குக்கர் வெளி பக்கத்தில் கரி பிடித்துள்ளது

colour குக்கர் வெளி பக்கத்தில் கரி பிடித்துள்ளது,,,,அதை எப்படி சுததம் செய்வது,,,

கலர் குக்கர் - சரியாகப் புரியவில்லை.
எதுவானாலும் உடனுக்குடனே கழுவி விடுவதுதான் நல்லது. கரியோடு தொடர்ந்து பயன்படுத்தினால் பிறகு சற்று சிரமம்தான்.

முன்பு எங்கோ படித்த நினைவு - அடுப்பில் வைக்கும் முன்னால் பாத்திரத்தின் அடியில் சோப் தடவி வைத்தால் கரி பிடிக்காது என்று. நான் முயற்சி செய்து பார்த்ததில்லை. இங்கு வேறு எங்கோ இது பற்றிப் பேசி இருக்கிறார்கள் என்பதாகவும் நினைவு. தேடிப் பாருங்கள்.

ம்... வெளிப்பக்கம் தானே! எனாமல் பாத்திரமா! கலர் போகாது என்று நினைத்தால்... 'மிஸ்டர் மஸில்' பூசி ஊற வைத்து சில நிமிடங்கள் கழித்து நீர் விட்டு மெதுவே ஸ்க்ரப்பரால் தேய்த்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்