டெடி பியர்

தேதி: March 26, 2014

5
Average: 5 (4 votes)

 

உல்லன் நூல் - விருப்பமான இரண்டு நிறங்களில்
பேனா - ஒன்று
கத்தரிக்கோல்
ஃபேப்ரிக் க்ளு
சாட்டின் லேஸ் (சிறியது)
கண் (அ) மிளகு - 2

 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். நான் ஊதா மற்றும் வெளிர் பச்சை நிற உல்லன் நூலை எடுத்துள்ளேன்.
டெடி பியரின் உடல் பகுதிக்கு பச்சை நிற உல்லன் நூலை 10 மீட்டர் அளவிலும், அதே நிறத்தில் அதன் தலை பகுதிக்கு 6 மீட்டர் அளவிலும் வெட்டி வைக்கவும். ஊதா நிற உல்லன் நூலை 5 மீட்டர் அளவில் 2 துண்டுகள் காது பகுதிக்கும், 2 துண்டுகள் கால் பகுதிக்கும் தனித்தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பச்சை நிற உல்லன் நூலில் ஒரு சாண் அளவில் வெட்டியெடுத்து பேனாவுடன் சேர்த்து வைக்கவும். (நூல் பேனாவின் நீளவாட்டில் இருக்கும்படி வைக்கவும்). அதன்மீது 10 மீட்டர் அளவில் வெட்டி வைத்துள்ள பச்சை நிற உல்லன் நூலை சுற்றிக் கொள்ளவும். (இவ்வாறு சுற்றும் போது சாண் அளவு நூல் உள்பக்கம் இருக்கும்).
சுற்றிய பிறகு உல்லன் நூலிருந்து பேனாவைத் தனியாக எடுத்துவிடவும்.
இப்போது சாண் அளவுள்ள நூலின் இருபுறத்தையும் இறுக்கமாக இழுத்து ஒன்று சேர்த்து முடிச்சுப் போடவும். (நூலை இறுக்கியதும் படத்தில் உள்ளவாறு வளையம் போல இருக்கும்).
முடிச்சு போட்ட பிறகு வளையத்தின் நடுவில் கத்தரிக்கோலால் வெட்டிவிடவும். (வெட்டிய பிறகு உருண்டை வடிவில் இருக்கும்).
இதே முறையில் 4 ஊதா நிற உல்லன் நூல் துண்டுகளையும் உருண்டை வடிவில் தயார் செய்து வைக்கவும். (ஊதா நிறத்திலுள்ள உருண்டைகள் சிறியதாக இருக்கும்).
ஃபேப்ரிக் க்ளூ வைத்து தலையுடன் உடல் பகுதியை ஒட்டிவிடவும். பிறகு காது மற்றும் கால் பகுதியையும் க்ளூ வைத்து ஒட்டவும்.
கண்ணுக்கு 2 மிளகை க்ளூ வைத்து ஒட்டிக் கொள்ளவும். சிறிய சாட்டின் லேஸில் போவ் செய்து கழுத்து பகுதியில் ஒட்டிவிடவும். எளிமையாகச் செய்ய கூடிய அழகான டெடி பியர் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டெடி பியர் சூப்பர். இது மாதிரி செய்து குழந்தைகளுக்கு கிப்டா கொடுக்கலாம்

டெடி அழகா இருக்கு. :-) பார்த்ததும் பளிச்சென்று ஒரு ஸ்டார் எரிஞ்சுது. ;) நானும் செய்திருக்கிறேன் இது.

இது போல்தான் எப்பொழுதும் செய்வேன். இப்போ சமீப காலமாக பென்சிலை விட்டு வேறு ஒரு ஈஸி டெக்னிக்குக்கு மாறி இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

டெடி பியர் அட்ராக்டிவ் கலரில் அழகா இருக்கு...

கலை

எனது கைவினை குறிப்பை அழகாக‌ எடிட் செய்து வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,குழந்தைகளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்த்ததும் பாராட்டும் உங்க‌ அன்பிர்க்கு நன்றி.என்ன‌ உங்களோட‌ அந்த ஈசி டெக்னிக்?செய்து குறிப்பு அனுப்புங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அழகான் டெடி. கலர் கம்பினேஷன் சூப்பர். ஸ்கூல் படிக்கும் போது க்ராஃப்ட் க்ளாஸ் கூட சொல்லி தந்திருக்காங்க முசி இப்போ மறந்தே போச்சு உங்க கைவினை பாத்ததும் நியாபகம் வந்துடுச்சு, செய்து பார்க்கனும்.

பதிவிக்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி,செய்து பார்த்து குட்டிஸ்க்கு கிப்டா கொடுங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இதை அப்படியே ஃப்ரேம் ப‌ண்ணி தொங்க‌ விடலாம்.ஃபோட்டோ மாதிரி .
இது போல‌ பாத்திரம் துலக்கும் ந்ய்லான் ஸ்க்ரப்பர் வைத்தும் செய்யலாம்.
கலர் காம்பினேசன் அருமை வாழ்த்துக்கள் முசி

அழகாய் இருக்கு... நான் சின்ன பிள்ளையில் பள்ளியில் பண்ணிருக்கேன். மறந்து போச்சு இதெல்லாம் இப்போ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிவிர்க்கு நன்றி,ஐடியாவும் நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு நன்றி வனி,நேரம் கிடைத்தால் செய்து பாருங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Teddy Romba cute musi :) congrats :)

Kalai

மிக்க‌ நன்றி கலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.