பாதாம் அல்வா

தேதி: November 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மைதா - கால் கிலோ
சீனி - ஒரு கிலோ
நெய் - ஒரு கிலோ
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு - தலா 10
உப்பு - ஒரு சிட்டிகை
ஆரஞ்சு கலர் பவுடர் - கால் ஸ்பூன்
ஏலக்காய் - 10


 

பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் எடுத்து மெல்லியதாக சீவிக்கொள்ளவும்.
மைதாவை முதலில் பரோட்டா மாவு போல் பிசைந்துக் கொண்டு, தண்ணீரை சிறிது சிறிதாக அதன் மேல் தெளித்து பிசைந்துக் கொண்டேயிருந்தால் மைதா பால் தனியாகவும் அதன் சவ்வு தனியாகவும் பிரிந்துவிடும்.
அந்த மைதா பாலை மட்டும் எடுத்து சுமார் 4 அல்லது 5 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, மேலாக நிற்கும் தண்ணீரை மட்டும் மெதுவாக ஊற்றிவிட்டு, அந்த பாலில் உப்பு, கலர் பவுடர், நசுக்கிய ஏலக்காய் அனைத்தையும் அத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் சீனியைக்கொட்டி, சுமார் 300 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
சீனி நன்கு கரைந்தவுடன், கலந்து வைத்துள்ள பாலை ஊற்றி, பாதி நெய் மற்றும் பாதியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
பிறகு மீதி நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து பால் சுண்டி அல்வா பதம் வரும்வரை நன்றாக கிளறி, நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்.
அதன் மேல் சீவிய பாதாம் பருப்பை தூவி அலங்கரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்