"மல்லிகையின் மணம்"

இன்னிக்கு காலைல சின்னவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அப்படியே பக்கத்துல இருக்க சூப்பர் மார்க்கெட் போனேன், கடைக்குள்ள போனதும் கண்ணில் பட்டது "மல்லிகை பூ". பார்த்தவுடன் சந்தோஷம் பூவை பார்த்து எத்தனை நாள் ஆகுது,அதுவும் மல்லிகை சொல்லனுமா? கிப்ட் பேப்பர் ஒன்னு வாங்கனும் மேல போய் எடுத்துட்டு அப்பறம் பூ எடுக்கலாம்ன்னு நேரா மாடி ஏறியாச்சு, ஆனா அங்க மனசு நிக்கல, மல்லிகை பூவை பத்தியே மனம் சுத்துச்சு, வாங்கலாமா? வேண்டாமா?இந்த யோசனை தான்.

அங்க இருக்கறது மல்லிகை தான், ஆனா நெருக்கமா கட்டி இருக்காது, மணம் இருக்காது, குண்டு குண்டா கண்ணை பறிக்காது, சாப்ட்டு 10 நாள் ஆன கணக்கா இருக்கும், இது பேருக்கு தான் மல்லிகை வாங்கலாமா வேணமா? மேலே நான் தேடியது கிடைக்கல, கீழே வந்ததும் பூ அழைத்தது, மனம் ஏங்கியது, மூளை தடுத்தது, பொய்யாய் காய் வாங்க ஒரு சுற்று சுற்றினேன், காரணம் மனம் முழுக்க மல்லிகையில் சுற்றியதால். ஆனால் முளை தடுத்தது, ஆசைபட்டதெல்லாம் வாங்க கூடாது என்று தத்துவம் பேசியது,மனம் எதிர்த்தது நான் ஆசைபட்டதையெல்லாம் வாங்குபவள் அல்ல, அப்ப மணமே இல்லாத மல்லிகையை வாங்காதே என்று மூளை உத்தரவு போட்டது யாரு சொல்றத கேக்க? முடிவில் மனம் வென்றது, மல்லிகை பூவை எடுத்துவிட்டேன், கடையை விட்டும் வெளியே வந்தும் மல்லிகை பூ எங்கோ இழுத்து சென்றது, பழைய நினைவுகளை கண்ணில் காட்டியது, எத்தனை ஆசை இந்த மல்லிகை பூக்கு, ஆனால் நான் படித்த பள்ளியில் பூ வைக்க அனுமதி இல்லை, விடுமுறை நாள் மட்டும் வைத்தாயிற்று, அதுவும் ஒரு முழம் குறையாமல் ....இந்த ஊரில் எப்பவாது கிடைக்கும் பூவில் ஒரு ஜீவனும் இருக்காது, உதிரி பூவா கிடைச்சா கூட நெருக்கமா கோத்து வைக்கலாம், அதுவும் இல்லை, எனக்கு பூ கட்ட தெரியாது தான், கட்டுவதற்க்கு வாய்ப்பு அமைந்ததில்லை, ஊரில் செட்டில் ஆகும் போது பூ கிடைக்கும் போது கட்டி பழகலாம் என்று தோன்றியது, ஆனால் கனகாம்பரம் பூ கட்டி பழகிய போது எட்ட எட்ட வந்து படுத்தியது எல்லாம் நினைக்கும் போது சிரிப்பு தான் வந்தது, தாத்தாவின் தோட்டத்தில் எத்தனை கனகாபர செடி இருந்தது?
லீவில் ஊருக்கு போனால் நானும் என் மாமா பொண்ணும் போட்டி போட்டு பறிப்போம், என் சின்ன தாத்தாவின் தோட்டத்திலும் எத்தனை செடி ? எல்லா பூவையும் மொத்தமாய் பறிப்போம், என் சித்தி கட்டும்போது ஆசையா இருக்கும் மொத்தமாய் கட்டி பார்க்கையில் , தாத்தாவின் ஊரை மனதில் நிறுத்தியதில் அங்கு அடுத்து நினைவுக்கு வந்தது என் மாமாவின் மனைவி, என் தோழி ...எங்கள் நட்பின் கால அளவு ஒரு நாள் மட்டும் தான், அதிகம் பார்த்தது இல்லை,சிறுவயதில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் மனதில் நிழல்களாய் தெரியும் ...ஒரே ஒரு முறை சிறுவயதில் பார்த்ததால்.... ஆனால் எனக்கு திருமணம் முடிந்து நான் இங்கு வந்த பிறகு அவள் திருமண மாகி அங்கு வந்தாள்,நான் ஊருக்கு போயிருந்த போது ஒரே ஒரு நாள் மட்டுமே நாங்கள் ஒன்றாய் இருந்தோம் என் தாத்தாவின் ஊரில் , ஒன்பது வருடங்களுக்கு முன், அன்று எத்தனை கதைகள், எத்தனை பகிர்வு, சந்தோஷம் உறவில் கிடைத்த முதல் தோழி அவள்... மறுநாள் ஊருக்கு கிளம்பும் போது பாதி வழி ஒன்றாய் வந்தோம், அதற்க்கு பிறகு அவரவர் பஸ் பிரிய வேண்டும், பஸ் ஸ்டாண்டில் இருவரும் பிரிய மனம் இல்லாமல் ஒரே அழுகை, இனி எப்ப பார்ப்போம் என்றே தெரியாது .. கைகளை இறுக‌ பிடித்து கொண்டோம் விட மனம் இல்லை, இருவர் கண்களிலும் கண்ணீர் மட்டும், பஸ்க்கு நேரமாகுது உடன் இருப்பவர்கள் குரல்..
நாலு அடி முன் நடந்தாலும் மீண்டும் சேர்ந்து ஒரே அழுகை , அன்று தான் நாங்கள் சந்தித்தது.. அதற்க்கு பிறகு போன வருடம் ஊருக்கு போன போது நம்பர் கண்டுபிடித்து போன் பண்ணி பேசினேன், குரல் தழுதழுத்தது, இருவரும் காண ஏங்கி கொண்டே தான் இயங்கி கொண்டிருக்கிறோம், ஒரே சிந்தினை இன்றும்,பல வருடம் கழித்து பேசிய சந்தோசம் அன்று இருந்தது, மனம் நிறைந்து இருந்தது,
நிறைய முறை முகபுத்தகத்தில் தேடி இருக்கேன், அவள் வீட்டில் யாரவது கிடைப்பார்கள் என்று ஒரு நாளும் கிடைத்ததில்லை, ஒரு வாரமாய் பேசிட முயற்சி செய்தும் போன் போகலை, ஆத்திரமாய் வந்தது, பல வருடம் கழித்து கிடைத்த நட்பு தொலைத்தேனோ மிண்டும் என்று தோன்றியது, மாமாவை பார்த்தால் சண்டை போடனும் என்னை மறந்தீர்களா என்று ..அழுகை அடக்க முடியவில்லை, அப்பொழுது பாலை அடுப்பில் வைத்தேன் காபி போட, கிச்சனலில் இருந்த கண்ணன் படம் பார்த்து இன்னும் கோபம் வந்தது, என்னை அழ வைத்து பார்ப்பதில் தான் எத்தனை ஆனந்தம் உனக்கு என்று திட்டி கொண்ட காபியுடன் அமர்ந்தேன் கணினியின் முன் ...

