தெரிந்தவர்கள் உதவுங்கள் please....

நான் தற்போது 7 மாத கர்ப்பமாகவுள்ளேன் என்னுடைய 6 மாத ஸ்கேனில் Lower end of placenta is touching internal os. என்று underline இட்டு காட்டி உள்ளார் மருத்துவர். இதனால் எங்கள் குழந்தைக்கு எதாவது பிரச்சனை வருமா... நான் இப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், நடைபயிற்சி செய்யலாமா? என்னவருடன் சேரலாமா? தெரிந்தவர்கள் உதவுங்கள் please....

இதை எல்லாம் தோழிகளிடம் கேட்பதை விட அதை அடிக்கோடிட்டு காட்டிய மருத்துவரை அனுகி கேட்டுத்தெரிந்து கொள்வதே நல்லது. அவர் தான் அப்படின்னா என்ன, அதனால் உங்கள் உடம்புக்கு எந்தவகையில் என்ன தேவை என்றெல்லாம் சொல்ல இயலும். நன்றாக நினைவு வையுங்கள்... கர்ப்பம் என்பது எல்லோருக்கும் ஒன்று போல அமைவதில்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. அவங்க அவங்க உடம்பு வாகு, உடல் நலம் எல்லாம் சார்ந்தது. அதனால் சங்கடப்படாம மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேட்டேன் தோழி அதற்கு மருத்துவர் வெயிட் தூக்க வேண்டாம், தொப்புள் கொடி இறங்கி உள்ளது என்றார்... அதுதான் பயமாகவுள்ளது... எங்கள் இருவரின் குடும்பத்திற்கும் இது தான் முதல் குழந்தை...

மேலும் சில பதிவுகள்