
இவரைப்பற்றி ஏற்கனவே செல்லப்பிராணிகள் இழையில் எழுதியுள்ளேன். ஆனால் இப்பொழுது புகைப்படத்துடன் பகிரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு நாள் அந்தி சாயும் மாலைவேளையிலே என் அம்மாவீட்டில் அமைதியாக சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருந்த இவனை(ரை) என் பையரும், பொண்ணரும் புடிவாதமாக அழைத்துக்கொண்டு வந்தனர்.
அழைத்து வந்து ஒரு நல்ல நாளிலே 'டிப்பு' என நாமகரணம் சூட்டப்பட்டு அதன் படியே அழைக்கப்படார்.
தவறிக்கூட நாயை நாய் என விளிக்கக்கூடாது என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை.
அதிலிருந்து நாயர் கடை பார்த்தால் கூட முகத்தை திருப்பிக்கொள்வேன்.
ஒருவேளை வாய்தவறி உச்சரித்துவிட்டால் போச்சு.
உங்களுக்கு அப்ப டிப்புவ புடிக்கல இல்ல, அவன அம்மாயிவீட்டுக்கே திருப்பி அனுப்பிடலாம்னு நினைக்கிறீங்க அப்படித்தானே?!!
அடக்கடவுளே இதென்ன எனக்கு வந்த சோதனை?
இல்ல சாமீ நானெதுக்கு அப்புடி நினைக்கிறேன், எனக்கும் அவனை றொம்ப றொம்ப புடிச்சிருக்கு, நாபோய் இப்புடிலாம் நெனப்பனா??

கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து வந்து இறங்கிய டிப்பு(அப்ப பேர் வெக்கல) (நாய்க்குட்டினும் சொல்லப்புடாதாம்) கீழே இறங்கிய உடன் முதல்வேளையாக 'உச்சா" போனார்.
என் பையரும், பொண்ணரும் ஒரே மகிழ்ழ்சி ஆராவாரம். ஏனா றொம்ப சுத்தக்கார பயலாம். கார்ல இருக்கும்போது கன்ட்ரோலா இருந்திருக்காராம்.
எம்பொண்ணர் மடில எங்கம்மா வீட்டு ஒரு நல்ல மெத்தை விரிப்பை போட்டு அதுக்கு மேல சுகமான தூக்கத்தில வந்ததில அவர் எல்லாத்தையும் மறந்துவிட்டார் போலிருக்கு. நல்லவேளை மெத்தைய தூக்கிட்டு வரல.
அது பாட்டுக்கு வண்டிச்சாலைல சிவனேனு விளையாடிட்டு இருந்துச்சு. அங்க பாத்ரூம் பிரச்சினை எல்லாம் இல்லை. எவ்விடமும் பாத்ரூம்தாம், எவ்விடமும் விளையாட்டு மைதானம்தான், எவ்விடமும் படுக்கை அறைதான் செடிகளுக்கு இடையில ஈரத்தில குழிபறச்சு படுத்துறங்கலாம்.
அத்துணை சுதந்திரத்தையும் ஒரே நாளில் இழந்துவிட்டார் டிப்பு.

வந்ததிலிருந்து அவருக்கு ஏகோபித்த பாதுகாப்பு. தினமும் பள்ளி வாகனம் வந்தால் குறு குறு வென கேட்க்கு கீழயே பார்த்திட்டு இருந்துவிட்டு, ஒரே பாய்ச்சலில் கேட்டை நோக்கி ஓடுவார்.
என் பொண்ணர் அடிக்கடி அவரிடம்(டிப்பு) உறவு முறை சொல்லித்தான் உரையாடுவார்.
டிப்பு, அக்காவும் அண்ணாவும் ஸ்கூலுக்கு போய்ட்டு வாரோம். (தான் இதுவரை அண்ணா என்று அழைத்ததில்லை, டிப்புவுக்கு உபதேசம் தாங்கமுடியாது).
அடிக்கடி செருப்பு, ஷூக்களெல்லாம் டிப்புவிடம் கடிவாங்கும், அதற்கும் 'ஏண்டா கடிச்ச பெரியண்ணா(என்னவர்) வந்தா திட்டப்போறாங்க.
டிப்பு ஓடிடு பெரியக்கா வாராங்க(நானு)...
ஊருக்கு போனால் அங்கங்கே பிஸ்கட்ஸ் போட்டு வைத்துவிட்டு, அவரின் உணவு பாத்திரத்தில் சாதம் பிசைந்து லேசாக ஒரு அட்டை வைத்து மூடிவிட்டு செல்வோம்.
அழகாக எடுத்து சாப்பிட்டு இருப்பார். வீட்டிற்கு வெளியாட்கள் யார் வந்தாலும் இவரின் குரைப்பு சப்தம் கேட்டு பயந்துவிடுவர்.
