2.5 வருடங்களுக்கு பின் நல்ல‌ செய்தி

அன்பு தோழிகளே,

எனக்கு 2 வருடஙளுக்கு முன் அபார்ஷன் ஆனது அதற்குப் பின் எனக்கு கரு தங்கவெ இல்லை, எனக்கு முறையற்ற‌ மாதவிலக்கு (Irregular periods)தான், ஒவ்வொரு முறையும் 40 நாளில் HPT செய்து Negative பின் 60ஆவது நாளில் டாக்டரிடம் சென்று மாதவிலக்கு ஆக‌ மாத்திரை வாங்கி சாப்பிடுவேன்.2 வருடமாக‌ இப்படியே தான் வாழ்க்கையே சூனியமாக‌ தெரிந்தது.நீர் கட்டிக்கு,தைராய்டுக்கு, என‌ எல்லா டிரீட்மென்டும் எடுத்தேன், கருகுழாய் அடைப்பு இருக்க‌ என்றும் பார்த்தோம் அதும் இல்லை, கடைசியாக‌ டாக்டர் IUI செய்ய‌ வேண்டும் என்று நவம்பர் மாதம் மாதவிலக்கு ஆக‌ மாத்திரை தந்தார், மாத்திரை சப்பிட்டேன் ஆனால் ஏனோ IUI செய்ய‌ மனம் ஒத்துக்கொள்ள‌ வில்லை. டிசம் 2 மாதவிலக்கு ஆனது, ஃபோலிக் ஆசிட் மாத்திரை மற்றும் பி காம்பிலக்ஸ் டானிக் தொடந்து எடுத்துக்கொன்டேன் 45 ஆவது நாளில் HPT செய்தோம் Negaitive வந்தது, மீண்டும் 60 ஆவது நாளிள் HPT செய்தோம் Negative தான் வந்தது, மனம் நொந்து ஒருவரின் ஆலொசனையின் பேரில் திருக்கருகாவூர் திருக்கோவிலுக்கு சென்று வந்தோம்.எதேட்சயாக‌ 80ஆவது நாளில் HPT செய்தேன் அற்புதம் நடந்தது போல் Positive வந்தது ‍‍‍ இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் வாழ்க்கை நிறைவடைந்த்து போல் உள்ளது

இதை உங்க‌ளுடன் பகிர‌ வேண்டும் போல் இருந்த்து ,

முறையற்ற‌ மாதவிலக்கு உள்ள‌ தோழிகளே தயவு செய்து என் போல் அவசரம் படாதீர்கள் ‍ நன்றி

hi gayathrikarthikeyan valthukal nala sapuduga kadavula nambi pona kandipa Kai Vida mataga

வாழ்த்துக்கள்

பிரியா ஆண்டோ

வாழ்த்துக்கள் காயத்ரி. கவனமா இருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கள் தோழி, எனக்கும் உங்களை போல் பிரச்சனை உள்ளது. உங்கள் பதிவுகளை பார்த்து தான் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.

வாழ்த்துக்கள்

உங்கள் வைஷ்ு:)

வாழ்த்துக்கள்! காயத்ரி கவனமா இருங்க பா.

வாழ்த்துகள் காயத்ரி, நாம் இருவரும் ஒரே படகில் சவாரி செய்கிறோம். எனக்கும் 2 வருடங்களாக pcos, thirod பிரச்னை இருந்து வந்தது எவ்ளவோ டாக்டர் இடம் சென்றும் பலன் இல்லாமல் போனது. பிறகு நாங்களும் திருக்கருகாவூர் சென்று வந்த முதல் மாதமே கரு தங்கி விட்டது. அந்த அம்மனின் அருளை நினைத்து நொடிபொழுதும் பிரம்மித்து போகிறேன். நீங்கள் இப்பொழுது எத்தனாவது மாதம். இப்பொழுதும் தொடர்ந்து thyroid மாத்திரை எடுத்து வருகிறீர்கலா?

மிக்க மகிழ்ச்சி ,,,நானும் எவ்வளவோ கடந்த 3 வருடங்கலா க treatment எடுத்தேன் எந்த பலனும் இல்ல ,உங்கள் பதிவினை பார்த்த வுடன் நானே pregnant ஆன மாதிரி ஒரு சந்தோசம் ,நானும் இந்த கோவிலுக்கு சென்று வருகிரேன்,ந்ன்றி

வாழ்த்துக்கள் கூறிய‌ அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி......

மேலும் சில பதிவுகள்