ஸ்டஃப்டு சப்பாத்தி

தேதி: November 23, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

தவிர்க்க இயலாத காரணங்களால், யாரும் சமைக்கலாமில் கடந்த ஒரு வார காலமாக புதிய குறிப்புகளைச் சேர்க்க இயலாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ச்சியாக குறிப்புகள் இடம்பெறவில்லை. அவ்வபோது நிறைய இடைவெளி விழுந்துவிட்டது. அதற்காக மிகவும் வருந்துகின்றோம். மீண்டும் இன்று முதல் தினம் ஒரு புதியக்குறிப்பு படங்களுடன் இடம்பெறும்.

 

கோதுமை மாவு - 2 கப்
உருளை கிழங்கு - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
குடைமிளகாய் - பாதி
எண்ணெய் - கால் கப்


 

உருளைக்கிழங்கை தனியே வேக வைத்து எடுத்து, தோலுரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி (வெந்நீர் வேண்டாம்), சிறிது எண்ணெய்யும் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை போகும் வரை 30 நொடி வதக்கவும்.
பிறகு வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், உப்பு, குடை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கை மசித்து விட்டு அதில் போட்டு 3 நிமிடம் கிளறி விடவும். மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.
ஊறிய மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக உருட்டி சற்று தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். பின்னர் அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு மசாலாவை வைக்கவும்.
சப்பாத்தியை மடித்து மசாலா வெளியே வராதவாறு மூடவும்.
மாவின் தடிமன் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் தேய்க்கும்போது மசாலா வெளியே வராது.
இப்போது மசாலா வைத்து மூடியுள்ள மாவினை மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். இம்முறை மிகவும் எச்சரிக்கையாக மிருதுவாக தேய்க்க வேண்டும். இல்லையெனில் மசாலா வெளிவந்து மாவுடன் பிரிக்க முடியாதபடி சேர்ந்துவிடும்.
தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
திருப்பிப் போட்டு, தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய்யை ஓரங்களில் இட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். சாஸ் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம்,கரம் மசாலா தூள் என்றால் என்ன? நன்றி.

THuSHI

பலவித வாசனைப் பொருட்களை அரைத்து எடுக்கப்படுவதுதான் கரம் மசாலா பொடி. சீரகம், மல்லி, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, இஞ்சிப் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிப்பத்ரி, பிரிஞ்சி இலை இவையனைத்தையும் சேர்த்து அரைத்து கரம் மசாலா பொடி செய்யலாம். சிலர் சோம்பு சேர்த்து அரைத்து செய்வர். வெறும் மிளகு, சீரகம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் மட்டும் சேர்த்து அரைத்தும் செய்வார்கள். இது பலவிதங்களில் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப) தயாரிக்கப்படுகின்றது.

வலப்பக்கம் "பொடி" என்று உள்ள தலைப்பின் கீழ் சில வகை கரம் மசாலா பொடிகள் தயாரிக்கும் விதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடைகளில் கரம் மசாலாப் பொடி என்பது தனியாகவே கிடைக்கின்றது. வாங்கி உபயோகப்படுத்தலாம்.

நன்றி அட்மின் உங்கள் கருத்துக்கு. நான் வசிக்கும் இடத்தில் மசாலா பொடி விற்பதாக தெரியவில்லை. இந்த முறையை பின்பற்றி நானே தயாரித்துக்கொள்கிறேன். நன்றி

THuSHI

அன்பு அறுசுவை டீம்,

என் மகள் சென்ற வாரத்தில் இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியும், ஆசியாவின் குறிப்பிலிருந்து, எம்டி சால்னாவும் செய்ததாகவும், மிகவும் சுவையாக இருந்ததாகவும் சொன்னாள்.

அவள் இன்னும் அறுசுவை உறுப்பினர் ஆகவில்லை, அதனால் நான் இங்கே பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி, அறுசுவை டீம்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாக்கா,மருமகளுக்கு குழந்தை பிறந்தாச்சா?

arusuvai is a wonderful website

அன்பு சாதிகா,

பேரன் பிறந்தாச்சுப்பா, ஆகஸ்ட் 16ம்தேதி பிறந்தான்.

ஷரத் ஆதித்யா என்று பெயர் வைத்திருக்கிறோம்.

நீங்க நலமாக இருக்கீங்களா? ஞாபகம் வைத்து விசாரித்ததற்கு நன்றி.

உங்க சகோதரி நலமா? நான் மிகவும் கேட்டதாக சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி மேடம்,
பேரன் பிறந்துள்ளாரா? உங்களுக்கும், பேரனுக்கும், மருமகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி மேடம்,

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

கீர்த்தி நலமுடன் இருக்காங்களா? கோவை கெட் டு கெதருக்குப் போவதைப் பற்றி நீங்க சொல்லியிருந்ததைப் பார்த்ததும், நாம எல்லாரும் சென்னை கெட் டு கெதரில் சந்தித்ததை நினைத்துக் கொண்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி