பை கொடுக்கும் கை

தேதி: March 19, 2014

5
Average: 4.3 (6 votes)

 

பழைய முழுக்கை ஷர்ட்
கத்தரிக்கோல்
பாட்கிங் / பெரிய சேஃப்டி பின்
ப்ளாஸ்டிக் ஸ்ப்ரிங் ஸ்டாப்பர் (Plastic spring stopper)
தையல் இயந்திரம்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஷர்ட்டிலிருந்து கையைத் தனியாக வெட்டி எடுக்கவும்.
படத்தில் உள்ளபடி தையல் உள்ள பக்கம் சிறிது வெட்டி நீக்கவும்.
உட்புறம் திருப்பி வெட்டிய இடத்தில் மெல்லியதாக மடித்து தைக்கவும்.
கையின் இந்த இடத்தில் நாடா ஒன்று கோர்க்கக் கூடிய விதமாக மடித்துத் தைக்கவும்.
ஷர்ட்டின் மீதியில் 50 சென்டிமீட்டர் அளவு நீளத் துண்டு ஒன்று வெட்டவும்.
அதை நாடாவாக தைத்து எடுக்கவும்.
நாடாவைக் கோர்த்து எடுக்கவும்.
நாடவின் இரண்டு முனைகளையும் சேர்த்து ஒரு முடிச்சுப் போடவும்.
வேறு ஒரு இடத்தில் நாடாவை மடித்துப் பிடித்துக் கொண்டு ஸ்டாப்பரின் உள்ளே நுழைத்து மாட்டிவிடவும்.
சுத்தமான ஷாப்பிங் பைகளைச் சுருட்டி மேலிருந்து திணித்து விட்டு, நாடாவை இழுத்துச் சுருக்கி ஸ்டாப்பரையும் இறக்கிவிடவும். உங்களுக்குப் பை தேவைப்படும் பொழுது 'கை' கொடுக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரான ஐடியா...

எல்லோரும் கைப்பை செய்வாங்க... நீங்க (ஷர்ட்டின்) கையில் பை செய்திருக்கீங்க... அதுவும் (ஷாப்பிங்) பை வைப்பதற்காக.. கண்டிப்பாக தேவைப்படும் பொழுது 'கை' கொடுக்கும் இந்தப் பை...

கலை

இதுக்கு பேரு தான் “கை பை” :P எப்படி உங்களால் இப்படிலாம் யோசிக்க முடியுது?? சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இது போல் பை வைக்க‌ சாதாரண துணியில் தைத்தேன்,ஆனால் இப்படி கையில் யொசித்தில்லை.சூப்பர் ஐடியா.நல்லாஇருக்கு,செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நான் தைத்து வைத்திருந்தது இரண்டும் கழுவிக் கழுவி புதுமை கெட்டுப் போச்சு. அன்பளிப்பாகக் கிடைத்தது தையல் விட்டுப் போச்சு. இது மகன் ஷர்ட். சும்மா ஒரு விளையாட்டு. ;)

நன்றி வனி, மூசி & கலை. :-)

‍- இமா க்றிஸ்

சூப்பர் ஐடியா, எங்க வீட்ல இந்த பையை எப்படி தான் சுத்தம் செய்தாலும், திரும்ப திரும்ப வந்து குப்பை சேர்க்கும் ஆனால் இப்ப இந்த பை கொடுக்கும் கை செய்து அதில் இந்த பைகளை அதில் போட்டு வைக்கலாம். அவசரத்திற்கு தேவைபடும் போது எடுத்து கொள்ளலாம். நன்றி இமா அக்கா.

நல்லா குண்டான கை இருக்கிற ஆட்களோட ஷர்ட்டா தேடிப் பிடிங்க. :-)))

‍- இமா க்றிஸ்

ஆமா, அக்கா நீங்க சொல்லுறது சரி தான்.

ஆஹா அட்டகாசமான ஐடியாவா இருக்கே. இமாம்மா எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க? ரொம்ப சூப்பர்

யாரும் பயந்திட்டாங்களாம்மா கிச்சன்ல கை மாட்டி இருந்ததும்.

நல்லா இருக்குங இப்படி பழைய.வீசுகிர பொருளில் கைவினை செய்தால் எவ்வளவு நல்லாருக்கும் மிக சிக்கனமான, உபயோகமான கவினை

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

குடை போல‌ பார்க்க‌ அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்

//குடை// இப்போதான் எனக்கே அது தெரியுது. ;))

‍- இமா க்றிஸ்