வேர்க்கடலை குருமா

தேதி: March 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வேர்க்கடலை - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - கால் பகுதி
முந்திரி (அ) பாதாம் - 10
எண்ணெய்
புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கிவிட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தேங்காய், முந்திரியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் வேர்க்கடலையைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் அரைத்த தேங்காய் முந்திரியைச் சேர்த்து பிரட்டி இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். (விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்).
சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையான வேர்க்கடலை குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு... எனக்கும் பிடிச்சதும் கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசி மேடம் மை ஃபேவரைட் வேர்க்கடலையில் குருமா... சப்பாத்தியோட சாப்பிட ஆசையா இருக்கு. நாளைக்கு செய்துட்டு சொல்றேன்..

கலை

புதிய‌ குறிப்பு இதுவரை செய்ததில்லை, கண்டிப்பா செய்து பார்க்கிறேன்:)
வாழ்த்துக்கள் முசி :)

குக்கரில் வேக‌ வைக்கிறோமே, வறுக்காமல் செய்யக்கூடாதா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வேர்க்கடலை குருமா அழகாமன‌ எளிமையான குறிப்பாக‌ உள்ளது.செய்து பார்கிறேன். mom, வேர்க்கடலை நிலக்கடலை எல்லாமே ஒன்னுதானே,mom

Yours Lovable
Maha

புதிய‌ குறிப்பு.... கண்டிப்பா ட்ரை பண்றேன்.......

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
முதல் பதிவிர்ர்க்கு மிக்க‌ நன்றி,வனி.
செய்து பார்த்து சொல்லுங்க‌,கலை.
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க‌,வறுத்தால் தோல் உறிக்க‌ வசதியாய் இருக்ககும்.வறுக்காமலும் செய்யலாம்.அருள்.
வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி,இரண்டும் ஒன்னுதான் என்று நினைக்கிரேன்.மஹா.
செய்து பார்த்து சொல்லுங்க‌,ப்ரியா ஜெயராம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,

அருமையான‌ சத்தான‌ குருமா. ஃபோட்டோக்கள் கலர்ஃபுல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

வேர்க்கடலை எனக்கு அலர்ஜி, அதனால் சாப்பிடுவதில்லை ,நல்ல குறிப்பு .

Nalla kurippu musi. Nallarukku.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வேர்கடலை நிலக்கடலை இரண்டும் ஒன்னே தான்... டவுட்டே வேண்டாம். எங்கள் ஊரில் இதை ”கலக்கா” என்பார்கள். கேட்டவரை “கல்லக்காய்” அதாவது மண்ணில் மறைந்து கொண்டிருப்பதால் வந்த காரணப்பெயர் என்பார்கள். அது நாளடைவில் மாறி கலக்காய் ஆகிற்று. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு முசி,
நல்ல‌ குறிப்பு. நாங்க‌ பச்சைக் கடலையில் செய்வோம். வறுத்த‌ கடலையில் முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

Hmm,K thanku vani sister

குருமா செய்து சாப்பிட்டாச்சு. வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சுருந்துச்சு.. ரொம்ப நல்லா இருந்துச்சு.. குறிப்புக்கு நன்றி முசி மேடம்..

கலை

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி,சிதாம்மா.
பதிவிர்ர்க்கு மிக்க‌ நன்றி,வாணி.
ரொம்ப நன்றி,உமா.
டவுட் கிளியர்க்கு நன்றி,வனி.
செய்து பார்த்து சொல்லுங்க‌,செல்வியக்கா.
உடனே செய்து பார்த்து பதிவிட்டமைக்கு ரொம்ப‌ நன்றி,கலை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.