மரவள்ளிக்கிழங்கு புட்டு

தேதி: March 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மரவள்ளிக்கிழங்கு - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கைத் துருவிக் கொள்ளவும்.
துருவிய கிழங்கைப் பிழிந்து பாலைத் தனியாக எடுத்துவிடவும்.
பிறகு கிழங்குடன் உப்புச் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
புட்டுக்குழலில் முதலில் ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவலைப் போடவும்.
பிறகு 4 தேக்கரண்டி கிழங்குத் துருவல் போடவும்.
இதேபோல் தேங்காய் துருவல், கிழங்கு துருவல் என மாற்றி மாற்றி புட்டுக் குழல் நிரம்பும் வரை போட்டு மூடிவைத்து 10 - 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்ததும் புட்டுக் குழலில் இருந்து புட்டை வெளியே எடுக்கவும்.
புட்டுக் குழல் இல்லாதவர்கள் கிழங்கு துருவலுடன் தேங்காய் துருவல் கலந்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கலாம்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார். சர்க்கரையுடன் சூடாகப் பரிமாறவும்.

நான் மூங்கிலால் செய்யப்பட்ட புட்டுக் குழலைப் பயன்படுத்தியுள்ளேன்.

இக்கிழங்கினை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... எனக்கு புட்டை விடவும் புட்டு செய்ய பயன்படுத்தின குழல் பிடிச்சிருக்கு ;) அனுப்பி வெச்சுடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் குழல் மிகவும் பிடித்தது. குறிப்பும் அருமை. வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

புட்டும் படங்களும் சூப்பர் வாணி. நானும் இப்படித்தான் செய்வேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆஹா!புட்டு செய்த‌ விதம் அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாணி மூங்கில் குழல் அழகா இருக்கு :) புட்டும் அழகா செய்து இருக்கீங்க‌, இட்லி பானையில் செய்து பார்க்கிறேன், வாழ்த்துக்கள் வாணி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு வாணி,
புட்டு பார்க்க‌ அழகா இருக்கு. நான் இட்லி பானையில் செய்வேன். தாளிச்சு காரமாகவும் செய்வேன். குழல் நல்லா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

வாணி அக்கா புட்டு குழல் ரொம்ப‌ நல்லாவும் இயற்கையாவும் இருக்கு. இந்த‌ குழல் நீங்க‌ செய்ததா..

கண்டிப்பா இதை டிரை பண்ணனும்... சூப்பரா இருக்கு புட்டு... குழலும் அழகு.. புல்லாங்குழல் மாதிரி இது மூங்கில் புட்டுக்குழலா....

மரவள்ளிக் கிழங்கு புட்டு சூப்பர் பா, எங்க வீட்ல மரவள்ளிக் கிழங்கு அடை செய்வோம் இப்ப உங்க குறிப்பை பார்த்தவுடன் புட்டு செய்யலாம் இருக்கேன்.

புட்டும், புட்டுக் குழலும் சூப்பரா இருக்கு..

கலை

வனி எனக்கு புட்டு,புட்டுகுழல் இரண்டும் வேணும்,சூப்பர்

Be simple be sample

வாணி புட்டு நன்றாக இருக்கிறது. செய்து பார்த்து விட்டு பதிவிடுகிறேன். மூங்கில் புட்டு குழல் அழகாக இருக்கிறது. பிழிந்த பாலை என்ன செய்வது?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

என்ன வனி, என் பெலகீனம் உங்களுக்கும் தெரிஞ்சுப் போச்சா? உறவினர் முதல் தோழிகள் வரை வீட்டுக்கு வர்ரவங்க யாராவது என் பொருட்கள் நல்லா இருக்குன்னு சொன்னால் அடுத்த நிமிடம் அந்த பொருளை அவங்களுக்கே கொடுத்து விடுவேன், உங்களுக்கும் கொடுத்துட்டாப் போச்சு,ஆனா இப்போ இல்ல ஊருக்கு வரும் போது.

மஞ்சு
உங்களின் பின்னூட்டம் பார்த்ததில் மகிழ்ச்சி
மிக்க நன்றிங்க

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி உமா. இது என் அம்மாவிடமிருந்து நான் படித்த குறிப்பு

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

பதிவிற்க்கும், வாழ்த்துக்கும் நன்றி அருள். செய்து பாருங்க.ரொம்ப நல்லா இருக்கும்

மிக்க நன்றி காரமான புட்டும் ரெசிப்பி அனுப்பியிருக்கேன் செல்வி மேடம்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி, இல்லப்பா, கடையில வாங்கினது

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றிங்க.ஆமா இது மூங்கிலால் செய்யப் பட்ட குழல் தான்
பிரியா

செய்து பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும், வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி பாலபாரதி

வருகைக்கும்,பதிவிற்க்கும் மிக்க நன்றி கலை

செய்து அனுப்பிட்டா போச்சு, பதிவிற்க்கு நன்றி ரேவதி , என் பெயர் வாணி

அவசியம் செய்து பாருங்க தாமரை, நான் குறிப்பில் சொல்ல மறந்துட்டேன், பிழிந்த பாலுடன் சீனியும்,நெய்யும் சேர்த்து அல்வா கிளறிடலாம்
நன்றி