20 வாரங்களில் கால் வீக்கம்

20 வாரங்களில் கால் வீக்கம் .

நான் 20 வது வாரத்தில் விமானத்தில் இந்தியா சென்றிருந்தேன். அதில் இருந்து கால் வீக்கமும் வலியும் இருக்கிறது. அதிக தூரம் நடக்க முடியவில்லை. கால் வீக்கத்தை குறைக்க வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள். நான் மருத்துவரிடமும் பரிசோதித்து விட்டேன். இது தானாக சரியாகிவிடும் என்று சொல்கிறார். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

கால் வீக்கத்திற்க்கு தினமும் மாலையில் வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுங்கள், அல்லது வெதுவெது பான நீரை காலில் ஊற்றலாம் வீக்கம் கொஞ்சம் குறையாலம். தூங்கும் போது வீக்கமான இடத்தில் தைலம் போட்டு தேய்க்கலாம்.

உட்காரும் போது காலை உயர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு நீர் அருந்துங்கள். மேலே சகோதரி சொன்ன பதிலையும் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் மீனா ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணிர் சுட வைத்து அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அதில் கால் வைத்தால் இதமாக இருக்கும் வீக்கம் குறையும் pa .இரவு தூங்குவதற்கு முன் இதை செய்ங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.சால்ட் அதிகம் சேர்துகாதிங்க.

நீங்கள் சொன்ன முறைகளை நான் செய்து பார்க்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்