ஈஸி மீன் ரோஸ்ட்

தேதி: March 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

மீன் - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைக்க:
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 2 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மீனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் மீனைச் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேகவிடவும். (இடையிடையே பிரட்டிவிடவும்).
மீன் வெந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கிவிடவும்.
டேஸ்டி & ஈஸி மீன் ரோஸ்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஜோரா இருக்குங்க மீனு... அடுத்த முறை மீன் வாங்கும் போது இந்த முறையில் செய்துட்டு சொல்றேன் உமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீன் ரோஸ்ட் சூப்பர் , நான் சீக்கிரம் முயற்ச்சிக்கிரேன். இது என்ன மீன் உமா ?

நல்லா செய்துஇருக்கிங்க‌,படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு மிக்க நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கு நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.
”ஜோரா இருக்குங்க மீனு” மரியாதையெல்லாம் பலமா இருக்கே வனி

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வாணி. இங்க இந்த மீனை தலபத்ன்னு (Thalapath) சொல்லுவாங்க. இதுவும் வஞ்சிரம் போல முள் இல்லாத மீன் வகையை சேர்ந்தது

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மிக்க நன்றி முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,
வித்தியாசமான‌ மீன் ரோஸ்ட். அடுத்த‌ முறை மீன் வாங்கும் போது ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

”ங்க” நான் எப்போதும் சேர்ப்பது தானே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிவுக்கு மிக்க நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

5ஸ்டார் போட்டு விருப்பபட்டியலிலும் போட்டாச்சு :) மீன் பார்க்கவே அழகா இருக்கு உமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றி செல்வி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இன்று எங்க வீட்டில் உங்கள் மீன் ரோஸ்ட் தான். வித்தியாசமான சுவை. மிகவும் நன்றாக இருந்தது... நன்றி....

ஹாய் உமா. உங்கள் குறிப்பு மிகவும் அறுமை.இந்த டிஷுக்கு எந்த மீன் நன்றாக இருக்கும்??

நேற்று இந்த மீன் ரோஸ்ட்தான் என்க வீட்ல உமா, அருமையா இருந்திச்சு,சுவையான குறிப்பிற்க்கு நன்றி