குளிக்க மட்டும் ஆகவே ஆகாது. வாரம் ஒருமுறை குளிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும்.
மிகவும் ஆக்ரோஷமானவர். ஏதேனும் ஊறிக்கொண்டு வந்தால் உடனே காட்டிக்கொடுத்துவிடுவார்.
ஒருமுறை இரவு 1 மணிக்கு நல்லவர் ஒருவர் படம் எடுத்துக்கொண்டு, வாசலுக்கு வந்திருக்கிறார்.
இவர் போட்ட சப்தத்தில், ஊறிச்சென்று தண்ணி மீட்டர் தொட்டிக்குள் விழுந்துவிட்டார்.
இவரின் சப்தம் கேட்ட கூர்க்கா, அனைத்தையும் கவனித்துவிட்டு பெல் அடிக்கவும் போய் பார்த்தால் 6 அடி நல்லவர் நிலவொளியில் கோபமாக படம் காட்டினார்.
எங்கள் வீட்டிற்கு அருகில் மாநகராட்சி மிருககாட்சி சாலை மருத்துவர் ஒருவர் வசித்து வந்தார்.
டிப்புவுக்கும் அவர்தான் மருத்துவர்.
அதனால் போன் நம்பர் இருக்கவே, அழைத்தோம், ஆட்களை வைத்து பிடித்துசென்றனர்.
பூச்சட்டிக்கு இடையில் ஒருவர் ஒளிந்து இருப்பதையும் காட்டி கொடுத்து இருக்கிறார்.
மிகவும் தைரியசாலியான இவர், சிலவருடங்கள் மட்டுமே எங்களுடன் இருந்தார்.
சரியான தடுப்பூசிஊசி, பூச்சி மருந்துகள் கொடுத்தும் கூட இவரின் தோலில் ஏற்பட்ட நோயைக்குணப்படுத்தமுடியவில்லை.
மருத்துவ பரமரிப்புக்கு வரும் மருத்துவரிடம் ஆரம்பம் முதலே சண்டைதான், அதனால் கேட்டுக்கு வெளியே மருத்துவர் நின்று கொள்வார், இவரை உள்ளே விட்டு கொஞ்சமாக கேட்டருகில் வரவழைத்து ஊசி போடவேண்டும்.
இல்லையேல் கடித்துவிடுவார்.
ஒரு சிங்கத்தை வளர்ப்பது போலவே இருந்தது.
நாளாக நாளாக நோயின் கடுமை அதிகரிக்கவும், அவரின் கோபமும் அதிகரித்தது.
குழந்தைகளின் நலன் கருதி ஒருநாள் ஆட்களை வரவழைத்து அனுப்பிவிட்டோம்........
உணவிடும்போது என்னைத்தவிர யாரையும் அனுமதிக்கமாட்டேன், ஏனெனில் ஒரே மூச்சாக போட்டுவிட்டு திரும்பிவிடவேண்டும், அதே இடத்தில் நின்றாலோ, இல்லை திரும்பி பார்த்தாலோ போச்சு அவ்வளவுதான்.
இன்று வரை செல்லப்பிராணி ஆசையே போய்விட்டது. நிறைய எழுத தோணியது, ஆனால் எழுத முடியவில்லை, போகும் போது அவன் பார்த்த பார்வை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை.
Comments
டிப்பு
படிக்க எனக்கும் எங்கள் எல்லா செல்லங்களும் மனதில் வந்து போனார்கள். டிப்பு அழகாக இருந்திருக்கிறார்.
- இமா க்றிஸ்
அருட்செல்வி
அருமையான பதிவு டிப்பு மிகவும் அழகாக உள்ளது. டிப்பு வை பத்தி படிக்கும் போது ரொம்ப இன்ரெஸ்ட்டா இருந்து. கடைசியில் டிப்பு இல்லைனு சொன்னதும் வருத்தமாக உள்ளது.
அருட்செல்வி
நல்ல பதிவு,டிப்பு எங்க மனசிலேயும் நிற்கிரார்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
டிப்பு
அன்பு அருட்செல்வி,
செல்லங்கள் வளர்க்கும் போது நல்லா இருக்கும். அதைப் பிரியும் போது மனசு கிடந்து தவிக்கும். லவ்பேர்ட்ஸ்கே நான் அவ்வளவு அழுதேன். எங்கப்பா இறப்பதற்கு முன் அம்மா வீட்டில் இருந்த டீனுவை அப்படித்தான் கொண்டு விட்டாங்க. தாங்க முடியலை.
எப்படித்தான் தாங்கிட்டீங்களோ!
அன்புடன்,
செல்வி.
அக்கா நான் சிவ லக்ஷ்மி.
