மைதா மாவு பற்றி சொல்லுங்கள்

மைதா மாவு சாப்பிடுவது நல்லதா? கெடுதியா? ஏன்? கொஞ்சம் சொல்லுங்களேன்.

உங்க கேள்வியில "மைதா மாவு சாப்பிடுவது" ங்கிறது மைதா மாவு கொண்டு தயாரித்த உணவுகள் சாப்பிடுறதைக் குறிக்குதுன்னு அர்த்தம் பண்ணிக்கிட்டு இந்த பதிலை சொல்றேன்.

கோதுமையில இருந்துதான் ஆட்டா, ரவா, மைதா எல்லாமே தயாரிக்கப்படுது. மேற்தோலோட(தவிடு) அரைச்சு எடுக்கப்படுறது கோதுமை மாவு (ஆட்டா மாவு), கொஞ்சமாத் தோல், கொஞ்சம் பெரிய சைஸ்ல பொடி செஞ்சு எடுக்கப்படுறது ரவா, மேற்தோல் இல்லாம ரொம்ப நைஸா அரைக்கப்பட்டு வர்றது மைதா. இந்த மைதா, ரவா இரண்டையுமே கெமிக்கல்ஸ் பயன்படுத்தி (bleach பண்ணி) வெள்ளை நிறமா மாத்தி கொடுக்கிறாங்க. இதுக்கு பயன்படுத்துற கெமிக்கல்ஸால சில பிரச்சனைகள் இருக்கு. இதுதான் இந்த உணவுப் பொருட்களை தவிர்க்கிறதுக்கு முக்கிய காரணமா இருக்கு.

அடுத்து, தவிட்டு பகுதி கொஞ்சம்கூட இல்லாததால, மைதாவில நார்ச்சத்து ரொம்பவே கம்மியா இருக்கும். இது செரிமானத்துக்கு பிரச்சனையா இருக்கு. இருந்தாலும் நாம சாப்பிடுற ஒரு ஐட்டத்திலேயே எல்லாச் சத்துக்களும் இருக்கணும்னு எதிர்பார்க்கக்கூடாது. பரோட்டா சாப்பிடுறப்ப அதுக்கு சைடு டிஷ்ஷா காய்கறிகள் அதிகம் உள்ள குருமா, வேற நார்ச்சத்து உள்ள பக்க உணவை சேர்த்து சாப்பிடுறப்ப இதை பேலன்ஸ் பண்ணிடலாம்.

ப்ரட், கேக், பிஸ்கட் மாதிரியான பேக்கரி ஐட்டங்கள் எல்லாமே மைதாவிலதான் தயாரிக்கப்படுது. இப்போ கோதுமை, கேழ்வரகுன்னு மற்ற மாவுகள் பயன்படுத்தியும் பேக்கரி ஐட்டம்ஸ் கிடைக்குது. ஆனா, எவ்வளவு பேர் அதெல்லாம் வாங்கி சாப்பிடுறாங்கன்னு தெரியலை. ஒரு காலத்துல உடம்பு சரியில்லேன்னா ஹாஸ்பிடல்ல ப்ரெட் சாப்பிட சொல்வாங்க. இப்பல்லாம் டாக்டர்ஸ் அப்படி சொல்ற மாதிரி தெரியலை.

சரி, தீர்வு என்ன? சாப்பிடலாமா கூடாதான்னு கேட்டா, இதைத்தான் சொல்வேன்.

பரோட்டா, நாண் மாதிரியான ஐட்டங்கள் ஹோட்டல்லயோ இல்லை வீட்டுலயோ செஞ்சு சாப்பிடுறோம். அப்படி சாப்பிடுறப்ப பரோட்டாவை கொஞ்சமா வச்சுக்கிட்டு சைடு டிஷ்ஷை அதிகமா வர்ற மாதிரி வச்சு சாப்பிட்டா செரிமான பிரச்சனை இருக்காது.

பேக்கரி ஐட்டங்கள் எல்லாமே ரொம்ப குறைவா சாப்பிட வேண்டிய ஐட்டங்கள். நீங்க என்ன வயதினர், என்ன மாதிரியான உடல் உழைப்பு இருக்குங்கிறதை பொறுத்து இந்த மாதிரி உணவுப் பொருட்களை நீங்க சேர்க்கவோ குறைக்கவோ செய்யணும். உடல் உழைப்பு குறைஞ்சாலோ, வயதானாலோ இந்த பொருட்களுக்கு குட்பை சொல்ல ஆரம்பிக்கிறது ஆரோக்கியமா வாழுறதுக்கு உதவியா இருக்கும்.

டயாபடிஸ் உள்ளவங்க மைதாவை தவிர்க்கிறது ரொம்பவே நல்லது. மைதா தயாரிப்பில பயன்படுத்துற கெமிக்கல்ஸ் இன்சுலின் சுரக்கிறதை குறைக்கிறதா சொல்றாங்க.

ஒரு நார்மலான உடல்நிலையில இருக்கிறவங்க முழுக்க முழுக்க தவிர்க்கணும்ங்கிற அவசியம் இல்லை. அளவோட அப்பப்ப சாப்பிடலாம்.

என்னுடைய சொந்த அனுபவ டிப்ஸ்; இரவு நேர தொலைதூர பேருந்து பயணங்களுக்கு எல்லாம் பரோட்டா பெஸ்ட் உணவு. நைட்டு ரெண்டு பரோட்டா சாப்பிட்டு பஸ் ஏறினா காலை வரைக்கும் பசி வராது. வயிறு கம்முன்னு இருக்கும். காலையில 6 மணிக்கு போய் சேர வேண்டிய பஸ், 9 மணிக்கு போய் சேர்ந்தாலும் அவசரம் அவசரமா டாய்லெட் தேட வேண்டிய நிலைமை உண்டாகாது.

அட்மின் உங்கள் பதில் சூப்பர். நன் இதெல்லாம் கேள்வி பட்டிருக்கிறேன். என் வீட்டில் பரோட்டா சாப்பிடவே கூடாதுனு சொல்வாங்க‌, நான் அவங்கள்ட‌ பேக்கரி ஐட்டம் எல்லாம் மைதா தானே அத‌ சாப்டுரப்ப‌ பரோட்டா ஏன் கூடாதுனு கேட்பேன். பரோட்டா மைதா என்பது மட்டும் இல்ல‌, அதிக‌ டால்டா/ எண்ணெய் இதுதான் வயிற்று பிரச்சனைக்கு காரணம். அதனால் வீட்டில் பரோட்டா செய்து தாங்கள் சொன்னது போல‌ பரோட்டாவை கொஞ்சமா வச்சுக்கிட்டு சைடு டிஷ்ஷை அதிகமா வச்சு சாப்பிட்டா செரிமான பிரச்சனை இருக்காது. நம்ம‌ ஊர் கிராமங்களில் இன்றும் வயதானவர்கள் மைதா பண்/ரொட்டி சாப்பிடுவதையே வழக்கமாக‌ வைத்து உள்ளார்கள். இப்பொழுதும் காய்ச்சல் வந்தால் பிரட், பிஸ்கட்டையே அனேகர் சாப்றாங்க‌. வெளிநாட்டினர் அதிகமாக‌ கோதுமை பிரட்டையே சாப்ராங்க‌. சாப்டுங்க‌ அடிக்கடி சாப்டாதிங்க‌, குறைவா மைதா உணவுகளை உட்கொள்ளுங்கள்.

Nice Nd validinfo

மேலும் சில பதிவுகள்