9 மாத கர்ப்பம், எனக்கு பதில் கூறுங்கள்.

எனது கணவரின் ஆசைக்கினங்க நான் திருவண்ணாமலை சென்று வர ஆசைபடுகிறேன்,

எனக்கு மாதம் ஒன்பது முதல்வாரம், நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரலாமா,

கிரிவலத்தின் தூரம் - 22 கீ மீ

உங்களது பதிலை உடனே சொல்லுங்கள் தோழிகளே..,

நன்றியுடன்

பத்மா

9 மாத கர்ப்பம் என்று சொல்லியிருக்கீங்க. உங்களின் BP என்ன? குழந்தையின் Position என்ன? கர்ப்ப வாய்(cervix) திறக்க தொடங்கி விட்டதா? இதெல்லாம் உங்களை பரிசோதிக்கும் மருத்துவருக்கு மட்டுமே தெரியும்?அவர்களின் அலோசனை தான் முக்கியம்,எல்லாமே நார்மல் என்னும் பட்சத்தில் குடும்ப நபர்களின் ஆலோசனைக்கேற்ப்ப முடிவெடுங்கள்.

எல்லாம் நார்மல், செர்விக்ஸ் இன்னும் திறக்கவில்லை,

பத்மா தர்மராஜா

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், பொதுவாக‌ வயிற்றில் குழந்தை இருக்கும் போது நேர்த்திகடன்கள் செய்யமாட்டார்கள்.
ஏன் நெருங்கிய‌ உறவு திருமணம் என்றாலும் கூட‌ சாஸ்திர‌, சம்பிரதாயங்களில் ஈடுபடமாட்டார்கள்.
அதாவது கர்ப்பிணியின் அண்ணாவுக்கோ, தம்பிக்கோ திருமணம் என்றால், நாத்தனார் என்னும் முறைப்படி உள்ல சம்பிரதாயத்தை வேறஒருவரை வைத்தே நிறைவேற்றுவார்கள்.
இதெல்லாம் காரணகாரியம் இல்லாமல் வைத்திருப்பார்கள் என்ற‌ எண்ணம் இருந்தால் யோசியுங்கள் தோழி.
எனக்கு தெரிந்து டாக்டர்கள் கொடுக்கும் தேதியிலிருந்து தள்ளி போய் பிறக்கும் குழந்தைகளைவிட‌ குறிப்பிட்ட‌ தேதிக்கு முன்னதாகவே பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையில் அதிகம்.
ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் முன்னாடி இதெல்லாம் யாராலும் அறுதியிட்டு கூறமுடியாத‌ ஒன்று.
கோயிலுக்கு போவதை தடுக்கும் எண்ணத்துடன் இப்பதிலை எழுதவில்லை தோழி!!
நானும் தெய்வபக்தி உள்ளவள்தான். நான் கூறியதை தவறாக‌ நினைக்கவேண்டாம்.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

Thanks for your comments

பத்மா தர்மராஜா

மேலும் சில பதிவுகள்