2.5 வருடங்களுக்கு பின் நல்ல‌ செய்தி

அன்பு தோழிகளே,

எனக்கு 2 வருடஙளுக்கு முன் அபார்ஷன் ஆனது அதற்குப் பின் எனக்கு கரு தங்கவெ இல்லை, எனக்கு முறையற்ற‌ மாதவிலக்கு (Irregular periods)தான், ஒவ்வொரு முறையும் 40 நாளில் HPT செய்து Negative பின் 60ஆவது நாளில் டாக்டரிடம் சென்று மாதவிலக்கு ஆக‌ மாத்திரை வாங்கி சாப்பிடுவேன்.2 வருடமாக‌ இப்படியே தான் வாழ்க்கையே சூனியமாக‌ தெரிந்தது.நீர் கட்டிக்கு,தைராய்டுக்கு, என‌ எல்லா டிரீட்மென்டும் எடுத்தேன், கருகுழாய் அடைப்பு இருக்க‌ என்றும் பார்த்தோம் அதும் இல்லை, கடைசியாக‌ டாக்டர் IUI செய்ய‌ வேண்டும் என்று நவம்பர் மாதம் மாதவிலக்கு ஆக‌ மாத்திரை தந்தார், மாத்திரை சப்பிட்டேன் ஆனால் ஏனோ IUI செய்ய‌ மனம் ஒத்துக்கொள்ள‌ வில்லை. டிசம் 2 மாதவிலக்கு ஆனது, ஃபோலிக் ஆசிட் மாத்திரை மற்றும் பி காம்பிலக்ஸ் டானிக் தொடந்து எடுத்துக்கொன்டேன் 45 ஆவது நாளில் HPT செய்தோம் Negaitive வந்தது, மீண்டும் 60 ஆவது நாளிள் HPT செய்தோம் Negative தான் வந்தது, மனம் நொந்து ஒருவரின் ஆலொசனையின் பேரில் திருக்கருகாவூர் திருக்கோவிலுக்கு சென்று வந்தோம்.எதேட்சயாக‌ 80ஆவது நாளில் HPT செய்தேன் அற்புதம் நடந்தது போல் Positive வந்தது ‍‍‍ இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் வாழ்க்கை நிறைவடைந்த்து போல் உள்ளது

இதை உங்க‌ளுடன் பகிர‌ வேண்டும் போல் இருந்த்து ,

முறையற்ற‌ மாதவிலக்கு உள்ள‌ தோழிகளே தயவு செய்து என் போல் அவசரம் படாதீர்கள் ‍ நன்றி

கண்டிப்பாக‌ , நீங்களும் சென்று வாருங்கள் அதே சமயம் டாக்டர் அறிவுரையும் பின்பற்றுங்கள்...

வாழ்த்துக்களுக்கு நன்றி,எனக்கு இது 3ஆவது மாதம் நான் இன்னும் தொடர்ந்து தைராய்டு மாத்திரை எடுத்து வருகிறேன் இது குழந்தயின் மூளை வளர்ச்சிக்கு தானாம்

காயத்ரி உங்க நிலமையில தான் நான் உள்ளேன் உங்க பிரச்சனை தான் எனக்கு..,
நானும் கருகாவூர் அம்மனை பார்த்தேன் இன்னும் நிக்கல மனசு பாரமா இருக்கு மனசு வலிக்குது பா............

மிகுந்த மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள். இந்த கோவில் எங்கு உள்ளது.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேம்,,, இப்ப உங்களுக்கு குழந்தை இருக்கா,, எனக்கு கல்யாணம் ஆகி 2 வருசம் ஆக போகுது,, என்னோட அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 4 மாசத்துல இறந்துட்டாங்க,, அப்ப நான் 3 மாசம் கன்சிவ், அப்புறம் அபாா்ட் ஆச்சு, அப்புறம் கன்சிவ் ஆகவே இல்ல நானும் டிாிட் டெஸ்ட் எடுத்து பாா்த்து நொந்துட்டேன், எப்பவுமே நெகடிவ் தான், நீா்கட்டி இருக்குனு ட்ர்ட்மென்ட எடுத்தான உடம்பு ரொம்ப வெயிட் போட்டுட்டேன், அத குறைக்கறதா,, எனக்கு குழந்தை பொறக்குமா,,

Super gayathri and thanks sister

Enakum ippadithan iruku enna panrathunu ne therila nanum thirukarukavur poga poren. Niraya kelvi patu iruken

Kovil la etahvathu parigaram pananuma konjam yaravathu solunha please

wish u all the best gayathiri

கண்டிப்பாக உடம்பை குறைக்க முயற்சி பண்ணுங்க. எனக்கும் நீர் கட்டி பிரச்சனை இருந்தது.. 1 வருடமாக அதற்க்கான மருந்துகளை எடுத்து வந்தேன்.. பிறகு நொந்து போய் அத்தனை மருந்துகளையும் நிறுத்திவிட்டு ஜிம் போக ஆரம்பித்தேன். கடவுள் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை.. ஜிம் சென்று 3 மாதத்தில் கருத்தரித்தேன். கர்ப்ப ரக்ஷாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தோம்.
நீங்கள் மாத்திரைகளை நிறுத்தாமல் உடம்பை குறைப்பதற்கு முயற்சி பண்ணுங்கள்.. கடவுளையும் மனதார நம்புங்கள்.. கண்டிப்பாக அந்த இறைவன் உங்கள் தாயே திரும்ப உங்கள்ளுக்கு குழந்தையாக கிடைக்க அருள் புரிவான்.

வாழ்துகள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்