மீண்டும் அவளின் முகம் கண்ணில் கண்ணீராய் வந்தது, மீண்டும் முக புத்தகம் தோன்றியது, நிச்சயம் இங்கு யாரும் கிடைப்பார்கள், ஊர் , பெயர் விதவிதமாய் தேடியும் கிடைக்கவில்லை, திடிரென ஒரு சிந்தனை, சொந்தங்களின் நட்பு, அவர்களின் நட்பு, நட்பின் நட்பு இப்படி 5 ஆறு பட்டியல் பார்த்து இறுதியாய் ஒரு பெயர் கிடைத்தது, வேறு யாரும் இல்லை தோழியின் தங்கை, விவரங்கள் படிக்கும் போது அவள் போல தான் தெரிந்தது, ஆனால் அவள் இல்லை என்றால் , ஒரு மெசேஜ் தட்டினேன், நீ தோழியின் தங்கை தானா? என்று பதில் வரும் தெரியவில்லை, ஆம் என்றே பதில் வேண்டும் என்று வந்தாலும் மனம் தவித்தது,மீண்டும் கண்ணனிடம் சொல்லிவிட்டேன் இல்லை என்று பதில் வந்தால் பேசவே மாட்டேன் என்று, மதியமாய் ஒரு மெசேஜ், அக்கா நான் தான் என்று....அடடா சந்தோஷம் தாங்கவில்லை உடனே பதில் கொடுத்தேன், பேசினோம், நம்பர் வாங்கிகொண்டு அவளிடம் போனில் பேசினேன், மனதில் ஒரு பெரிய பாரம் குறைந்தது, தொலைத்ததாய் நினைத்தது இங்கு தான் இருந்தது இனி எங்கும் போகாது என்று தோன்றியது,.காலையில் வாங்கி வந்த மல்லிகை இப்பொழுது மணம் வீசியது, மனம் மூளைக்கு ஒரு குட்டு வைத்தது நீயும் உன் தத்துவமும் என்று....

