒவ்வொரு முறையும் மாறுபடுமா?
தயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

வணக்கம் எனக்கு மேரஜ் ஆகி 10மாதம் ஆகி விட்டது ஆனால் கர்பம் ஆகவில்லை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தல் கருகுழாய் அடைப்பு இருக்கு என்று கூறியுள்ளார் அதற்கு அடைப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் சித்த மருத்துவம் கூறுங்கள் ,வீட்டு வைத்தியம் கூறுங்கள்

கேள்வியை வைத்தவர் ரவியா திருமதி. ரவியா!!

எனக்கு நீங்கள் கேட்ட இரண்டும் தெரியாது ஆனால் ஒன்று மட்டும் தெரியும் - பிரச்சினை இன்னது என்று தெரிந்தும் வீட்டில் வைத்தே குணமாக்குவதாக நினைத்து காலத்தைத் விரயமாக்கினால், திருமதி. ரவிக்கு அதிக சிரமம். அவரிடம் தான் பார்ப்பவர்கள் கேள்வி கேட்பார்கள். பாவம் அவர். பத்து மாதத்தில் மருத்துவ பரிசோதனைக்குப் போகும் தம்பதிகள் - குழந்தைப் பேறு விரைவில் வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பீர்கள். இன்னும் காலதாமதம் தேவையா? ஒழுங்கான மருத்துவர் ஆலோசனையின் பேரில் அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைக்குப் போவது நல்லது என்பேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி

மேலும் சில பதிவுகள்