கேரட் பாதாம் கீர்

தேதி: March 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கேரட் - 2 (அ) 3
பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - 2 இதழ்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி வைக்கவும்.
காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.
வேகவைத்த கேரட் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும். அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.
பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
சுவையான கேரட் பாதாம் கீர் தயார். குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதெல்லாம் செய்து அசத்துறீங்களே... நான் வரவா வீட்டுக்கு?? ;) கலரும், படமும் பார்த்தாலே குடிக்க தோனுதே. சூப்பர். உங்க தயாரிப்பா அங்கிள் தயாரிப்பான்னு உண்மையை சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Mom easy method டா இருக்கு , குங்குமப்பூ கண்டிப்பா போடனும்மா, போடனும்னா department store ல‌ கேட்டா இருக்குமாம்மா,நா carrot,ல‌ சாதம் மட்டும் தா செய்துளளேன், கேரட் பாதாம் கீர் home ல‌ try பன்ற ,,doubt also
குங்குமப்பூ rate ,kilo or pkt ல‌ கேக்கனும்மாமா,

yours lovable
maha

சூப்பர் குறிப்பு :) அழகா எளிமையா சொல்லிக்கொடுத்திருக்கீங்க, நிச்சயம் செய்து பார்ப்பேன். பாதாம் மிக்ஸ் என்னிடம் உள்ளது, அதை பயன்படுத்தலாமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கேரட் பாதாம் கீர் சூப்பர் அம்மா, எப்படி மா உங்களால் மட்டும் இப்படிலாம் செய்ய முடியுது, ரொம்ப எளிமையான குறிப்பாகவும் உள்ளது. இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

அசத்துறீங்க சீதாம்மா. சூப்பர். அந்த கடைசி கிண்ணம் எனக்குத்தான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பார்க்கவே சூப்பரா இருக்கு!!!நாவூற வைக்கிறீங்க,செய்து பார்த்து சொல்கிறேன்..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுவை அருமை சீதாமேடம் :) எங்க வீட்ல அனைவ்ருக்கும் மிகவும் பிடிச்சது :)

///குங்குமப்பூ rate ,kilo or pkt ல‌ /// மஹா குட்டியூண்டு டப்பால கிடைக்கும்.

(மீறிப்போனா 1கிராம் இருக்குமோ என்னமோ தெரில 250 ரூபாய். டப்பால கிராம் அளவினை தேடிப்பார்த்தா, பேரை மட்டுமே பலமொழில எழுதி இருக்காங்க. விலையும் அதில போடல, ஆனா கடைல வாங்கின ரேட் இது.)

இருங்க சீதாமா வந்து என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்த்தவுடன் செய்ய தூண்டியது,செய்தும் பார்த்தாயிற்று,ரொம்ப நல்லா இருந்தது.

நன்றி

அன்பு வனி,

வர்றேன் வர்றேன்னு சொல்றீங்க‌, ஆனா, வர‌ மாட்டேங்கறீங்க‌:(

ஒரு நாளைக்கு நான் வந்து நிக்கப் போறேன் உங்க‌ வீட்டுல‌, உங்க‌ ஸ்பெஷல் மெனு ரெடி பண்ணி வைங்க‌:)

அங்கிள் உதவியோட‌ நான் தயார் செய்தேன். இப்பல்லாம் என்னை விட‌, அங்கிள்தான் குறிப்புகள் கொடுப்பதில் ரொம்ப‌ ஆர்வமா இருக்காங்க‌.:)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஹா,

ரொம்ப‌ ரொம்ப‌ ஈசியாக‌ செய்துடலாம். குங்குமப்பூ கட்டாயம் இல்லை. விரும்பினால் சேர்க்கலாம்.

அருள் சொன்ன‌ மாதிரி, குங்குமப்பூ சின்ன‌ டப்பாவில் கிடைக்கும். ரொம்பவும் விலையும் அதிகம்தான். ஒரு இழை சேர்த்தாலே போதும்.

செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

செய்தே பார்த்து, பதிவும் கொடுத்தீட்டிங்க‌:) ரொம்பவும் சந்தோஷம். குங்குமப்பூ பற்றிய‌ தகவலுக்கும் நன்றி. எல்லாருக்கும் பயன்படும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். சத்து நிறைந்ததும் கூட‌. காரட் கண் பார்வைக்கும் சரும‌ மேம்பாட்டுக்கும் மிகவும் நல்லது.

நீங்க‌ விரும்பினால் காரட்டை அதிகமாக‌ சேர்த்து, கொஞ்சம் கெட்டியாக‌, ஸ்மூத்தியாகக் கொடுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

உங்களுக்கு இல்லாததா, அப்படியே எடுத்துக்கோங்க‌. டேஸ்ட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு முசி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

காரட், பால் = உங்களுக்கு விருப்பமான‌ அளவில் கூடுதலாக‌ சேர்த்துக்கலாம். செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

செய்து பார்த்தீர்களா, பிடிச்சிருந்ததா, மிக்க‌ மகிழ்ச்சி.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி