தலை திரும்பாமல் இருந்தால்

வணக்கம் தோழிகளே!!!

எனக்கு ஒன்பதாவது மாதம் பிறந்துள்ளது, இன்றைக்கு மருத்துவரை சந்தித்தேன், அவர் சொன்னது,

குழந்தை உட்கார்ந்து கொண்டு இருக்கு, குழந்தை தலை திரும்புவது சந்தேகம்,

எனக்கு ஒரே பயமாக இருக்கிறது, உங்கள் அனுபவங்களையும், அறிவுறைகளையும்,தலை திரும்ப உடற்பயிற்சியையும் சொல்லுங்கள்.,

பகிர்ந்து கொள்ளும் தோழிகளுக்கு எனது நன்றி

என்றும் அன்புடன்

வணக்கம் பத்மா,
கவலைபடாதீங்க பா, இன்னும் 1 மாதம் இருக்குல அதற்க்குள் தலை திரும்ப வாய்ப்புள்ளது. எனக்கு குழந்தை பிறப்பதற்கு 2 நாட்கள் முன்பு தான் பொஸிஸன் மாறியது, ஆதலால் கவலை வேண்டாம்.
பொஸிஸன் மாறவில்லை என்றால் சிஸ்சேரியன் செய்யவேண்டி வரும், குழந்தை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பிறக்கின்ற எந்தவிதமும் சிறந்தது தான். இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்யும் எந்த உடற்பயிற்சியும் சரியானது அல்ல, மனதை சந்தோசமாக வைத்திருந்து நல்லபடியாக குழந்தையய் பெற்று எடுக்க என் பிரத்தனைகளும், வாழ்த்துக்களும்.

முதல் குழந்தைக்கு சில நேரங்களில் வலி தொடங்கும் போது கூட தலை திரும்பும் , ஒவ்வொருத்தரின் உடலை பொருத்தது.தினமும் நடைப் பயிற்ச்சி நல்லது. வீட்டு வேலைகளை நிங்களே செய்யுங்கள்.கடினமான பொருட்களை தூக்கி விடாதீர்கள்.

ஹாய் பத்மா, வாணி சொல்வது மிக மிக சரி நடை பயிற்சியும்,வீட்டு வேலையும் செய்வது ரொம்ப நல்லது பா

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

hai padma innum one month irukulla so dont wry enakum appadithan irunthuchu ippo normal delivery agi one month aguthu unga baby movement panniteythana iruku so eppo venalum thalai keela varum nenga walking ponga veedu kootunga kuninthu nimirnthu ungalal mudintha work pannunga ok all the best think positive

நன்றி தோழிகளே!!!

இன்று டாக்டரிடம் சென்று scan செய்து பார்த்தோம், குழந்தை தலை திரும்பி விட்டது,

பதில் கூறிய அனைவருக்கும் நன்றி

scan report -ல இருப்பது cephalic presentation posterior loa

பத்மா தர்மராஜா

ennoda akkavum eppadi tha iruthuchu pa. so avagaluku deliveryku 1week munnadi thala thirumbuchu. so unnalukum sikiram thirum pidum ok don't worry. nega kavala padama santhosama iruthigana pothum. v2kulleye walking poga ellam nalla padiya nadakum

Hi mam,ennoda wife ku 9 months,delivery date first kuduthadhu 11th march 2019.ippo DOCTOR scan report (19.02.2019) ah parthuttu,kulantha head right side la yum,spine mela yum iruku,adhavathu kulanthai "Kidai mattama na position la iruku (transverse lie) wait panni parkalam nu sonnanga".idhu suga prasavam aaga vali unda

Hi mam,ennoda wife ku 9 months,delivery date first kuduthadhu 11th march 2019.ippo DOCTOR scan report (19.02.2019) ah parthuttu,kulantha head right side la yum,spine mela yum iruku,adhavathu kulanthai "Kidai mattama na position la iruku (transverse lie) wait panni parkalam nu sonnanga".idhu suga prasavam aaga vali unda

பிரசவத்தின் பின் தாயும் சேயும் சுகமாக இருப்பார்களானால் சிசேரியனாக இருந்தாலும் அது சுகப்பிரசவம் தான், அதுதான் சுகப்பிரசவம். வேதனைகளைஅனுபவிக்கப் போறது நீங்க இல்ல; உங்க மனைவி. அவருக்கு அடுத்தபடி உங்க குழந்தை. டாக்டர் சொல்றதன் படி கேளுங்க. நீங்களா எந்த முடிவும் எடுக்க வேண்டாம் மோகன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்