அக்கா நான் சிவ லக்ஷ்மி. எனக்கு உங்க feelings புரிகிரது. Enga Vitulaium unga tip madiri JERRY (PUG) irukku. Rompa Pasama Irukum.
Arul
என் கணவருக்கும், மகளுக்கும் பெட் என்றால் பிரியம்,எனக்கு அவ்வளவு பொறுமையில்லங்க.
உங்க டிப்பு பற்றி சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.
அருள்
ம்ம்... பெட் என்றாலே அப்படித்தான். சந்தோஷமா இருக்க மாதிரி வருத்தமும் தருவாங்க. எங்க வீட்டில் இப்ப இருக்க நாய்குட்டிக்கு நான் சாப்பாடு கூட போட்டதில்லை, கண்டாலே ஓடுவேன்... ஆனால் அவனுக்கு உடம்பு சரியில்லைன்னா நான் தான் முதல்ல அழுவேன். எப்படித்தான் அவங்க மேல அந்த பாசம் வருமோ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருள் அக்காங்,
பதிவும் படங்களும் ரொம்ப நல்லாயிருக்குங்க. . டிப்பு அழகா இருக்கார்.
நட்புடன்
குணா
செல்வி
டிப்பு கம்பிரமாக இருக்காரு,பிரிவு யாரா இருந்தாலும் கஷ்டம்தான் நிஜமாகவே.உங்களூக்கும் எவ்வ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்ல.
Be simple be sample
அருளு
ஒரு முறை என் செம்பூத்து பறவை இறந்ததற்கு நான் செய்த ஆர்ப்பாட்டத்தை பார்த்து அம்மா பெட்ஸ் இனி இல்லைனு சொல்லியும் நான் உங்க டிப்பு போலவே அச்சு அசல் நாய் குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்தேன். மின்ட்டு எனவும் பெயர் வைத்து 10 நாளில் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் அப்றம் பைபாஸ் சர்ஜரி என யாருமே வீட்டில் தங்க முடியாமல் வேறு வழியின்றி என் ட்ரைவரையே எடுத்து போய் வளர்க்க சொல்லிட்டேன்.. :(.. மின்ட்டு நியாபகம் வந்துடுது...
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
இமா
ஆமாங்க இமா டிப்பு கொள்ளை அழகா இருந்தார். வீட்டைச்சுத்தி குதிரையின் குளம்பொலி போல் ஒலியெழுப்பிக்கொண்டு ஓடுவான். மறக்கமுடியாதவன்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
பாரதி
பாரதி கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி. இன்னும் வருத்தம் குறையாது டிப்புவை நினைத்தால்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
முசி
முசி பிளாக்கில் தங்களின் பதிவு, ஆச்சர்யமாக உள்ளது. டிப்பு தங்களையும் இங்கே அழைத்து வந்துவிட்டான் பாருங்கள். மிக்க நன்றி தோழி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
செல்விக்கா
ஆம் அக்கா, இந்த பதிவினை எழுதும் போது அவனை அனுப்பிய அன்று இருந்த அதே மனநிலை, அந்த காட்சிகள் மனதில் திரையிட்டுச்சென்றது. வார்த்தைகளால் சொல்லமுடியாத நினைவுகள் அவை :(
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சிவலக்ஷ்மி
மிக்க நன்றி சிவலக்ஷ்மி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாணி
ஆம் வாணி நிறைய பொறுமை தேவை இவர்களை வளர்ப்பதற்கு. எல்லா இடமும் சுத்தம் செய்து திரும்பி பார்த்தால் எதையாவது கடித்து இழுத்துனு ஏக களேபரம் பண்ணி இருப்பான். அப்பப பொறுமை இழக்கவேண்டி இருக்கும். மிக்க நன்றி வாணி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வனி
வனி நாம் வீட்டை தனியாக விட்டுசெல்கிறோம் என்ற எண்ணமே ஏற்படாது. ஒரு பெரிய காவலாளி இருக்கிறார் என்னும் நிம்மதியுடன் செல்லலாம். திரும்பி வரும்வரை எப்படி இருக்கானோனு மனஓரத்தில ஓடிட்டே இருக்கும், வந்த உடன் பாசமழை பொழியும் காட்சியை மறக்கவே முடியாது. மிக்க நன்றி வனி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
குணா
குணா பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரேவதி
ரேவ்ஸ் நீங்கள் சொல்வது மிகச்சரி, கம்பீரநடைபோட்டுதிரிவான். வீட்டிற்கு வரும் பால்காரர் பயந்து போய் அவனுக்கு வைத்தபெயர் வேட்டையன். பதிவிற்கு மிக்க நன்றி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ரம்ஸ்
ரம்ஸ் உங்க பதிவு படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்களும் பறவை ப்ரியையா. கருத்து பதிவிற்கு மிக்க நன்றி ரம்ஸ்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.