5
Average: 4.2 (5 votes)

Comments

உங்கள் பதிவைப் பார்த்ததும் மல்லிகையே மல்லிகையே என்று பாடத் தோன்றுகிறது. வாங்கும் போது "மணம்" இல்லாத மல்லிகை தோழியின் குரல் கேட்டதும் மணம் வீசியதே!! நம்ம மனசைத்தான் என்னென்னு சொல்ல !!

;)) டவுட்டு டவுட்டா வருதே!!

இமா சரியா தப்பா படிச்சேனா! இல்லை, தப்பா சரியா படிச்சேனா !!!!

சமர்த்துப் பொண்ணா ஒரு தடவை படிச்சு திருத்தி வைங்க ரேணுகா. அதுக்குப் பின்னாடி திரும்ப வந்து நான் சரியா படிச்சேனா என்று செக் பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

வாணி என்ன ஒற்றுமை எனக்கும் அதே பாடல் வரிதான் வந்தது மனதில்..
கண்விழித்ததில் இருந்து கடை செல்லும் வரை நன்றாக தான் சென்றது, மனம் விரும்பும் மல்லிகையை கண்டதும் எத்தனை கேள்விகள் , நினைவுகள், பலமுறை தேடி கிடைக்காத ஒன்று, இன்று ரெம்ப கவலையா இருக்கும் போது கிடைத்தால் அதன் சந்தோஷத்திற்க்கு அளவு இருக்கா? மல்லிகை பூ உதவியதாய் மனம் சொல்லுது:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இமா என்னத்த சொல்ல, ஒன்னும்புரியல சொல்லதெரியலன்னு பாட்டு தான் படதோனுது, என் மனதில் வந்த குழப்பம் தீர்ந்து திருத்தினேன், அது தானா என்று சொல்லுங்க:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க. . படிக்க படிக்க இனிமையா இருக்குங்..
// மல்லிகை இப்பொழுது மணம் வீசியது, மனம் மூளைக்கு ஒரு குட்டு வைத்தது நீயும் உன் தத்துவமும் என்று....//
ரொம்ப அருமைங் :-)

நட்புடன்
குணா

ஹாய்,

;;மனம் ஏங்கியது. மூளை தடுத்தது///மூளை உத்தரவிட்டது//மனம் வென்றது. ஒவ்வொரு பொருள் வாங்கும்//பார்க்கும் போதும் இந்த‌ தத்துவம் புரியும்ங்க‌. உங்க‌ பதிவு என் மனசு என்னை பார்த்துபேசுவதுப்போல் இருந்ததுங்க‌.
தோழியுடன் பேசியுதும் மல்லிப்பூ மணம் வீசியது.உண்மையான‌ வார்த்தைங்க‌.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

;)) //ஒன்னும் புரியல// சும்மா எல்லாம் சொல்லப்படாது ரேணு. அதேதான். உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு என்று எனக்குப் புரியுது. ;))

இப்போ.. நிஜமாவே மல்லிகை 'மணம்' வீசுது. தாங்ஸ்.

‍- இமா க்றிஸ்

அன்பு ரேணுகா,

ஒரு பொருள் கிடைக்காமல் இருக்கும்போதுதான் அதன் அருமையும், மணமும் குணமும் தெரியும் என்பதை அழகாக‌ சொல்லியிருக்கீங்க‌.

கிடைக்காமல் தேடி, கிடைத்தால் = அந்த‌ மணம், மனத்தைக் கொள்ளையடித்து விடுகிறது!

மல்லிகை மணம் = என் மனதை, மதுரை வீதிகளுக்குக் கொண்டு சென்று விட்டது.

நெருக்கமாகத் தொடுத்த‌, கெட்டி மல்லிகைச் சரம், மதுரைக்கே உண்டான‌ ஒரு தனித்துவமான‌ பூத் தொடுத்தல் = அங்கே இருந்தப்ப‌ அதன் அருமை தெரியலை. இப்ப‌ தெரியுது, மனம் ஏங்குது.

மனதைக் கவர்ந்த‌ மணத்துக்கு ஒரு ஜே!

அன்புடன்

சீதாலஷ்மி

மல்லி மணம் இங்க‌ வரக்கும் வீசுதுங்க‌.......
சிறிய‌ வயது முதலே என் கூட‌ படித்த‌ இரு தோழிகளை ரொம்ப‌ நாளுக்கு அப்புறம் நேற்று தான் சந்தித்தேன்....... மன்ம் முழுக்க‌ மகிழ்ச்சி... டக்குனு உங்க‌ ஞாபகம் தாங்க‌ வந்தது... உங்க‌ தோழி கூட‌ மறுபடி பேசினீங்களா.... முக‌ புத்தகத்திலும் சில‌ நன்மைகள் இருக்கதானே செய்யுது.....